அமெரிக்காவில் ஹிந்துவை அவமதித்த இந்தியர் கைது| Dinamalar

நியூயார்க்:அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஹிந்துவை, அவமதிக்கும் வகையில் நடந்த மற்றொரு இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பெர்மான்ட் பகுதியில் வசிக்கும், இந்திய வம்சாவளியான கிருஷ்ணன் ஜெயராமன், சமீபத்தில் அங்குள்ள உணவகத்துக்கு சென்றுள்ளார்.அப்போது, அங்கிருந்த இந்தியரான தெஜிந்தர் சிங் என்பவர், கிருஷ்ணன் ஜெயராமனை அசைவ உணவு சாப்பிடும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு, கிருஷ்ணன் ஜெயராமன் மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, தெஜிந்தர் சிங் அவரை தாறுமாறாக திட்டியுள்ளார். ஹிந்து மதம் குறித்தும் அவதுாறாக பேசிய அவர், கிருஷ்ணன் ஜெயராமன் … Read more

உய்கர் முஸ்லிம்கள் சித்ரவதை சீனா மீது ஐ.நா., குற்றச்சாட்டு| Dinamalar

ஜெனீவா:’சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்கர் முஸ்லிம்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்துள்ளது, மனித குலத்துக்கு எதிரான குற்றம்’ என, ஐ.நா.,வின் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்கர் முஸ்லிம் பழங்குடியின மக்கள், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு, அமெரிக்கா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.ஆனால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே, ஐ.நா.,வின் மனித உரிமை … Read more

அடடா… அமைச்சர்னா இப்படி இல்ல இருக்கணும்!

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் போர்ச்சுக்கல் நாட்டுக்கு அண்மையில் சுற்றுலா சென்றுள்ளார். கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணுக்கு சுற்றுலா போன இடத்தில் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே லிஸ்பனில் உள்ள பிரபல சான்டா மரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து தாயும், சேயும் மேல்சிகிச்சைக்காக சாவ் பிரான்சிஸ்கோவில் உள்ள சேவியர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டனர். ஆம்புலன்சில் பயணிக்கும்போதே அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடையவே அவரை மயக்கத்தில் இருந்து … Read more

போர்ச்சுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.!

போர்ச்சுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். போர்ச்சுகலில் இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் லிஸ்பனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பேறுகால பிரிவில் படுக்கை வசதி இல்லாததால், மற்றொரு மருத்துவமனைக்கு அவரை மாற்றும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்நாட்டில், பணியாளர் பற்றாக்குறை போன்றவற்றால் அவசரகால மகப்பேறு சேவைகளை தற்காலிகமாக மூடுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் … Read more

புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் சீனாவின் செங்டு நகரில் பொது முடக்கம்.!

புதிய வகை கொரோனா தொற்று தலைதூக்கியுள்ளதால் சீனாவில் 1 கோடியே 60 லட்சம் பேர் வசிக்கும் செங்டு நகரம் இன்று முதல் மூடப்படுகிறது. அந்நகரில் 147 பேருக்கு புதிய வகை தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு ஒருவர் அதாவது கடந்த 24 மணிநேரத்தில்  தொற்று பாதிப்பு இல்லாத ஒரு நபர் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே … Read more

பிரிட்டன் பிரதமர் தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் : பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் பழமைவாத கட்சித் தலைவர் தேர்தல் பிரசாரம் முடிந்தது. இதைத் தொடர்ந்து ஓட்டுப்பதிவு துவங்குகிறது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக உள்ளவரே, பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதன்படி, கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடந்து வந்தது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான … Read more

அமெரிக்காவில் 20,000+ முறை தேனீக்கள் கொட்டியதில் கோமா நிலைக்குச் சென்ற இளைஞர்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேனீக்கள் 20,000-க்கும் மேற்பட்ட முறை கொட்டியதில் இளைஞர் ஒருவர் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேந்தவர் ஆஸ்டின் பெல்லமி (20). தனது நண்பருக்காக பெல்லாமி எலுமிச்சை மரக் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார், அவ்வாறு ​​மர வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவர் தவறி தேனீக்கள் கூட்டை வெட்டிவிட்டார். இதனைத் தொடர்ந்து ஆஸ்டினை சூழ்ந்த தேனிக்கள் அவரை முற்றிலுமாக சூழ்ந்துகொண்டு கொட்ட தொடங்கின. இதில் தேனீக்கள் அவரை 20,000-க்கும் மேற்பட்ட முறை … Read more

மழை, வெள்ளத்தால் பாகிஸ்தானில் காய்கறிகள், பழங்களின் விலை கடுமையாக உயர்வு.!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானில் காய்கறிகள், பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பயிர்கள் நீரில் மூழ்கின. அதோடு சாலைகள், பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் தற்போது 300 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 200 ரூபாய்க்கும் … Read more

தினமும் இதை குடிக்கும் பழக்கம் இருக்கா? -அப்போ உங்களுக்கு ஆயுசு கெட்டி!

டீ, காபி குடிக்கும் பழக்கம் உலக அளவில் பெரும்பாலான மக்கள் மத்தியில் இருந்து வருகிறத. தினமும் மூணு வேள டீ குடிச்சாதாம்பா உடம்பு சுறுசுறுப்பா இருக்கு… இந்த மழை கிளைமேட்டுக்கு காபி குடிச்சா மனசுக்கு எவ்வளவு எனர்ஜியா இருக்கு தெரியுமா? என்று டீ, காபி பிரியர்கள் இந்த பானங்கள் குறித்து சிலாகிப்பது உண்டு. இன்றைய நவீன் யுகத்தில் கார்ப்பரேட் அலுவலகங்களில் லஞ்ச் ப்ரேக் என்ற வார்த்தை என்ற அளவுக்கு அன்றாடம் பயன்படுத்தப்படுகிறதோ அதே அளவுக்கு டீ பிரேக்கிற்கும் … Read more

“வரலாற்றின் போக்கை மாற்றிய தலைவர்” – மிகைல் கோர்போசேவுக்கு உலகத் தலைவர்கள் புகழஞ்சலி

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபராக அறியப்பட்ட மிகைல் கோர்பசேவ் வயது முதிர்வுக் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. அமைதியின் பிம்பமாக கடந்த காலங்களில் அறியப்பட்ட மிகைல் கோர்போசேவ் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: ”சிறந்த அரசியல் பார்வைக் கொண்ட நபர். அரியத் தலைவர். வித்தியாசமான எதிர்காலம் சாத்தியம் என்பதை காண்பிக்க தனது முழு வாழ்க்கையையும் அவர் பணயம் வைத்தார்.” ஐ. நா. … Read more