இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்| Dinamalar

கொழும்பு: வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (ஆக.,25) காலை நடைபெற்றது. இலங்கை, நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான நல்லூரான் கோயில் மஹோற்சவம் கடந்த 02ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று இலங்கை பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற விழாவில் முன்னதாக, கோயில் வசந்த மண்டவத்தில் விஷேச அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக உள் பிரகாரம் வலம் வந்து தேரில் … Read more

சாதித்தது ஜெர்மனி… சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கம்

பெர்லின்: சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில்கள் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்ற செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். அத்தகைய முன்னெடுப்பில்தான் ஜெர்மனி இறங்கியுள்ளது. ஆம், உலகிலேயே ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் பயணிகள் ரயில் சேவையை முதல்முறையாக ஜொ்மனி தொடங்கியுள்ளது. ஜெர்மனியின் லோயர் சாக்சோனியில் புதன்கிழமை அத்திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லோயர் சாக்சோனியில் இயங்கி வந்த 14 டீசல் ரயில்களுக்கு மாற்றாக ஹைட்ரஜன் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அல்ஸ்டாம் நிறுவனம், எல்பே-வெசர் ரயில்வே ஆகியவை இணைந்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்யாத … Read more

புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரதமர்

பின்லாந்து நாட்டின் பிரதமராக சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சன்னா மரின், கடந்த 2019-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் பதவியை ஏற்ற போது அவருக்கு வயது 34. உலகின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். கடந்த வாரம் சன்னா மரின் தனது வீட்டில் நண்பர்கள் மற்றும் பிரபலங்களுடன் உற்சாகமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் அவருக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இது தனது தனிப்பட்ட வாழ்க்கை எனவும், தனது … Read more

உக்ரைனின் சுதந்திர தினத்தன்று ரஷ்யா தாக்குதல்: 22 பேர் பலி

கீவ்: உக்ரைனின் சுதந்திரத் தினமான நேற்று ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் பலியாகினர். 31-வது உக்ரைன் சுதந்திர தின விழா நேற்று எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாக கொண்டாடப்பட்ட நிலையில், ரஷ்யா நடத்திய தாக்குதலால் உக்ரைன் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்தத் தாக்குதல் குறித்து கீவ் நகர் பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, “நேற்று சுதந்திர தினத்தையொட்டி அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. அப்போது சாப்லின் நகரில் ரஷ்ய பாதுகாப்புப் படை இரண்டு முறை தாக்குதல் நடத்தியது. இதில் … Read more

டெக்சாஸ் வறண்ட ஆற்றில் தென்பட்ட 11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் கால்தடங்கள்

வாஷிங்டன்: டெக்சாஸில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில், அங்கு வறண்ட ஆறு ஒன்றில் 11 கோடி வருடங்களுக்கு முந்தைய டைனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க மாகாணங்களில் ஒன்று டெக்சாஸ். கடற்கரைகளை ஓட்டி அமைந்துள்ள இம்மாகாணத்தில் டைனோசர்களின் கால்தடங்கள் முன்னரே கண்டறியப்பட்டிருந்தன. இதன் காரணமாக டெக்சாஸில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி டைனோசர் பள்ளத்தாக்கு பூங்கா என்றழைக்கப்படுகிறது. இந்த நிலையில், வறட்சி காரணமாக டெக்சாஸ் மாகாணத்தில் பல ஆறுகள் வறண்டு உள்ளன. இதில் டைனோசர் … Read more

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் கோவிட்| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் இன்று(ஆக.,25) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கடந்த ஆக.,15ம் தேதி கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு குணமடைந்தார். இந்நிலையில் இன்று(ஆக.,25) ஜில் பைடனுக்கு மீண்டும் கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெற்கு கரோலினாவுக்கு ஜோ பைடனுடன் சென்று வந்த நிலையில் ஜில் பைடனுக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. வாஷிங்டன்: அமெரிக்க … Read more

இன்றைய தொழிலாளி நாளை முதலாளி: முதல்வர் ஸ்டாலின் பேச்சு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருப்பூர்: நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி ஆகலாம். அதேபோல் இன்றைய முதலாளி , நாளைய தொழிலாளியாகலாம் என்பது திருப்பூருக்கு பொருந்தும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். திருப்பூரில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மண்டல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, 168 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை துவக்கி வைத்தார்.நிகழ்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அதிகம் உள்ள … Read more

உக்ரைனுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு மேலும் 3 பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவி – ஜோ பைடன் அறிவிப்பு!

உக்ரைனுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு மேலும் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த ராணுவ உதவி வான்பாதுகாப்பு அமைப்புகள், அதிநவீன பீரங்கிகள், டிரோன்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்களை உள்ளடக்கியது என்றும், இது உக்ரைன் நீண்ட காலத்துக்கு தன்னை தற்காத்து கொள்வதை உறுதி செய்யும் என்றும் பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைனின் சுதந்திரத்திற்கு வாழ்த்து தெரிவித்த அவர், உக்ரைன் மக்கள் தங்கள் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான … Read more

பிரதமரின் கடமைகளை செய்யத் தேவையில்லை: தாய்லாந்து பிரதமரை சஸ்பெண்ட் செய்த நீதிமன்றம்

புதுடெல்லி: தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை அந்நாட்ட்டு நீதிமன்றம் பதவியில் இருந்து விலகியிருக்க சொல்லிவிட்டது. பதவியில் இருப்பதற்கான தாய்லாந்து நாட்டின் சட்டத்தை அவர் மீறிவிட்டது தொடர்பான விவகாரத்தை இறுதி செய்யும் வரை, தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பிரதமராக செயல்படமாட்டார் என்று தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. பிரயுத்தின் பதவிக் காலத்தை வரம்புக்குட்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க போதுமான காரணம் உள்ளது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பிரதமர் பதவியில் இருந்து பிரயுத் … Read more

குரங்கம்மை எச்ஐவி கொரோனா என பல வைரஸ்களால் தாக்கப்பட்ட உலகின் முதல் மனிதன்

3 Virusus Attack a Man: உலகில் முதன்முறையாக மூன்று கொடூர வைரஸ்கள் ஒருவரை தாக்கியுள்ளது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயினில் இருந்து திரும்பிய இத்தாலியர் ஒருவருக்கு 9 நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி மற்றும் உடலில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அறிகுறிகள் தோன்றிய மூன்று நாட்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இத்தாலிய ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள இந்த வழக்கு, உலகில் இதுவரை பதிவாகாத வைரல் தாக்குக்தல் சம்பவம் … Read more