கொரோனா மரணங்கள் நிலவரம்..! – உலக சுகாதார நிறுவனம் கூறும் அந்த நல்ல செய்தி..!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருகின்றன என உலக சுகாதார தலைவர் பேட்டி. உலக மக்களை கொரோனா பெருந்தொற்று பெரிதும் ஆட்டி படைத்து வருகிறது. இதனால் உலகம் முழுதும் உள்ள மக்கள் பெரும் அச்சத்திற்கும் பாதிப்பிற்கும் உள்ளானார்கள். இது உலகம் முழுவது பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. இதன் விளைவாக உலகம் எங்கிலும் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இது மக்களின் பொருளாதார சூழலையும் பெரிதும் பாதித்தது. இந்த நிலையில் … Read more

ஹெட்போன் மாட்ட தடுமாறிய பாக்., பிரதமர்: பார்த்து சிரித்த புடின்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாமர்கண்ட்: உஸ்பெகிஸ்தானில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்த பேச்சுவார்த்தை ஆரம்பித்த போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் காதில் இருந்த ஹெட்போன் கீழே விழுந்தது. அதனை மாட்ட ஷெரீப் தடுமாறிய நிலையில் உதவியாளரை வந்து அதனை சரியாக மாட்டினார். இதனை பார்த்து கொண்டிருந்த புடின் சிரிப்பை அடக்க முடியாமல் கட்டுப்படுத்தியவர் ஒரு கட்டத்தில் சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதனை பார்த்து பாகிஸ்தானியர்கள், அவர்கள் பிரதமரை … Read more

Saturn vs Science: சனி கிரகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சனியின் வளையங்கள்

சனி கிரகத்தில் வாயு மிக அதிக அளவில் இருப்பதால் அது வாயு கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது 26.7 டிகிரி சாய்வாக உள்ளது மற்றும் டைட்டன் எனப்படும் அதன் மிகப்பெரிய நிலவுகளில் ஒன்று கிரகத்தை விட்டு நகர்கிறது என்று அறிவியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, சனியின் வளையங்கள் எவ்வாறு உருவானது என்பதை வெளிப்படுத்துகிறது. 100-200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பனிக்கட்டி நிலவு (கிறிசாலிஸ் என்று பெயரிடப்பட்ட நிலவு) … Read more

சுவீடனில் ஆட்சியை இழந்தது ஆளும் கட்சி

ஸ்டாக்ஹோம்: சுவீடனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்று கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியை அமைக்கிறது. சுவீடனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் சமூக ஜனநாயக கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மைக்கு 175 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 173 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தற்போது ஆட்சியைப் பிடித்துள்ளது. வெறும் 3 இடங்கள் வித்தியாசத்தில் ஆளும் … Read more

இந்தியாவை உற்பத்தி மையமாக்க விருப்பம்: பிரதமர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாமர்கண்ட்: கோவிட் பெருந்தொற்று மற்றும் உக்ரைன் பிரச்னை காரணமாக, விநியோக சிங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவை உற்பத்தி மையமாக்க விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கோவிட் பெருந்தொற்றில் இருந்து உலகம் தற்போது மீண்டு வருகிறது. கோவிட் மற்றும் உக்ரைன் பிரச்னை காரணமாக சர்வதேச விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவை, உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறோம். தற்போது இந்தியாவில் 70 … Read more

சீன அதிபரை சந்திப்பாரா பிரதமர் மோடி ? – 2019 தாக்குதலுக்கு பின் முதல்முறையாக…

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SOC) உச்சிமாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில், பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப். 15) மாலை விமானம் மூலம் அங்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அந்நாட்டின் தலைவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, பின்னர் மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த தனிப்பட்ட கூட்டத்திலும் கலந்துகொண்டார். இன்று (செப். 16) மதிய உணவிற்கு பிறகு, பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், உஸ்பெகிஸ்தான் … Read more

ரஷ்ய அதிபரை கொல்ல முயற்சி: அதிர்ச்சி தகவலால் பரபரப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கொலை முயற்சியில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகிஉள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்து, இன்று வரை நீடித்து வருகிறது. போர் துவங்கியதில் இருந்தே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல் நிலை குறித்து, பல்வேறு தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில், புடினை கொல்ல முயற்சி நடந்ததாக, அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, ‘ஈரோ வீக்லி … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உஸ்பெகிஸ்தான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று உஸ்பெகிஸ்தான் சென்றார். கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் … Read more

இந்தியாவின் வளர்ச்சியில் அமெரிக்கா முக்கிய கூட்டாளி பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-‘இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில், அமெரிக்கா முக்கிய கூட்டாளியாக உள்ளது. இதில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது’ என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். அமெரிக்காவின் வாஷிங்டனில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்புடைய, 75 அமைப்புகள் இணைந்து, நேற்று நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடின. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது:நம் நாட்டின் 75வது சுதந்திர தினம், அமெரிக்காவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது, … Read more

எந்தவொரு வல்லரசு போட்டியிலும் இலங்கை பங்கேற்காது – ரணில் விக்ரமசிங்கே உறுதி

கொழும்பு, சீன உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ சமீபத்தில் இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இதற்கு இலங்கை அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் இலங்கையில் உள்ள இந்திய-சீன தூதரகங்களுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் எந்தவிதமான போரிலும் இலங்கை அங்கம் வகிக்காது என அந்த நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். தேசிய ராணுவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக … Read more