பாரீசின் மிகப்பெரிய உணவுப் பொருட்கள் வழங்கும் மார்க்கெட்டில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து.!

பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மிகப்பெரிய உணவுப் பொருட்கள் வழங்கும் ருங்கிஸ் மார்க்கெட்டில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பாரீஸ் முழுவதும் கரும்புகை சூழந்து காணப்பட்டது. விபத்துப் பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுதிய பின் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். காயம், உயிர் இழப்புகள் குறித்து உடனடியாக தகவல் இல்லை. இந்த மார்க்கெட்டில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பிரான்ஸ் மற்றும் உலகின் … Read more

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு | சகோதரனின் நினைவிடத்தில் தனது கூந்தலை வெட்டி எறிந்து அரசை எதிர்த்த சகோதரி

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் கலாசார காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட தனது சகோதரனின் உடலின் மீது தனது கூந்தலை வெட்டி எறிந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இளம் பெண் ஒருவர். ஜாவத் ஹேதரி என்ற அந்த இளம் பெண்ணின் சகோதரர் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது நினைவிடத்தில் ஜாவேத் ஹேதரி மற்றும் சில பெண்கள் திரண்டனர். அப்போது பெண்கள் அனைவரும் நினைவிடத்தில் ரோஜாப்பூக்களை வீசி ஒப்பாரிவைத்து துக்கத்தை வெளிப்படுத்தினர். ஜாவேத் மட்டும் ஒரு … Read more

வங்கதேசத்தில் படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி| Dinamalar

டாக்கா : வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில், கோவிலுக்கு சென்று கொண்டிருந்த எட்டு குழந்தைகள், 12 பெண்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கிய பலரை தேடும் பணி நடந்து வருகிறது.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பஞ்சகரா மாவட்டத்தில் வசிப்போர் நேற்று மகாளய அமாவாசை விரதம் முடித்து, போடேஸ்வரி கோவிலுக்கு படகில் சென்றனர். கொரோட்டா ஆற்றில் சென்ற அந்த படகில் குழந்தைகள், பெண்கள் உட்பட 70 பேர் பயணித்தனர். நடு ஆற்றில் சென்ற போது படகு … Read more

அண்டை நாடுகளுக்கு ஓடும் ரஷ்ய இளைஞர்கள்

மாஸ்கோ: ரஷ்யாவில் கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்து விடுவர் என்ற பயத்தில், இளைஞர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யா தாக்குதலை துவக்கியது. ஏழு மாதங்கள் ஆகியும் போர் நீடித்து வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யா கைப்பற்றிய பல பகுதிகளை மீட்டுள்ளது. இதனால், உக்ரைனை முழுமையாக கைப்பற்ற திட்டமிட்ட ரஷ்யாவின் கனவு நனவாவதில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. உக்ரைனை கைப்பற்றும் வரை போர் … Read more

சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டு பணிகள் தொடக்கம்

பீஜிங், சீனாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராகவும், அதிபராகவும் ஜின்பிங் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஒருவர் 10 ஆண்டுகள் மட்டுமே தலைவராக (அதிபர்) இருக்கும் வகையில் கட்சி விதிகள் உள்ளன. அந்தவகையில் ஜின்பிங்கின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைய உள்ளது. எனவே புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேசிய மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந்தேதி நடைபெறுகிறது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் 3-வது முறையாக … Read more

தென் கொரியாவில் அமெரிக்க போர் கப்பல்; வட கொரியா ஏவுகணை சோதனையால் பதற்றம்| Dinamalar

சியோல் : ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக கிழக்காசிய நாடான தென் கொரியாவுக்கு அமெரிக்க போர் கப்பல் வந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வட கொரியா நேற்று ஏவுகணை சோதனை நடத்தியதால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே கடுமையான போர் பகை நிலவி வருகிறது. வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இதனால், அந்நாடு தென்கொரியா மற்றும் அமெரிக்காவை எதிரி நாடுகளாக கருதுகிறது. ஐ.நா., சபையின் தடை மற்றும் உலக … Read more

கமலா ஹாரிஸ் தென்கொரியா செல்லவுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை

சியோல், கிழக்கு ஆசிய நாடான வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவே வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்ற வேண்டுமென அதன் அண்டை நாடான தென்கொரியாவும், தென்கொரியாவின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவும் முயற்சித்து வருகின்றன. பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் இதை எட்ட வடகொரியாவுக்கு, தென்கொரியா மற்றும் அமெரிக்கா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. … Read more

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்க்கு கொரோனா பாதிப்பு

மாட்ரிட், ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ்க்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை அவரே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். மேலும் அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் தொடர்ந்து பணியாற்ற போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் 60 வயதை கடந்தவர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு இன்று 4-வது ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இந்த சூழ்நிலையில், அந்நாட்டு பிரதமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் இருந்து திரும்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு … Read more

கனடாவை பந்தாடிய 'பியோனா' புயல்: ஜப்பான் பயணத்தை ரத்து செய்தார் ஜஸ்டீன் ட்ரூடோ

ஒட்டாவா, அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ புயல் கனடா நோக்கி நகர்ந்ததையடுத்து, இது கனடா வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக இருக்கும் என்று அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் கனடாவின் கிழக்கு பகுதிகளை ‘பியோனா’ புயல் நேற்று முன்தினம் பந்தாடியது. மணிக்கு 179 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சூழன்றடித்தது. இந்த புயலால் நோவா ஸ்கோடியா, நியூ … Read more

தீவிரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு: இலங்கையில் அரசுக்கு எதிராக பேரணி நடத்திய 84 பேர் கைது

கொழும்பு: இலங்கையில் தீவிரவாத தடுப்பு சட்டத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்திய 84 போராட்டக்காரர்களை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டம் நடைபெற்றதால், அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் பதவி விலகினார். இதையடுத்து, புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். ஆனாலும் அங்கு அரசுக்கு எதிரான போராட்டம் … Read more