கியூபாவின் புரட்சி நாயகன் சே குவேராவின் மகன் கமிலோ மறைவு

கியூபாவின் புரட்சி நாயகரான சே குவேராவின் மகன் கமிலோ குவேரா நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 60. இதனை கியூபா அரசு தரப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவர் வெனிசுலாவுக்கு பயணம் மேற்கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அலீடா மார்ச் மற்றும் சே குவேரா தம்பதியருக்கு பிறந்த 4 பிள்ளைகளில் இவர் ஒருவர். இவர் அவர்களுக்கு பிறந்த மூன்றாவது மகன் ஆவார். ஹவானாவில் சே குவேரா ஆய்வு மையத்தின் இயக்குனராக அவர் பணியாற்றி வந்துள்ளார். சே … Read more

இறப்பை முன்னரே கணித்த பழங்குடியின மனிதர்: என்ன செய்தார் தெரியுமா?

பிரேசிலில் இருக்கும் அமேசான் மலைக்காடுகள் உலகிலேயே மிகப்பெரிய வனப்பகுதியாகும். இந்த அமேசான் காடுதான் பூமியின் தட்ப வெப்பத்தை பெரிய அளவில் காத்து வருகிறது. இந்த அடர்ந்த காட்டுக்குள் பழங்குடி இன குழுக்கள் பலவும் வசித்து வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஆக்கிரமிப்பாளர்கள் அமேசான் காடுகளை அழித்து வருவதாகவும், அங்கு வாழும் பழங்குடியினரான பூர்வ குடிகளை கொன்று குவித்து வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பல்வேறு காலகட்டங்களில் பழங்குடியின குழுக்கள் கொல்லப்பட்டு வந்துள்ளனர். அந்த வகையில், … Read more

சீனா – ஜப்பானை அச்சுறுத்தும் உலகின் மிக வலிமையான Hinnamnor சூறாவளி!

உலகின் மிக வலிமையான புயல்: வறட்சி மற்றும் வெப்ப அலைகளால் சிக்கலில் உள்ள ஜப்பான் மற்றும் சீனாவுக்கு மற்றொரு பெரிய அச்சுறுத்தல் காத்திருக்கிறது.  2022 ஆம் ஆண்டின் வலுவான உலகளாவிய புயலால் இந்த இரு நாடுகளும் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த புயல் கிழக்கு சீனக் கடல் வழியாக ஜப்பானின் தெற்கு தீவுகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். ஹிமானோர் தற்போது மணிக்கு 160 மைல் அதாவது மணிக்கு 257 கிமீ வேகத்தில் நகரும் நிலையில், இதன் காரணமாக, … Read more

போர் விமானங்களின் திறனை அதிகரிக்கும் பிளாஸ்மா சாதனத்தை உருவாக்கியுள்ள சீன விஞ்ஞானிகள்..!

எதிரிகளின் ரேடாரால் கண்டறிய முடியாதபடி பயணிக்கும் போர் விமானங்களின் திறனை அதிகரிக்கும் வகையிலான பிளாஸ்மா சாதனத்தை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அதிவேகத்தில் பயணிக்கும் குண்டு வீச்சு விமானங்கள் அதன் வேகத்தை நடுவானில் குறைக்கும் போது, காற்றின் வேக  மாறுபாடால் விமானம் ஸ்தம்பித்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க, பிளாஸ்மா சவ்வு கொண்ட சாதனம் விமானத்தின் இறக்கைகளில் பயன்படுத்தும் போது, நடுவானில் விமானத்தின் இறக்கைகளில் ஏற்படும் காற்று மாறுபாட்டின் தாக்கத்தை முன்கூட்டியே உணர்ந்து விமானிக்கு அது … Read more

கொரோனாவின் அக்டோபஸ் கரங்களில் சீனா! லாக்டவுன் மற்றும் பொதுஜன சோதனைகள் மும்முரம்

சீனா: ஆகஸ்ட் 30 அன்று 51 பேருக்கு COVID-19 நோய்த்தொற்றுகளை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதனை அடுத்து மில்லியன் கணக்கான மக்கள் லாக்டவுனை எதிர்கொண்டுள்ளனர். சீனாவில் ஜீரோ-கோவிட் கொள்கை, அதாவது யாருக்குமே கொரோனா பாதிப்பு இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் கொள்கையால், நாட்டின் தலைநகரைச் சுற்றியிருக்கும் சீனாவின் ஹெபே மாகாணத்தில் மீண்டும் கடுமையான லாக்டவுன் மற்றும் வெகுஜன சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாdஉ நடைபெற உள்ள நிலையில் கோவிட் … Read more

நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் நாசா..!- நாசாவின் புதிய திட்டம்..!

நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் ராக்கெட் ஆர்டெமிஸ் 1 கடந்த 29ம் தேதி ஏவ இருந்த நிலையில் எஞ்சின் கோளாறு காரணமாக ஏவுதல் நிறுத்தப்பட்டது. பின்னர் ராக்கெட்டின் கோளாறுகளை சரிசெய்யும் பணியில் நாசா தீவிரமாக ஈடுபட்டது. தற்போது கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆர்டெமிஸ் 1 விண்வெளி பயணத்திற்கு தயாராக உள்ளது. இதுத் தொடர்பாக நாசா (NASA) கூறியுள்ள தகவலில், ஆர்ட்டெமிஸ் 1 ஐ ஏவுவதற்கான … Read more

தைவான் நாட்டின் கடல் எல்லைக்குள் சீனாவின் டிரோன்..! விரட்டி அடித்த தைவான்..!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக இரவு தைவானுக்கு சென்றார். அவர் தைவான் அதிபரை சந்தித்து பேசினார். நான்சி பொலேசியின் இந்த பயணம் சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்சி பொலேசியின் பயணத்தை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் 4 முறை தைவானுக்கு சென்றனர். தைவானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்வதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதற்கு எதிர்வினையாக சீனாவின் ராணுவம் தைவான் நாட்டை சுற்றி … Read more

இரண்டாவது நாளே பழுதடைந்து நின்ற இங்கிலாந்து கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி போர் கப்பல்!

இங்கிலாந்து கடற்படைக்குச் சொந்தமான 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான விமானம் தாங்கி போர் கப்பல், அமெரிக்க பயணத்தை தொடங்கிய இரண்டாவது நாளே பழுதடைந்து நின்றது. இங்கிலாந்து கடற்படையின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர் கப்பலான Prince of Wales, 4 மாத பயணமாக 1,600 வீரர்கள் மற்றும் எப்-35 ஜெட் விமானங்களுடன் போர் பயிற்சிக்காக அமெரிக்கா புறப்பட்டது. 65,000 டன் எடையிலான இந்த கப்பல், போர்ட்ஸ்மவுத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 2-வது நாளே பழுதடைந்து நின்றது. கப்பலில் ஏற்பட்ட … Read more

யப்பா இவ்வளவு பெரிசா! ஐரோப்பாவில் மிகப் பெரிய டைனோசர் இதுதானாம்!

ஐரோப்பாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள் போர்ச்சுகலில் உள்ள தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. பொம்பல் நகரத்தில் ஒருவரின் இடத்தில் புதைபடிவ எலும்புத் துண்டுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்தன. இதை அவர் அரசுக்கு தெரிவித்தார். இதனையடுத்து  லிஸ்பன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2017 இல் அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கை தொடங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக, போர்ச்சுகலில் உள்ள ஒரு தோட்டத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய டைனோசரின் எச்சங்களை பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் இந்த எலும்புக்கூட்டின் மேல், ஜுராசிக் வண்டல் அடுக்குகள் இருந்தன. இதன் … Read more

பாகிஸ்தானின் அவலநிலை தொடர்கிறது! வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்

கராச்சி: பாகிஸ்தானில் கடுமையான பருவமழையால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், சில நாட்களில் 380 குழந்தைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் கொன்றது. பாகிஸ்தானின் சார்சடாவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து, நிவாரண முகாமில் தஞ்சம் புகுந்த குடும்பங்கள் வாழ்க்கையை இனி எப்படி எதிர் கொள்ளப்போகிறோம் என்று கவலையுடன் நாட்களை கழித்துக் கொண்டு இருக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வரும் மக்களின் நிலைமையை பார்வையிட, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு செல்ல உள்ளார். … Read more