முழு ஆண்டு தேர்வுகள் ரத்து – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள காகித பற்றாக்குறையால் இந்த ஆண்டு பள்ளி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அண்டை நாடான இலங்கையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்தது. இதனால் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஏற்கனவே பெற்றிருந்த கோடிக் கணக்கான கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை அந்நாட்டுக்கு உருவானது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டுக்கு சுமார் 6.9 பில்லியன் டாலர் (ரூ.52 ஆயிரம் கோடி) கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இது, … Read more

ரஷ்ய வான் தாக்குதலால், பாதாள அறையில் சிறுவர்களுக்கு ஓவிய வகுப்புகள் : போர் சூழலை மறக்க வைத்து புத்துணர்ச்சி ஊட்டும் சீன மாணவி

வெடிச்சத்தத்துக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வரும் உக்ரைன் நாட்டு சிறுவர்களுக்கு, போர் சூழலை மறக்க வைத்து புத்துணர்ச்சி ஊட்டும் விதமாக சீனப் பெண் ஒருவர் ஓவிய வகுப்புகளை நடத்தி வருகிறார். கியி என்ற அந்த மாணவி, ஓவியக்கலையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக 3 ஆண்டுகளாக உக்ரைனில் வசித்து வருகிறார். போர் சூழலிலும் சீனாவிற்கு செல்ல மறுத்த கி யி  தான் தங்கியிருந்த வீட்டின் பாதாள அறையில் சிறுவர் சிறுமியருக்கு ஓவியப் பயிற்சி அளித்து வருகிறார். ஓயாத வெடிச்சத்தம் … Read more

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்: இந்தியா 136வது இடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவுக்கு 136 ஆம் இடம் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் 103 ஆம் இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் நிகழும் இனவாதம், மதவாதம், நிறவாதம், பொருளாதார ஏற்றதாழ்வுகள் இவற்றால் உலக முழுவதும் வெறுப்பு படர்ந்து ஆங்காங்கே போர்களும், சண்டைகளும் நடந்து வருகின்றன. கரோனாவிற்கு பின்னர் இவை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான் 2022 ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் உலக மகிழ்ச்சி தினமான மார்ச் 20 ஆம் தேதியை ஒட்டி சில தினங்களுக்கு முன்னர் … Read more

“ஏ குருவி… சிட்டுக்குருவி”… உலக சிட்டுக்குருவிகள் தினம் !

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசுப் பள்ளி ஒன்றில் கூடு செய்யும் முறையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து, சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர்கள் உணர்த்தி வருகின்றனர். உலகில் வாழும் ஜீவராசிகளில் மனித குலத்துக்கு நெருக்கமான சிலவற்றில் சிட்டுக்குருவிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பூச்சி இனங்கள், தானியங்கள் என சிட்டுக்குருவிகளுக்கான உணவும் எளிமையானதுதான். உள்ளங்கையில் அடங்கிப் போகும் உருவம், சுறு சுறு துறு துறு செயல்பாடு, செவிகளைக் குளிர்விக்கும் … Read more

உக்ரைனில் 847 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. தகவல்

உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 847 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 847 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்து 400 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலன மக்கள் ரஷ்யாவின் பன்முனை ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணை, விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உத்தேசமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாகவும், தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கக்கூடும் … Read more

ஆசியா-ஐரோப்பியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

சியோல்: சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும் அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இதனால் தற்போது வரை கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்தபடியே இருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் 3-ம் அலை தாக்கியது. இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டறிப்பட்டது. மிகவும் வேகமாக … Read more

மரியுபோல் நகரம் முற்றுகை… உருக்காலையில் தாக்குதல்.. ரஷ்யா மீது குற்றச்சாட்டு

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய உருக்காலை ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளது.  உக்ரைனின் தென்கிழக்கில் அசோவ் கடற்கரையில் உள்ள மரியுபோல் மிக முதன்மையான துறைமுக நகராகும். இந்த நகரை முற்றுகையிட்டுள்ள ரஷ்ய ராணுவத்தினர் அங்கிருந்து மக்களை ரஷ்யப் பகுதிக்கு வெளியேற்றி வருவதாகவும், மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவை கிடைப்பதைத் தடுப்பதாகவும் நகரவை குற்றஞ்சாட்டியுள்ளது. இங்குள்ள அசோவ்ஸ்டீல் ஆலை ஐரோப்பாவின் பெரிய உருக்காலைகளில் ஒன்றாகும். இந்த ஆலையின் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்திய … Read more

மேற்கத்திய நிறுவனங்களுக்கு திவால் சட்டத்தைப் பயன்படுத்துமா ரஷ்யா?

மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு உற்பத்திகளை நிறுத்தி வைத்து பொருளாதாரத் தடையை அமல்படுத்தியுள்ள நிலையில் ரஷ்ய அரசும் அதன் நிறுவனங்களும் திவால் சட்டத்தைப் பயன்படுத்தி பதிலடி கொடுக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்காவின் திவால் சட்டத்தை விட ரஷ்யாவின் திவால் சட்டம் வேறுபட்டது. கடன் பெற்ற நிறுவனங்களுக்கு புதிய தொடக்கத்தை ஏற்படுத்துவதே அமெரிக்காவின் திவால் சட்டத்தின் இலக்காகும். ஆனால் ரஷ்யாவில் கடன் பெற்ற நிறுவனத்தை மூடச் சொல்லி அரசு வற்புறுத்தி அதனை தொழிலிருந்து வெளியேற்றி விட முடியும். … Read more

பாகிஸ்தான் சியால்கோட் ராணுவ தளத்தில் மிகப்பெரிய வெடிகுண்டு வெடிப்பு!

சியால்கோட்: பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் பெரிய அளவில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளதால், ராணுவ தளம் தீப்பிடித்து எரிந்த நிலையில், குண்டுவெடிப்புகளால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த குண்டுவெடிப்புகள் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சியால்கோட்டில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு பாகிஸ்தானில் இம்ரான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், சியால்கோட்டில் குண்டு … Read more

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று முதல் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று முதல் ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பில், தெற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி கிழக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மார்ச் 20-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த 24 மணி … Read more