‘சுட்டுக் கொல்லப்படலாம் என்ற பயத்தில் உள்ளோம்’ – மியான்மரில் பிணைக் கைதிகளாக இருக்கும் இந்தியர்கள் பதற்றம்
கொச்சி: டேட்டா என்ட்ரி வேலை, நல்ல சம்பளம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் இந்தியாவி லிருந்து 300 பேர் வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில், கேரளாவைச் சேர்ந்த 30 பேரும் அடங்குவர். இவர்களை ஒரு கும்பல் தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு கடத்திச் சென்று சைபர் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்துவதாக தகவல் வெளியானது. இந்தியர்கள் தங்களை காப்பாற்ற கோரி வெளியிட்ட வீடியோ மூலம் இந்த கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, மத்திய அரசு அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. … Read more