உய்குர் முஸ்லிம் விவகாரம்: இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் அசந்து போன சீனா!

Xinjiang Uighur Muslim: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக சீனாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டினால் சர்வதேச நாடுகள் அதிர்ந்து போனது, சீனாவுக்கோ அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தியாவும் சீனாவும், கிழக்கு லடாக்கில் மோதி வருகின்றன. எல்லையில் ஆயுதங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வீரர்களும் எப்போதும் மோதலுக்கு தயாராக நிற்கும் நிலையும், இந்தியாவை அவமானப்படுத்தும் வாய்ப்பை ஒருபோதும் சீனா தவறவிட்டதில்லை என்பதும் சரித்திரம். ஆனால், இந்த மிகப்பெரிய கருத்து வேறுபாடுகளுக்கும், பிணக்குகளுகும் … Read more

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரசான்சின் பெண் எழுத்தாளரான ஆனி எர்னாக்சிற்கு அறிவிப்பு

இந்தாண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரசான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான ஆனி எர்னாக்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எ வுமன்ஸ் ஸ்டோரி, எ மேன்ஸ் பிளேஸ், சிம்பிள் பேசன் உள்ளிட்ட எர்னாக்ஸ் எழுதிய புத்தகங்கள் புகழ்பெற்றவையாகும். பாலினம், மொழி உள்ளிட்டவற்றில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக எர்னாக்ஸ் தொடர்ந்து எழுதி வந்ததாகவும், 30க்கும் மேற்பட்ட இலக்கிய படைப்புகளை அவர் இயற்றியுள்ளதாகவும் நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.   Source link

24 குழந்தைகள் உட்பட 37 பேர் பரிதாப பலி:தாய்லாந்தில் மாஜி போலீஸ் அதிகாரி வெறி| Dinamalar

பாங்காக் : தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர், குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்து வெறித்தனமாக சுட்டதில், 24 குழந்தைகள் உட்பட, 37 பேர் பலியாகினர். இதைத் தவிர, அவர் வெறித்தனத்தின் உச்சத்தில் தன் குழந்தையையும், மனைவியையும் சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். தாய்லாந்தின் வடக்கு மாகாணமான நோங் புவா லம் பு என்ற இடத்தில், 2 – 5 வயதுள்ள குழந்தைகளை பராமரிக்கும் மையம் செயல்பட்டு … Read more

பிரான்சின் பெண் எழுத்தாளருக்குஇலக்கியத்துக்கான நோபல் பரிசு| Dinamalar

ஸ்டாக்ஹோம், நடப்பாண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 82 வயது பெண் எழுத்தாளர் ஆன் எர்னாக்சுக்கு அறிவிக்கப்பட்டது.உலகின் மிக உயரிய நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது. அந்த வகையில், 2022-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆன் எர்னாக்சுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சுயசரிதை … Read more

வேதியியலுக்கான நோபல் பரிசு – பெண் விஞ்ஞானி உட்பட 3 பேர் தேர்வு

ஸ்டாக்ஹோம்: இந்தாண்டுக்கான வேதியிய லுக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் சுவீடிஸ் அகாடமி ஆஃப் சயின்சஸ் நோபல் பரிசு தேர்வுக் குழு நேற்று தெரி வித்துள்ளதாவது: 2022-ம் ஆண்டின் வேதியிய லுக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி கரோலின் ஆர்.பெர்டோஸி, மார்டன் மெல்டால் மற்றும் கே. பெரி ஷார்ப்லெஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. “கிளிக் கெமிஸ்ட்ரி” மற்றும் பயோ-ஆர்தோகனல் வேதியியல் … Read more

ஓய்வை அறிவித்தார் மெஸ்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பியூன்ஸ்அர்ன்ஸ்: 2022 கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடருடன் ஒய்வு பெறப்போவதாக அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி அறிவித்துள்ளார். 2022ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் வரும் நவ., 21 முதல் டிச., 18 வரை நடக்கிறது. இத்தொடரின் பைனல், கத்தாரின் தேசிய தினத்தில் (டிச., 18) நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் அர்ஜென்டினாவின் நட்சத்திர நாயகன் லையோனல் மெஸ்சி 35, நேற்று தனது ஒய்வை அறிவித்தார். கத்தார் … Read more

அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் – உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் சமீபத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசிய பிரதமர் மோடி, இது போருக்கான காலம் அல்ல, தாக்குதல்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கூறினார். உக்ரைனின் 4 பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஐ.நா பாதுகாப்பு சபையில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. உக்ரைனின் ஜபோரிஷ்ஷியா அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் தற்போது போர் நடைபெறுகிறது. அணுமின் நிலையத்தின் மீது … Read more

தென் கொரிய எல்லையில் சுற்றியவட கொரிய போர் விமானங்கள்| Dinamalar

சியோல், தொடர்ந்து இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்திய நிலையில், தென் கொரியாவுடனான எல்லை அருகே ஒரே நேரத்தில் 12 போர் விமானங்களை வட கொரியா அனுப்பியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கிழக்காசிய நாடுகளான வட கொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையே கடும் மோதல் உள்ளது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு உள்ளது. இதற்கிடையே, அணு ஆயுதங்களை வட கொரியா குவித்து வருவதற்கு தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.ஆனால், இதற்கெல்லாம் கவலைப்படாமல், … Read more

காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலி: இந்திய நிறுவனத்திடம் விசாரிக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவு

ஜெனீவா: ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கெட்டுபோன மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவைத் தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து … Read more

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு: 18 பேர் பலி| Dinamalar

மெக்சிகோ சிட்டி-வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மேயர் உட்பட, 18 பேர் பலியாகினர். மெக்சிகோ நாட்டின் தென் மேற்கு பகுதியில் சான் மிகுவல் டோடோலபன் நகரம் உள்ளது. இங்கு போதை பொருள் கடத்தல் கும்பலின் ஆதிக்கம் நிலவுகிறது. இந்நிலையில், இங்குள்ள சிட்டி ஹால் என்ற கட்டடத்தின் மீது மர்ம நபர்கள் நேற்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அங்கு கூடியிருந்த மக்கள் சிதறி ஓடினர். இதில், 18 பேர் பலியானதாக போலீஸ் … Read more