எகிப்து தேவாலயத்தில் தீ: 41 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். கெய்ரோவின் இம்பாபாவில் உள்ள மக்கள் அதிகம் பேர் கூடியிருந்த தேவாலயத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதில் 41 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதல் கட்ட விசாரணையில், மின்சார கசிவு காரணமாக … Read more

DART Mission: பூமியை அழிவில் இருந்து காக்க நாசா மேற்கொள்ளும் DART மிஷன்!

பூமியை நோக்கி சிறுகோள் வருவதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன. சிறுகோள் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது அதன் திசையில் எந்த மாற்றமும் இல்லை என்றால் பூமிக்கு பேரழிவு நிச்சயம். எனவே சிறுகோள் பூமியை தாக்காமல் விலகி செல்லும் வகையில், அதன் திசையை மாற்ற, நாசா கடந்த ஆண்டு DART மிஷனை அறிமுகப்படுத்தியது. அடுத்த மாதம் 26ம் தேதி இந்த விண்கலம் சிறுகோளை தாக்கி அதன் திசையை மாற்ற உள்ளது. சிறுகோள் தாக்குதலில் இருந்து பூமியைப் பாதுகாக்க, … Read more

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து விலகல்

டோக்கியோ: காயம் காரணமாக உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து விலகி உள்ளார். ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஆக., 21ம் தேதி உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து விலகுவதாக காமன்வெல்த் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அறிவித்து உள்ளார். காமன்வெல்த் காலிறுதிப் போட்டியில் இடது காலில் காயம் ஏற்பட்டது. ஐதராபாத் திரும்பியவுடன் ஸ்கேன் செய்ததில், இடது காலில் லேசான … Read more

இந்தியாவிற்கு இலங்கை துரோகம் செய்துள்ளது: ராமதாஸ்| Dinamalar

கொழும்பு: சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர அனுமதி அளித்து இந்தியாவிற்கு துரோகம் செய்துள்ளது என ராமதாஸ் கூறினார். சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் வரும் 16 ம் தேதி அம்பன்தோட்டா துறைமுகம் வருகிறது.இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும் எனவும் இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து … Read more

’வென்டிலேட்டர் அகற்றம்; எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பேசுகிறார்’ – தகவல்

நியூயார்க்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருக்கும் அவருக்கு வென்டிலேட்டர் அகற்றப்பட்டுவிட்டதாகவும், அவர் மருத்துவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடந்த இடமான சவுதாக்கா மையத்தின் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதேபோல் சல்மான் ருஷ்டியின் முகவர் ஆண்ட்ரூ வில்லியும் இத்தகவலை உறுதிசெய்து வாஷிங்டன் போஸ்ட் நாளேடுக்கு பேட்டியளித்துள்ளார். நடந்தது என்ன? எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, இந்திய நேரப்படி கடந்த … Read more

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல்: சகிப்புத்தன்மையின்மையின் விளைவா?

நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். இந்தத் தாக்குதலில், படுகாயமடைந்த சல்மான் ருஷ்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ள சல்மான் ருஷ்டியால் தற்போது பேச முடிந்தாலும், அவர் ஒரு கண் பார்வையை இழக்கும் அபாயம் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 75 வயதான ஒரு எழுத்தாளர் மீது இவ்வளவு கோபம் ஏன்? கொலை செய்யத்துணியும் அளவுக்கு, அவர் … Read more

ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு!| Dinamalar

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா விமான நிலையத்தில் இன்று (ஆக.,14) திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். கான்பெர்ரா விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதை தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அலற தொடங்கினர். அங்கிருந்த பயணிகள் வெளியேற்றிய போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்தனர். அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா விமான நிலையத்தில் இன்று (ஆக.,14) திடீரென துப்பாக்கிச் … Read more

'யு ஆர் நெக்ஸ்ட்!' – ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல்!

ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, 75, மீது, மர்ம நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், சல்மான் ருஷ்டிக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது, வெண்டிலேட்டர் உதவி … Read more

Salman Rushdie: சல்மான் ருஷ்டி உடல்நிலையில் முன்னேற்றம் – பேச முடியும் என தகவல்!

அமெரிக்காவில், கத்தியால் குத்தப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சல்மான் ருஷ்டி, 75. பிரபலமான எழுத்தாளராகிய இவர் எழுதிய, “சாத்தானின் வேதங்கள்” என்ற நூல், சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி, அவருக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பல்வேறு தரப்பினர் மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில், … Read more

அமெரிக்காவில் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார்?

நியூயார்க்: அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்ட இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு (75) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி அங்கேயே பள்ளிக் கல்வியை முடித்தார். பிரிட்டனில் கல்லூரி கல்வியை நிறைவு செய்தார். பின்னர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று அந்த நாட்டிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். சாத்தானின் கவிதைகள் இதுவரை 14 புத்தகங்களை எழுதியுள்ள சல்மான் ருஷ்டி, புக்கர் பரிசு உள்ளிட்ட உயரிய விருதுகளையும் வென்றுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டில் அமெரிக்க அரசு அவருக்கு … Read more