எரிசக்தி இறக்குமதி செலவு அதிகரிப்பு | அடுத்த தலைமுறை அணு உலை தயாரிக்க வேண்டும் – ஜப்பான் பிரதமர் வலியுறுத்தல்

டோக்கியோ: ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இதனால் புகுஷிமா அணு மின் நிலையம் கடுமையாக சேதமடைந்தது. செர்னோபில் விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய அணு உலை பேரழிவாக இது அமைந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பல அணு உலைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அந்நாட்டில் ஏற்கெனவே 33 அணு உலைகள் செயல்பாட்டில் இருந்த நிலையில், இப்போது 10 மட்டுமே செயல்படுகின்றன. இதனால் எரிசக்தி தேவை இறக்குமதி மூலம் பூர்த்தி … Read more

சீனாவின் தரம் குறைந்த பிவிசி இறக்குமதியைத் தடுத்துநிறுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை!

புற்றுநோயை உண்டாக்கும், சீனாவின் தரம் குறைந்த பிவிசி இறக்குமதியைத் தடுத்துநிறுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குடிநீர்க் குழாய்களைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருளான பிவிசி பிசின் சீனாவில் இருந்து பெருமளவு இறக்குமதி செய்யப்படுகிறது. 6 ஆயிரம் டன்னாக இருந்த மாத இறக்குமதி, தற்போது ஒரு லட்சம் டன்னாக அதிகரித்திருப்பதாகவும், இந்த பிவிசி பிசின் ஜலஜீவன் திட்டத்திற்கான குடிநீர்க் குழாய்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பிவிசி விலையை 27 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளநிலையில், இறக்குமதி … Read more

போர் விமான இன்ஜின்களை வாங்க சீனாவை தவிர்த்து ரஷ்யாவிடம் நேரடியாக பேசும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: போர் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்க ரஷ்யாவிடம் பாகிஸ்தான் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 6 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில் சீனாவிடமிருந்து பாகிஸ்தான் வாங்கிய ஜேஎஃப்-17 ரக போர் விமானங்களுக்கான இன்ஜின்களில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு பழுதாகின்றன. காஷ்மீரின் பாலகோட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லை தாண்டி … Read more

உக்ரைனில் போருக்கு இடையே சுதந்திர தின கொண்டாட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்-ரஷ்யா போர் துவங்கி, ஆறு மாதங்கள் முடிந்து உள்ள நிலையில், நாட்டின் சுதந்திர தினத்தை உக்ரைன் மக்கள் அமைதியான முறையில் வீடுகளில் கொண்டாடினர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்து உள்ளது. பிப்., 24ம் தேதி ரஷ்யப் படைகளின் தாக்குதல் துவங்கியது. போர் துவங்கி, நேற்றுடன் ஆறு மாதங்கள் முடிகின்றன.இந்நிலையில், உக்ரைனின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த 1991ல் சோவியத் யூனியனில் இருந்து தனியாகப் … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் உயர் பதவி வகிக்கும் 130 இந்திய வம்சாவளியினர்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது நிர்வாகத்தில் 130-க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்களை முக்கிய பதவிகளில் நியமனம் செய்துள்ளார். அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவீத அளவுக்கு இந்திய அமெரிக்கர்கள் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என ஜோ பைடன் வாக்குறுதி அளித்திருந்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், 80-க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்களை தனது நிர்வாகத்தின் முக்கிய பதவிகளில் நியமித்திருந்தார். முன்னாள் அதிபர் … Read more

இங்கிலாந்து உக்ரைனின் வாழ்நாள் முழுக்க நண்பனாக இருக்கும் – ரிஷி சுனக்

லண்டன், உக்ரைன் நாடு சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்தவகையில் உக்ரைன் இன்று 31 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு சுதந்திர நாள் வாழ்த்து தெரிவித்து இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:- உக்ரைனின் உறுதியான மன தைரியத்தை பாராட்ட வேண்டும். இங்கிலாந்து உக்ரைனின் வாழ்நாள் முழுக்க நண்பனாக இருக்கும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையிலான கலாசாரம், வணிக … Read more

பாலியல் புகார்: பாகிஸ்தான் தூதர் பணியில் இருந்து நீக்கம்

லாகூர், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பாகிஸ்தான் நாட்டு மூத்த தூதர் மிர்ஜா சல்மான் பெய்க் என்பவர் மீது தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து உள்ளார். மாட்ரிட் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதர் சுஜாத் ரத்தோரிடம், அந்த பணியாளர் புகார் அளித்து உள்ளார். இதனை தொடர்ந்து 2 நபர் கொண்ட குழு ஒன்றை பார்சிலோனா மற்றும் மாட்ரிட் நகருக்கு வெளியுறவு அமைச்சகம் அனுப்பி வைத்து உள்ளது. விசாரணை நிறைவில், அதன் அடிப்படையில் அதிகாரியை … Read more

17 வயதில் உலகை தனியாக வலம் வந்து சாதனை படைத்த இளம் விமானி

மேக் ரதர்போர்ட்டின் இந்த சாதனை பயணம் பல்கேரியா தலைநகர் சோபியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கியது. மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக அல்ட்ராலைட் விமானங்களில் ஒன்றான ‘ஷார்க்’ என்கிற விமானத்தில் பயணம் செய்த மேக் ரதர்போர்ட் 3 மாதத்தில் தன்னுடைய லட்சிய பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் பருவமழை, மணல் புயல் மற்றும் கடுமையான வெப்பம் என அவரது வழியில் எதிர்பாராத பல தடைகள் வந்ததால் பயணம் நீண்ட … Read more

அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்களுக்கு முக்கிய பதவி

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றது முதலே அவர் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை அவர் நியமித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் 80க்கும் மேற்பட்ட இந்தியர்களும், ஒபாமா நிர்வாகத்தில் 60-க்கும் மேற்பட்ட இந்தியர்களும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்ட நிலையில், … Read more

சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அப்போது முதல் ஈராக் மற்றும் சிரியாவில் இருக்கும் அமெரிக்க படையினரை குறிவைத்து ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்ளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் சிரியாவின் தெற்கு பகுதியில் ரிப் டிமாஷ்க் மாகாணத்தில் உள்ள அமெரிக்க ராணுவதளத்தின் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் ‘டிரோன்’ மூலம் தாக்குதல் … Read more