இரண்டாம் உலகப் போரில் அடைந்ததை போல உக்ரைன் போரில் வெற்றி நமதே: புதின் சபதம்

மாஸ்கோ : இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜெர்மனியின் நாசிச படை தோற்கடிக்கப்பட்டதன் 77வது ஆண்டு நினைவு நாளில், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்து ரஷிய அதிபர் புதின் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “நம் நாட்டு வீரர்கள், நாசிச அசுத்தங்களிலிருந்து தங்கள் பூர்வீக நிலத்தை விடுவிக்க, அவர்களுடைய மூதாதையர்களை போல் போராடுகிறார்கள். 1945 இல் இருந்ததைப் போல, வெற்றி நமக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், அவர்கள் போராடுகிறார்கள். புதிய தலைமுறையினர் போரில் … Read more

பாதுகாப்பு துறை தகவலை திருடும் பாகிஸ்தான் உளவு அமைப்பு: தேசிய புலனாய்வு முகமை விசாரணை

புதுடெல்லி: பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் மின்னணு கருவிகளில் இருந்து ரகசிய தகவலை திருடுவதற்காக ஒரு முகநூல் பக்கத்தை பாகிஸ்தானின் உளவுத் துறை (ஐஎஸ்ஐ) உருவாக்கியுள்ளது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்துகிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை திருடுவதற்காக, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, முகநூலில் ஷாந்தி படேல் என்ற பெயரில் ஒரு பக்கத்தை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஐஎஸ்ஐ உளவாளிகள், பாதுகாப்புத் துறை மற்றும் அதன்அதிகாரிகளுடன் சமூக வலைதளங்கள் … Read more

பிரதமர் பதவி வேண்டாம் -கோத்தபயா அழைப்பை நிராகரித்தார் சஜித் பிரேமதாசா

இலங்கை பிரதமர் பதவியை ஏற்க சஜித் பிரேமதாசா மறுப்பு தெரிவித்தார்.பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தொடர்ப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நிலையிலும் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சி 2 நம்பிக்கை இல்லா தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளது. அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்திருப்பதாக தகவல்கள் … Read more

உக்ரைன் பள்ளியில் குண்டு வீச்சு 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு| Dinamalar

ஜபோரிஜியா,-உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பள்ளி மீது ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில், 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.முதலில், தலைநகர் கீவ் உள்ளிட்ட பிரதான நகரங்களில் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படையினர், தற்போது, நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்க ஏராளமான மக்கள், கட்டடங்களுக்கு அடியில் உள்ள சுரங்கங்களில் தஞ்சமடைந்து உள்ளனர். இந்நிலையில் … Read more

இடைக்கால அரசு அமைக்க இலங்கை எதிர்க்கட்சி மறுப்பு| Dinamalar

கொழும்பு-இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க, அதிபர் கோத்தபய ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்க, முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜனா பாலவேகயா மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில், அரசுக்கு, எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி உள்ளது. இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன்-ரஷியா இடையே சமாதான பேச்சுவார்த்தை- இத்தாலி வலியுறுத்தல்

09.05.2022 03.30: ரஷியா-உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இரு நாடுகள் இடையே சமாதான பேச்சுவார்த்தை மீண்டும் தொடர எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று ஜி-7 நாடுகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி வலியுறுத்தி உள்ளார்.  இந்த போர் உக்ரைனின் தானிய உற்பத்தியை பாதிக்கிறது என்றும், உணவு நெருக்கடி ஆபத்தில் உள்ள ஏழை நாடுகளுக்கு உதவ ஜி-7 அமைப்பு தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். … Read more

பிரிட்டன் நபருக்கு மங்கிபாக்ஸ் தொற்று| Dinamalar

லண்டன்-விலங்குகளின் உடலில் இருந்து மனிதர்களுக்கு பரவும், ‘மங்கி பாக்ஸ்’ எனப்படும் ஒருவித அம்மை நோய் தொற்று, பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு திரும்பிய நபருக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இவரை பரிசோதித்தபோது, ‘மங்கிபாக்ஸ்’ எனப்படும் ஒருவித அரிய வகை அம்மை நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர், லண்டனில் உள்ள மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, பிரிட்டன் சுகாதாரத்துறை … Read more

ஹாங்காங்கின் அடுத்த தலைவராக சீன அரசின் விசுவாசி ஜான் லீ தேர்வு| Dinamalar

ஹாங்காங்-ஹாங்காங்கின் அடுத்த தலைமை நிர்வாகியாக, சீன அரசின் விசுவாசியாக கருதப்படும் ஜான் லீ தேர்வு செய்யப்பட்டுஉள்ளார். கடந்த 1997 முதல், நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில், ஹாங்காங் உள்ளது. இதன் தலைமை நிர்வாகியாக கேரி லாம் இருந்து வருகிறார். இவர், சீன அரசின் உத்தரவை பின்பற்றி எடுத்து வந்த நடவடிக்கைகள் மக்களை ஆத்திரம்அடைய வைத்தன. சீனாவின் ஆதிக்கம் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த, 2019ல், அரசுக்கு எதிராக … Read more

லண்டனில் உள்ள பென்னிகுவிக் நினைவிடத்தில் தமிழக அமைச்சர் மரியாதை

லண்டன்: தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் லண்டனில் நடந்த தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் லண்டன் கேம்பர்லி நகரில் உள்ள முல்லை பெரியார் அணையினை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் கல்லறைக்கு சென்ற அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். எல்காட் நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ், லண்டன் திமுக அயலக அணி அமைப்பாளர் பைசல், சந்தனபீர் ஒலி உள்பட … Read more

அப்பாடா… ஒரு வழியாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்சே முடிவு?

நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இலங்கை மக்களும், தொழிற்சங்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. மறுபுறம் பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் சிறப்பு கேபினட் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பிரதமர் மகிந்த ராஜபக்சே, பேசும்போது தான் பதவி விலகுவது மட்டும்தான் எல்லா … Read more