ஷாங்காய் டிஸ்னி லேண்டு மூடல்| Dinamalar

பீஜிங் : சீனாவில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் தொழில் நகரமான ஷாங்காயில் உள்ள ‘டிஸ்னி லேண்டு’ தற்காலிகமாக மூடப்பட்டது. உலக நாடுகளில் கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில் சீனாவில் அந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஜிலின் மற்றும் சங்சுன் நகரங்களில் மக்கள் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அங்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு … Read more

உக்ரைனுக்கு மேலும் 1 கோடி யுவான் மதிப்பில் மனிதாபிமான உதவிகள் வழங்கும் சீனா

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உருக்குலைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 1 கோடி யுவான் மதிப்பில், மனிதாபிமான உதவிகளை வழங்க உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Wang Wenbin, சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் உக்ரைனுக்கு கூடுதலாக 1 கோடி யுவான் மதிப்பில் மனிதாபிமான உதவியை வழங்கும் என தெரிவித்துள்ளார். முன்னதாக, மனிதாபிமான அடிப்படையில், உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் உள்பட 50 லட்சம் யுவான் மதிப்பிலான நிவாரண … Read more

எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு கட்டாய தேர்வு ரத்து- உக்ரைன் கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு

கீவ்: உக்ரைனில் ரஷிய படைகளின் தாக்குதல்களால் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்டு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்தது. உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம் படித்து வந்தனர். உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் 5-வது மற்றும் இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கான … Read more

முன்பு ஆப்கன் நிதியமைச்சர்; இன்று உபேர் கார் டிரைவர்: தலிபான்களிடம் தப்பி அமெரிக்கா வந்தவருக்கு அவலம்

வாஷிங்டன்: தலிபான்களுக்கு அஞ்சி அமெரிக்கா தப்பி வந்த ஆப்கன் முன்னாள் நிதியமைச்சர் காலித் பயேண்டா, அன்றாட செலவுகளுக்காக வாஷிங்டனில் உபேர் நிறுவனத்தின் வாடகை கார் ஓட்டும் டிரைவராக பணியாற்றி வருகிறார். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பின. இதையடுத்து, அங்குநடந்த உள்நாட்டுப் போரில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆனால் தலிபான்களை அங்கீகரிக்க பல உலக நாடுகள் மறுத்து வருகின்றன. மேலும் உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), அமெரிக்க பெடரல் … Read more

லண்டன் டூ இந்தியா… 100 நாட்கள், 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூர பைக் பேரணி…. மண் வள பாதுகாப்பு குறித்த சத்குருவின் விழிப்புணர்வு பயணம்!

உலக அளவில் மண் வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூர பைக் பேரணியில் ஈடுபட்டுள்ள யோகா குரு சத்குரு, லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் இருந்து தன் பயணத்தை தொடங்கினார். 100 நாட்கள் பயணமாக ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான நெதர்லாந்து, ஜெர்மனி, செக் குடியரசு உள்ளிட்ட 27 நாடுகள் வழியாக, 3 கண்டங்களை கடந்து இந்தியா வர சத்குரு திட்டமிட்டுள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் விதமாக … Read more

அமெரிக்காவில் ஒமைக்ரானை விட 60 சதவீதம் வேகமாக பரவும் புது ஒமைக்ரான்

வாஷிங்டன்: புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கடந்த நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் மற்ற நாடுகளுக்கு பரவியது. இதனால் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அமெரிக்காவிலும் ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஜனவரி மாதம் பரவியது. அதன்பின் அங்கு கொரோனா பாதிப்பு வேகமெடுத்தது. ஒமைக்ரானின் துணை வகைகளான பிஏ.1 மற்றும் பிஏ.2 உருமாறிய வைரஸ்கள் பரவியது. இதில் பிஏ.1 வகை … Read more

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி 229 ரன்கள் சேர்ப்பு| Dinamalar

ஹாமில்டன்: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி, 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். … Read more

தீவிரவாதத்தை பரப்புவதாக புகார்; பேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு ரஷ்யாவில் தடை !

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர்  27வது நாளாக தொடர்கிரது. அதிபர் புடினின் உஜ்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யா மீது உலகின் பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. உலகிலேயே அதிக தடைகளை சந்திக்கும் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. இருப்பினும், ரஷ்யா போரில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. இந்த நிலையில், அந்நாட்டு நீதிமன்றம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தடை ‘தீவிரவாத நடவடிக்கைகள்’  … Read more

'ரஷ்ய விவகாரத்தில் இந்தியா தள்ளாடுகிறது' – அமெரிக்க அதிபர் பைடன் கருத்து

வாஷிங்டன்: ரஷ்ய விவகாரத்தில் இந்தியா தள்ளாடுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மற்ற கூட்டாளிகள் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் ஆனால் இந்தியா அவ்வாறாக இல்லை என்றும் அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று வாஷிங்டன்னில் அமெரிக்க தொழிலதிபர்களுடன் அதிபர் பைடன் சந்திப்பு நிகழ்த்தினார். அந்தக் கூட்டத்தில் பேசிய பைடன், “உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டிப்பதில் நேட்டோ உறுப்பு நாடுகள் ஓரணியில் உள்ளன. குவாட் கூட்டமைப்பிலும் ஜப்பான், … Read more

மறுபடியும் கிளம்பிருச்சு.. விமானத் தாக்குதலை அதிகரிக்கும் ரஷ்யா.. பதட்டத்தில் உக்ரைன்!

விமானத் தாக்குதலை கடந்த பல நாட்களாக மட்டுப்படுத்தி வைத்திருந்த ரஷ்யா தற்போது மீண்டும் விமானத் தாக்குதலை அதிகரித்திருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. 26 நாட்களுக்கு முன்பு உக்ரைன் மீதான போரைத் தொடங்கியது ரஷ்யா. போர் தொடங்கியதுமே விமானப்படை மூலம் சரமாரியான தாக்குதல் நடத்தி உக்ரைன் விமான தளங்களை காலி செய்தது ரஷ்யா. அதேசமயம், ராணுவம், கடற்படை ஆகியவற்றையும் முழு வீச்சில் தாக்குதலில் இறக்கியது. இதனால் உக்ரைன் பெரும் தடுமாற்றத்தை சந்தித்தது. ஆனால் திடீரென விமானப்படையை மட்டும் தாக்குதலிலிருந்து … Read more