கோழிக்கறி ஆர்டர் செய்த நபருக்கு வந்த எலும்புத் துண்டுகள்.. சாப்பிட்டுவிட்டதாக கூறி டெலிவரி பையன் மன்னிப்பு கடிதம்..!

ஆன்லைனில் பொறித்த கோழிக்கறிக்கு ஆர்டர் செய்த நபருக்கு, வெறும் எலும்புகள் வந்துள்ளன. டேமியன் சான்டர்ஸ் என்ற நபர், பசித்ததால் ஆன்லைனில் பொறித்த கோழிக்கறிக்கு ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அதில் பொறித்த கோழிக்கறி துண்டுகளுக்கு பதில் எலும்புகளும், அதிக பசி ஏற்பட்டதால் அதை தாம் சாப்பிட்டு விட்டதாக கூறி, மன்னிப்பு கேட்டு டெலிவரி பையன் எழுதி வைத்த துண்டுசீட்டும் இருந்துள்ளது. இக்காட்சியை வீடியோவாக பதிவிட்டு சமூகவலைதள பக்கத்தில் டேமியன் சான்டர்ஸ் … Read more

10 நாகை மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

கொழும்பு: கடந்த ஆக.,22 ம் தேதி, எல்லை கடந்து வந்ததாக, தமிழகத்தை சேர்ந்த, 10 நாகை மாவட்ட மீனவர்களை இலங்கை அரசு கைது செய்தது. இந்நிலையில் இன்று(செப்.,06) கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 10 பேரையும் இலங்கை திருகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு: கடந்த ஆக.,22 ம் தேதி, எல்லை கடந்து வந்ததாக, தமிழகத்தை சேர்ந்த, 10 நாகை மாவட்ட மீனவர்களை இலங்கை அரசு கைது செய்தது. இந்நிலையில் இன்று(செப்.,06) கைதாகி … Read more

பாலியல் குற்றவாளிகள் வசிக்க ஆடம்பர வீடுகளை கொண்ட ‘தனி’ கிராமம்!

உலகில் தனித்துவம் நிறைந்த பல கிராமங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். மருத்துவர்கள் அதிகம் வாழும் கிராமம் அல்லது வழக்கறிஞர்கள் அதிகம் உள்ள கிராம், அல்லது விளையாட்டு வீரர்களுக்கு புகழ்பெற்ற கிராமம் என பல விதமான கிராமங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது போன்ற  தகவலை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது உங்களுக்கு சற்று விசித்திரமாகத் தோன்றும், ஆனால் அது உண்மைதான். பாலியல் குற்றவாளிகளுக்காகவே, அமெரிக்காவின் இந்த கிராமம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.  … Read more

பிரிட்டனின் புதிய இரும்புப் பெண்மணி லிஸ் ட்ரஸுக்கு காத்திருக்கும் சவால்கள்

லண்டன்: பிரிட்டனின் 56-வது பிரதமராகி இருக்கிறார் கன்சர்வேடிவ் கட்சியின் லிஸ் ட்ரஸ். மேலும் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற போட்டி கடந்த ஒருமாதமாக தீவிரமாக நடந்து வந்தது. இதில் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸுக்கும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும் இடையே நடந்த இறுதிப் போட்டியில் லிஸ் ட்ரஸ் 57.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ரிஷி சுனக்குக்கு 42.6 சதவீத வாக்குகள் … Read more

லண்டனில் திருடப்பட்ட கார் பாகிஸ்தானில் மீட்பு

கராச்சி: பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் திருடப்பட்ட சொகுசு கார் பாகிஸ்தானின் கராச்சி நகரில் மீட்கப்பட்டு உள்ளது. பிரிட்டனை சேர்ந்த பென்ட்லி நிறுவனம் பென்ட்லி முல்சானே ரக கார்களை தயாரிக்கிறது. இந்த வகை கார் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் விற்கப்படுகிறது. பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் அண்மையில் பென்ட்லி முல்சானே கார் திருடுபோனது. இதுதொடர்பாக அந்த நாட்டு போலீஸார் விசாரணை நடத்தி பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு கார் கடத்திச் செல்லப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து பிரிட்டிஷ் அரசு … Read more

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளை திரும்பப் பெற குழு அமைத்தது இலங்கை அரசு

கொழும்பு: இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் வெடித்ததில் இருந்து அந்நாட்டின் மிகப்பெரிய இன சிறுபான்மையினரான தமிழர்கள் பாதுகாப்புக்காக தமிழகம் வரத்தொடங்கினர். இலங்கை தமிழர்களில் சுமார் 12 சதவீதம் பேர் தென்னிந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அங்குள்ள தமிழர்கள் சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு வசதியாகவும் இலங்கை தமிழர்களின் மீள்குடியேற்றத்தை திறம்பட மேற்கொள்ளவும் குழு ஒன்றை இலங்கை அதிபரின் செயலாளர் சாமன் ஏகநாயக … Read more

“கன்சர்வேடிவ் கட்சிக்காரர்கள் ஒரே குடும்பம்": தோல்விக்கு பிறகு பேசிய ரிஷி சுனக்

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தேர்தலில் தோல்வியை தழுவிய சில நிமிடங்களுக்குப் பிறகு, ரிஷி சுனக் திங்கள்கிழமை (செப்டம்பர் 5, 2022) புதிதாக நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸிற்கு ஆதரவாக ஒன்றுபட்டு நிற்குமாறு கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். ரிஷி சுனக் 60,399 வாக்குகளைப் பெற்றார். அவரது சக கட்சித் தலைவர் ட்ரஸ் 81,326 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ரிஷி சுனக், தனது தோல்விக்கு பிறகு, “கன்சர்வேடிவ் கட்சிக்காரர்கள் ஒரே குடும்பம்” என்று … Read more

சீனாவில் நிலநடுக்கம் 7 பேர் உயிரிழப்பு

சிச்சுவான்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 7 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சீன அரசின் ஊடகமான சிஜிடி என் கூறியதாவது. சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் மதியம் 1 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது. லூடிங் நகரத்தை மையமாகக் கொண்டு பூமிக்கடியில் 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்துக்கு சிச்சுவான் தலைநகர் செங்குடுவில் 7 பேர் உயிரிழந்தனர். பல … Read more

கனடாவில் மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் 10 பேர் உயிரிழப்பு

ஒட்டாவா: கனடாவில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 13 இடங்களில் நிகழ்ந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் பழங்குயின மக்கள் அதிகம் வசிக்கும் ‘ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன்’ என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பழங்குடியின சமூகத்தினர் மத்தியில் நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இதில் இந்த கிராமத்திலும் அதன் அருகில் உள்ள … Read more

வாங்க வங்கதேச பிரதமரே ! ராணுவ அணிவகுப்பு மரியாதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்திய வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு உறவு மேம்பாடுகள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு அரசு முறை பயணம் வந்துள்ள ஷேக்ஹசீனாவை பிரதமர் மோடி ஜனாதிபதி மாளிகையில் வரவேற்றார். இங்கு முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். இந்த வரவேற்பு முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய ஹசீனா; இந்தியா வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாட்டு … Read more