கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாதுகாப்பு வழங்கும் பாக். ராணுவம்

இஸ்லமாபாத், உலகக்கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதி வரை கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கத்தாரில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பு அளிக்க உள்ளது. இதற்கான ஒப்புதலை பாகிஸ்தான் அமைச்சரவை அளித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் விரைவில் கத்தார் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் விரைவில் கத்தார் … Read more

கியூபாவையும் விட்டு வைக்காத குரங்கம்மை..! – முதல் பாதிப்பு நிலவரம்..!

கொரோனா தொற்று பரவலை கடந்து உலகம் முழுவதும் தற்பொழுது குரங்கம்மை தொற்று பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடாகவும் குரங்கம்மை தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கியூபா நாட்டில் முதல் முறையாக, இத்தாலியில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை … Read more

இந்தோனேசியா, மலேசியாவில் நிலநடுக்கம்..!- பாதிப்புகள் நிலவரம்..!

இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மலேசியாவின் கோலாலம்பூர் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

மலேஷிய மாஜி பிரதமர் நஜீப்புக்கு இன்று முதல் சிறை: மேல்முறையீடு தள்ளுபடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புத்ரஜயா: மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். மலேஷியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். ஐக்கிய மலாய் தேசிய கட்சியை சேர்ந்த இவர் பிரதமராக பதவி வகித்த போது, 2009 ம் ஆண்டு அரசு முதலீட்டு நிதி அமைப்பான 1 எம்.டி.பி., நிறுவனத்தில் 4.5 … Read more

இரண்டாண்டுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்… பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி!

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தலைத்தூக்கிய கொரோனா வைரஸ், 2020 இல் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கும் பரவியது. உலக மக்களை உண்டு, இல்லை என்று செய்து வந்த கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து பொது மக்களை காப்பாற்ற, ஆரம்பத்தில் பொதுமுடக்கத்தை கைகொள்வதை தவிர உலக நாடுகளுக்கு வேறு வழி தெரியவில்லை. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முன் எப்போதும் இல்லாத அனுபவமாக அவர்கள் வீட்டில் இருந்தபடியே வகுப்பு பாடங்களை படிக்கும் ஆன்லைன் கற்பித்தல் முறையும் இந்தியா உள்ளிட்ட … Read more

இந்தோனேஷியா, மலேசியாவில் நிலநடுக்கம்| Dinamalar

கோலாலம்பூர்: மலேசியா, இந்தோனோஷியா ஆகிய நாடுகளில் இன்று (ஆக.23) நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் வடகிழக்கு இன்று இரவு 8 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது . இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவானதாக அந்நாட்டு தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்தோனேஷியாஇதே போன்று இந்தோனேஷியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. இந்த இரு நிலநடுக்கங்கள் காரணமாக உயிர்சேதம் குறித்த … Read more

ரஷ்யா உக்ரைன் போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை..! – UNICEF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

சில மாதங்களுக்கு முன்பாக ரஷ்யா உக்ரைன் இடையே கடும் போர் நிலவியது. இதில் பல்வேறு தரப்பினர் உயிர் இழந்தனர். சிலர் கை கால் உள்ளிட்ட தங்கள் உறுப்புகளை இழந்தனர். பெருமளவில் பொருட்சேதமும் ஏற்பட்டது. உலகையே உலுக்கிய இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த போரின் பொது உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து UNICEF அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வரலாற்றில் உலகின் மிகப்பெரும் போர் அழிவாக கருதப்படும் உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி 6 … Read more

தூக்கத்தில் ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட நபர்..!- ஆப்ரிக்காவில் நடந்த விபரீதம்..!!

உலகில் பலருக்கு பல்வேறு வகையான பழக்கங்கள் இருக்கும். அதில் சிலருக்கு வித்தியாசமான பழக்கமும் இருக்கும். ஆப்ரிக்க நாட்டில் தனது தூக்க பழக்கத்தால் தனது உயிரையே பணயம் வைக்கும் நிலைக்கு சென்றுள்ளார் ஒரு விவசாயி. ஆப்ரிகா நாட்டில் தூக்கத்தில் விவசாயி ஒருவர் தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்ரிக்கா நாடான கானாவில் வசித்து வருபவர் கோஃபி அட்டா. விவசாசியான இவர் சில தினங்களுக்கு முன்பாக அயர்ந்து தூங்கியுள்ளார். அப்போது தூக்கத்தில் ஆடு அறுப்பதாக … Read more

ஆர்க்டிக் பனிப்பாறையில் ‘வேற்றுகிரக’ மீன்; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

ஆர்க்டிக் பனிப்பாறையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மீன் ஆராய்ச்சியாளர்களை திகைக்க வைத்துள்ளது. இந்த மீன்களுக்கு பிரகாசமான கண்கள் உள்ளன. இந்த மீன்களின் இரத்தத்தில் உள்ள ஃப்ரீஸ் எதிர்ப்பு புரதம் காரணமாக, அவற்றின் நிறம் பிரகாசமான பச்சை நிறத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளரும், நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியருமான டேவிட் க்ரூபர் இந்த மீன்கள் குறித்த ஆய்வுக்கு தலைமை தாங்கினார். பிரகாசமான கண்கள் கொண்ட மீன் பனிப்பாறைகளின் பிளவுகளில் வாழ்ந்த … Read more

வாரந்தோறும் 2 நாட்கள் விடுமுறை – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

மின்சாரத்தை மிச்சப்படுத்த வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று வங்க தேச அரசு உத்தரவிட்டு உள்ளது. அண்டை நாடான வங்க தேசம், தற்போது மின்சார பற்றாக்குறையால் திணறி வருகிறது. இந்நிலையில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரிகளை வாரம் 5 நாட்கள் மட்டும் இயங்க செய்யவும், சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை விடவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் ஷேக் … Read more