இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல் | 750 கி.மீ. தொலைவு வரை உளவு பார்க்க முடியும் – 6 கடற்படைத் தளங்களுக்கு குறி?

கொழும்பு: இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நேற்று நங்கூரமிட்டது. சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணு படைப் பிரிவு சார்பில் யுவான் வாங்க் என்ற பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. யுவான் வாங்க் 1, 2, 3, 4, 5, 6, 7 என்ற பெயர்களில் 7 உளவு கப்பல்கள் இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடலில் உலா வருகின்றன. தற்போது யுவான் வாங்க் 5 என்ற சீன உளவு … Read more

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிரூட்டப்பட்ட இந்திய மூவர்ண கொடி

இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க்கில் புகழ்பெற்ற உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் இந்திய தேசியக் கொடி ஒளிரூட்டப்பட்ட காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோன்று நியூயார்க் நகரில் வரலாற்று சிறப்புமிக்க டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. இந்திய கூட்டமைப்பு சம்மேளனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், இந்திய தூதர் ரன்தீர் ஜஸ்வால் தேசிய கொடியை ஏற்றினார். விழாவில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் நாட்டுப்பற்று … Read more

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – புதிதாக 2,526 பேருக்கு தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை குறைவாக … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பிடனுக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் கானப்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவரது கணவவரும் அதிபருமான ஜோ பிடன் இரண்டாவது முறையாக வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தற்போது அவரின் மனைவிக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தற்போது உரிய சிகிச்சையை எடுத்தவாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தினத்தந்தி Related Tags : ஜில் பைடன் கொரோனா … Read more

ஊழல் வழக்கில் சூச்சிக்கு6 ஆண்டு சிறை தண்டனை| Dinamalar

பாங்காக்:மியான்மரின், மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு கட்சியின் தலைவரும், அரசு ஆலோசகருமான ஆங் சான் சூச்சிக்கு மற்றொரு ஊழல் வழக்கில், அந்நாட்டு நீதிமன்றம் ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021ல் நடைபெற்ற தேர்தலில் சூச்சியின்,77, கட்சி வெற்றி பெற்றது. ஆனால், அவர் தேர்தல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய ராணுவம், அவரை பதவியிலிருந்து நீக்கி ஆட்சியைக் கைப்பற்றியது. மேலும், தேசத்துரோகம், ஊழல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை … Read more

இலங்கை துறைமுகத்தை இராணுவ நோக்கத்துக்காக பயன்படுத்த சீனாவுக்கு அனுமதி இல்லை- ரணில் விக்கிரமசிங்கே

கொழும்பு, இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உளவுக் கப்பல் ‘யுவான் வாங் 5’ இன்று வந்தடைந்துள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்த சீன உளவுக் கப்பல் வரும் 22-ந் தேதி வரை அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும். 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட இந்த உளவு கப்பல் 11 ஆயிரம் டன் எடைகொண்ட பொருட்களை சுமக்கும் வல்லமை கொண்டது. கடல் சார் கண்காணிப்பு, விண்வெளி கண்காணிப்பு உள்பட … Read more

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை கடும் உயர்வு..! -1 லிட்டரின் விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் ..!!

உலக நாடுகள் பலவும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இலங்கை போன்ற நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது இந்நிலையில் பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இன்று மட்டும் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 6 ரூபாய் அதிகரித்து 234 என விற்பனையாகி வருவது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் … Read more

தலிபான் ஆட்சியின் ஓராண்டு நிறைவு துயரத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான்| Dinamalar

காபூல்:ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு ஆன நிலையில், அந்நாட்டில் நோயும், பசியும், துயரும் மட்டுமே நிறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் ஆப்கனில் ஆட்சியைப் பிடித்த தலிபான்கள், இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். இந்நிலையில், தங்களது ஓராண்டு ஆட்சி நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் தலைநகர் காபூல் தெருக்களில் மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தனர். அப்போது, ‘இஸ்லாம் வாழ்க; அமெரிக்காவுக்கு மரணம்’ போன்ற கோஷங்களை முழங்கினர். தலிபான்களை உலக … Read more

சீறிய ராஜநாகம்….மிரண்ட பாம்பு பிடி வாலிபர்…! வைரலாகும் வீடியோ

வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவில், மக்கள் வசிக்கும் பகுதிக்குள் 12 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அதனை லாவகமாக பிடித்துச் சென்ற பாம்பு பிடிக்கும் நபரான மைக் ஹோல்ஸ்டன், அதனை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து பாம்பை பாதுகாப்பாக பெட்டிக்குள் அடைக்க முற்படுகிறார். ராஜ நாகத்தின் வாலை பிடித்து லாவகமாக இழுத்துப்பிடித்து நிலை நிறுத்த முயற்சிக்கிறார். ஒருகட்டத்தில் அந்த ராஜநாகம் மைக் ஹோல்ஸ்டனை பார்த்து பயங்கரமாக … Read more

ஐயையோ அவர நாங்க ஒன்னும் பண்ணல… சல்மான் ருஷ்டி விஷயத்தில் அலறும் ஈரான்!

இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (75), 1988ஆம் ஆண்டு, தான் எழுதிய ‘தி சாத்தானிக் வெர்சஸ் (The Satanic verses) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அது இஸ்லாமிய மதக்கடவுளின் இறைத்தூதர் மற்றும் இஸ்லாமிய மதப்புத்தக்கத்தை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் அந்த புத்தகத்திற்கு அந்நாடுகள் தடையும் விதித்தன. இத்துடன் நில்லாமல், 1989ஆம் ஆண்டில் சல்மான் ருஷ்டியின் தலைக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்றும் … Read more