தைவான் ஜலசந்தியில் பயணித்த 2 அமெரிக்கப் போர்க் கப்பல்களை கண்காணித்து வருவதாக சீன ராணுவம் அறிவிப்பு!

தைவான் ஜலசந்தியில் பயணித்த இரண்டு அமெரிக்கக் கப்பல்களை கண்காணித்து வருவதாக சீனாவின் ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்திற்கு பிறகு முதன்முறையாக அமெரிக்க கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமையன்று அப்பகுதியை கடந்தன. அவ்வழியாக அமெரிக்கக் கப்பல்கள் வருவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இந்த இரண்டு கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து வரும் சீன ராணுவம், தனது படைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கட்டளையிட்டுள்ளது. எந்த வகையான ஆத்திரமூட்டும் செயலையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.  … Read more

அமெரிக்காவில் கட்டடத்துக்குத் தீ வைத்து, தப்பியோடிய ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு.. 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் கட்டடத்துக்குத் தீ வைத்த ஒருவன், தப்பியோடிய மக்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர். 40 வயதான ஆப்பிரிக்க அமெரிக்க கொலையாளி கருப்பு ஆடை அணிந்து வந்து தாக்குதல் நடத்திய நிலையில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் அவன் கொல்லப்பட்டான்.. Source link

இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஃபோர்டு கார் ரூ.6.92 கோடிக்கு ஏலம்

லண்டன்: பிரிட்டிஷ் இளவரசி டயானா பயன்படுத்திய கார் ரூ.6.92 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. பிரிட்டனின் பிரபுக்கள் பரம்பரையின் ஸ்பென்சர் குடும்பத்தை சேர்ந்த டயானா கடந்த 1981-ம் ஆண்டில் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1996-ம் ஆண்டில் சார்லஸுடன் விவாகரத்து ஏற்பட்டது. கடந்த 1997 ஆகஸ்ட் 31-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஏற்பட்ட கார் விபத்தில் டயானா உயிரிழந்தார். கடந்த 1985 முதல் 1988-ம் ஆண்டு வரை ஃபோர்டு … Read more

9.49 லட்சம் வீடுகள் சேதம்: பாகிஸ்தான் மழை, வெள்ளத்தில் உயிரிழப்பு 1,000-ஐ தாண்டியது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மழை, வெள்ளம் தொடர்பான விபத்தில் சிக்கி 24 மணி நேரத்தில் மட்டும் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜூன் 14 முதல் இதுவரை 388.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது வருடாந்திர சராசரியைவிட 190% அதிகம். இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு … Read more

கோடீஸ்வர மகனை பார்க்க சென்றாலும் கார் கேரேஜில்தான் தூக்கம்: எலான் மஸ்க் தாய் தகவல்

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸில் மகன் வீட்டுக்கு சென்றால் கார் நிறுத்துமிடமான கேரேஜில்தான் தூங்குவேன் என்று உலக கோடீஸ்வரர் எலான் மஸ்கின் தாய் மயி மஸ்க் (74) தெரிவித்துள்ளார். “தி சண்டே டைம்ஸ்” பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரனாக எனது மகன் (எலான் மஸ்க்) இருந்தாலும் அதில் அவனுக்கு பெரிய நாட்டமில்லை. உண்மையை சொன்னால் டெக்சாஸில் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் குடியிருப்புக்கு சென்றால் கூட நான் கார் நிறுத்தும் கேரேஜ் இடத்தில்தான் தூங்குவது … Read more

உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்லும் மாணவர்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ் -மருத்துவ படிப்பை முடிக்க, உயிரை பணயம் வைத்து இந்திய மாணவர்கள் உக்ரைன் செல்கின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடன உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், அங்கு பல்வேறு இடங்களில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். போர் துவங்கி ஆறு மாதங்களுக்கு மேலாகிய நிலையிலும், உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் வாயிலாக மருத்துவம் … Read more

சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும்: அமெரிக்க கடற்படை தலைவர் கில்டே தகவல்

புதுடெல்லி: தனது ஆட்சிப் பரப்பை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சீனாவுக்கு பதிலடி கொடுக்க, இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என அமெரிக்க கடற்படை தலைவர் கில்டே தெரிவித்துள்ளார். திபெத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, தைவானையும் ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தென்சீன கடல் பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, விமானம் தாங்கி கப்பல்களை தயாரித்து வருவதுடன் ‘நீல நீர்கடற்படை’யையும் சீனா உருவாக்கி வருகிறது. மேலும், இலங்கைக்கு அனுப்பிய … Read more

டயானா பயன்படுத்திய கார்: ரூ.6.11 கோடிக்கு ஏலம்| Dinamalar

லண்டன் : பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய கார், 6.11 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் இளவரசி டயானா, 1997 ஆகஸ்ட் 31ல் பிரான்ஸ் நாட்டின் பாரிசில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது 25வது நினைவு தினத்தையொட்டி, 1980களில் அவர் பயன்படுத்திய கருப்பு நிற ‘போர்டு எஸ்கார்ட் ஆர்.எஸ்.டர்போ’ கார்’, நேற்று முன்தினம் ஏலத்துக்கு விடப்பட்டது.இதில் உலகம் முழுதுமுள்ள டயானாவின் அபிமானிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அந்த … Read more

லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மோதல்13 பேர் பலி; 95 பேர் படுகாயம்| Dinamalar

கெய்ரோ : லிபியாவில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில், பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்; 95 பேர் பலத்த காயமடைந்தனர்.வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும், கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் இடையில் கடும் சண்டை நடந்து வருகிறது.இந்த மோதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹைதம் தஜோரியின் விடுதலை பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும், அப்தில் கானி அல … Read more

நொய்டா : இரட்டை கோபுர கட்டிடங்கள் இன்று தகர்ப்பு

நொய்டாவின் இரட்டை கோபுர கட்டடங்கள் இன்று வெடி வைத்துத் தகர்க்கப்படுகின்றன. இதனையொட்டி அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புகை மற்றும் தூசு மாசு ஏற்படலாம் என்பதால் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 2004 ஆம் ஆண்டு நொய்டாவின் செக்டார் 93A இல் ‘சூப்பர்டெக் எமரால்டு கோர்ட்’ ஹவுசிங் சொசைட்டி கட்டப்பட உத்தேசிக்கப்பட்டது.40 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரங்களின் அமைப்பு நிர்ணயிக்கப்பட்டது.இந்த இரட்டை கோபுரங்கள், நொய்டா பகுதியின் புவியியல் சார்ந்த நிலைக்கு ஏற்றதாக கட்டப்படவில்லை என்றும் , கட்டுமானம் சட்டவிரோதமானது … Read more