சீன உளவு கப்பல் இலங்கைக்கு வராது| Dinamalar

இலங்கை: ‘சீனாவின் உளவு கப்பல், திட்டமிட்டபடிஅம்பன் தோட்டாதுறைமுகத்துக்கு வராது’ என, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலை, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் ஆக., 11 – 17 வரை நிறுத் திவைக்க சீனா திட்டமிட்டது.விண்வெளி மற்றும் செயற்கைக்கோளை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலை இலங்கையில் நிறுத்துவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது. இதை ஏற்று, கப்பலை இலங்கை துறைமுகத்தில் … Read more

ஐ.நா.,வில் இந்தியா அளித்த முன்மொழிவை மீண்டும் நிறுத்தி வைத்து சீனா சேட்டை| Dinamalar

நியூயார்க்: பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அஸாரின் சகோதரரும், அந்த அமைப்பின் துணை தலைவருமான அப்துல் ரவுப் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா – அமெரிக்கா அளித்த கூட்டு முன்மொழிவை சீனா நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 2008 நவம்பரில், மஹாராஷ்டிராவின் மும்பை நகரில், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உலகையே அதிர்ச்சி அடைய … Read more

டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்தப்போவதாக ஜான்சன் & ஜான்சன் அறிவிப்பு

ஆயிரக்கணக்கான வழக்குகள் காரணமாக டால்கம் பேபி பவுடர் விற்பனையை உலக அளவில் நிறுத்த ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டால்கம் பேபி பவுடரில் உள்ள கனிமங்களால் புற்றுநோய் உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் மட்டும் 40 ஆயிரத்து 300 வழக்குகள் தொடுக்கப்பட்டதால், அமெரிக்காவிலும் கனடாவிலும் டால்கம் பேபி பவுடர் விற்பனையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டது. 2023ஆம் ஆண்டில் உலக அளவில் டால்கம் பேபி பவுடர் விற்பனையை நிறுத்தப் போவதாக இப்போது … Read more

ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் உரிமையாளருக்கு பொது மன்னிப்பு: தென் கொரிய அரசு உத்தரவு

சீயோல்: ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் உரிமையாளருக்கு தென் கொரிய அதிபர் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். சாம்சங் நிறுவனத்தின் உரிமையாளரும் பெரும் பணக்காரரான லீ ஜே யங். உலகின் 278வது பணக்காரர் லீ ஜே யங். கடந்த 2021 ஜனவரி மாதம் இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமானது. இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 2021ல் பரோலில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தென் கொரிய அதிபர் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி லீ ஜே … Read more

உக்ரைன் அணுமின் நிலையங்கள் அருகே தாக்குதல்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா கவலை

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 6 மாதங்களைக் கடந்துவிட்டது. இந்நிலையில் அங்கு அணுமின் நிலையங்கள் அருகே நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக உக்ரைனின் ஜாப்போரிஜியா அணுமின் நிலையத்தின் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அருகே நடந்த தாக்குதல் குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. நேற்று நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் கலந்து கொண்டார் அதில் பேசிய அவர், “நாங்கள் … Read more

குண்டு வெடிப்பில் ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி ஆப்கனில் உயிரிழப்பு

காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி உயிரிழந்துவிட்டதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தலிபான் வட்டாரங்கள் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாவது: ஆப்கன் தலைநகர் காபூலில் வியாழக்கிழமை நடைபெற்ற மதக்கூட்டத்தில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் ஹக்கானி கொல்லப்பட்டார். இதனை ஆப்கன் தலைநகர் உளவுத் துறை தலைவர் அப்துல் ரஹ்மான் நேரில் சென்று உறுதிப்படுத்தியுள்ளார். இவர் … Read more

உலக நாடுகள் முழுவதும் பரவினாலும் கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவிப்பு

யாங்யாங்: கரோனாவுக்கு எதிரான போரில் வடகொரியா வெற்றி பெற்றுவிட்டதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். வடகொரியாவில் கடந்த மேமாதம் கரோனா தொற்று பரவியது. ஒமிக்ரான் வகை கரோனா பாதிப்பு அங்கு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு நோய் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இது பற்றிய செய்திகள் அதிகம் வெளியாகவில்லை. அங்கு கரோனா பரிசோதனை வசதிகள் சரியாக இல்லாததால், கரோனா நோயாளிகளாக யாரும்அறிவிக்கப்படவில்லை. காய்ச்சல்ஏற்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டனர். வடகொரியாவில் மொத்தம்48 … Read more

சீனா அச்சுறுத்தல் குறையவில்லை – தைவான் தகவல்

தைபே: தைவான் அதிபர் ட்சாய் யிங்-வென் வியாழக்கிழமை கூறியதாவது: மோதல் மற்றும் சர்ச்சையை தூண்டும் வகையில் தைவான் எவ்வித நடவடிக்கையையும் மேற் கொள்ளவில்லை. எனினும், சீனாவிடமிருந்து வரும் ராணுவ அச்சுறுத்தல்கள் தற்போது வரை நின்றபாடில்லை. நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பில் நாங்கள் உறுதியுடன் செயல்படுவோம். ஒவ்வொருவரும் ஜனநாயகம், சுதந்திரத்தின் எல்லையை மதிக்க வேண்டும். இவ்வாறு ட்சாய் கூறினார். தைவான் நீரிணைப் பகுதிகளில் ராணுவ பயிற்சிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், வழக்கமான ரோந்துப் பணி மட்டும் நடைபெறும் என்றும் சீனா … Read more

“அவளின் கதைகள் என்னை ஊக்குவித்தன” – பாகிஸ்தான் தோழி பற்றி இந்தியப் பெண் நெகிழ்ச்சி பதிவு

வாஷிங்டன்: பாகிஸ்தான் தோழி பற்றி இந்தியப் பெண் ஒருவரின் நெகிழ்ச்சியான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பதிவை ‘இயர்லி ஸ்டெப்ஸ் அகாடமி’யின் தலைமை நிர்வாக அதிகாரி சினேகா விஸ்வாஸ் ‘லிங்கிடு இன்’ சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் தனது பதிவில் பாகிஸ்தானில் இருந்து வந்து ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் தன்னுடன் படித்த தனது வகுப்புத் தோழி பற்றி பேசியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் அப்பெண்ணுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் சினேகா பகிர்ந்து கொண்டுள்ளார். இப்பதிவில் இரு நாடுகளுக்கு … Read more

தொடர்ந்து ஓடும் ராஜபக்ச! சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சமடைந்தார்

இலங்கையில் இருந்து தப்பி சிங்கப்பூரில் அடைக்கல்ம் புகுந்த முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு சிக்கல்கள் அதிகரித்துள்ளன. கோட்டாபய ராஜபக்ச, வியாழன் அன்று (2022 ஆகஸ்ட் 11) வெகுஜன எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாய்லாந்திற்கு சென்றுள்ளார். கடந்த மாதம் தனது தீவு தேசத்தை விட்டு வெளியேறிய பின்னர் முதலில் சிங்கப்பூரில் இருந்த அவர், இரண்டாவதாக தென்கிழக்கு ஆசிய நாட்டில் தற்காலிகமாக தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து வெளியேறியதாக நகர-மாநில குடிவரவு அலுவலகம் … Read more