ஐ.நா.,வில் இந்தியா அளித்த முன்மொழிவை நிறுத்தி வைத்தது சீனா| Dinamalar

நியூயார்க்:பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அஸாரின் சகோதரரும், அந்த அமைப்பின் துணை தலைவருமான அப்துல் ரவுப் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா – அமெரிக்கா அளித்த கூட்டு முன்மொழிவை சீனா நிறுத்தி வைத்துள்ளது. சர்வதேச பயங்கரவாதி கடந்த 2008 நவம்பரில், மஹாராஷ்டிராவின் மும்பை நகரில், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.உலகையே அதிர்ச்சி … Read more

அடங்காத சீனா அனுப்பியது கப்பலைஇலங்கையை நெருங்கியது| Dinamalar

இலங்கை:இந்தியா மறுத்தும் கேட்காமல் சீன உளவு கப்பல் ‘யுவான் வாங் 5’ இலங்கை அம்பன்தோட்டா துறைமுகம் நோக்கி வந்துள்ளது. ஆனால் அந்த கப்பல் அம்பன்தோட்டாதுறைமுகத்துக்கு வராது என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலை, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் ஆக., 11 – 17 வரை நிறுத்திவைக்க சீனா திட்டமிட்டது. விண்வெளி மற்றும் செயற்கைக்கோளை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலை இலங்கையில் நிறுத்துவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு … Read more

தாய்லாந்து சென்றார் இலங்கை முன்னாள் அதிபர்| Dinamalar

சிங்கப்பூர்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு சென்றார். நம் அண்டை நாடான இலங்கையில் மக்களின் போராட்டங்களைத் தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டில் இருந்து தப்பினார். ஆசிய நாடான மாலத் தீவுகளுக்கு ஜூலை 13ம் தேதி சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற அவர் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அவருக்கு அந்நாட்டில் வழங்கப்பட்டிருந்த குறுகிய கால ‘விசா’ நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து கோத்தபய சிங்கப்பூரில் இருந்து … Read more

ரஷியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடு என பகிரங்கமாக அறிவித்த லாட்வியா!

பெர்லின். லாட்வியா நாட்டின் நாடாளுமன்றம் ரஷியாவை பயங்கரவாதத்திற்கு உறுதுணையாக ஆதரவளிக்கும் நாடாக பகிரங்கமாக அறிவித்துள்ளது. உக்கரைனில் அப்பாவி பொதுமக்கள் மீது ரஷியா கொடூர தாக்குதல் நடத்துவதாகவும், உலக பிற நாடுகளும் ரஷியாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்க வேண்டும் என லாட்வியா அழைத்துள்ளது. ரஷியா உக்ரைன் மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியும், அவர்களை தாக்கி அவர்கள் சிரமப்படுவதை கருவியாக பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் உக்ரைனை நிலைகுலையச் செய்ய ரஷியா முயற்சித்து வருகிறது. மேலும் ஒட்டுமொத்த உக்ரைனையும் நிலைகுலையச் … Read more

வங்கி ஊழியர்களை பணையக்கைதிகளாக சிறைவைத்த நபர்.. வங்கி கணக்கில் முடக்கப்பட்டுள்ள பணத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தல்..!

லெபனான் நாட்டில், துப்பாக்கியுடன் வங்கிக்குள் புகுந்த நபர் தனது வங்கி கணக்கில் முடக்கப்பட்டுள்ள 2 லட்சம் அமெரிக்க டாலர்களை விடுவிக்க கோரி ஊழியர்களை பணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். லெபனான் அரசு கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளதால் வங்கியில் இருந்து பணத்தை எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தந்தையின் மருத்துவச்செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் பெய்ரூட்டில் உள்ள பெடரல் வங்கிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த நபர், தனது பணத்தை கேட்டு 7 வங்கி ஊழியர்களை பணயக்கைதிகளாக சிறைபிடித்துள்ளார். அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு … Read more

கிரிப்டோகரன்சியில் இந்தியாவுக்கு 7வது இடம்| Dinamalar

நியூயார்க்:இந்திய மக்களில், 7.3 சதவீதம் பேர், ‘கிரிப்டோ கரன்சி’ எனப்படும், மெய்நிகர் நாணயங்கள் வைத்துள்ளனர். இதன் வாயிலாக, சர்வதேச அளவில் இந்தியா 7வது இடம் வகிக்கிறது.கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயங்கள் வைத்துள்ள நாடுகள் குறித்து, ஐ.நா.,வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு அறிக்கை வெளியிட்டது. அதன் விபரம்:கடந்த 2021ம் ஆண்டில் கிரிப்டோகரன்சி வைத்துள்ள நாடுகளின் பட்டியலில், 15 நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. இதில், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் முன்னிலை வகிக்கிறது. இங்கு வசிக்கும் 12.7 சதவீத … Read more

விரும்பும் இடத்திலிருந்து பணிபுரியலாம், குறைந்தபட்ச ஊதியம் ரூ.64 லட்சம்- ஊழியர்களை மகிழ்விக்கும் சிஇஓ

வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் கிராவிட்டி பேமண்ட்ஸ். இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி டான் பிரின்ஸ். இந்த நிறுவனம் கிரடிட் கார்டு சேவை உள்ளிட்ட நிதி சேவைகளை செய்து வருகிறது. இந்நிறுவனத்தில் தற்போது சுமார் 200 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் டான் பிரின்ஸ் தற்போது வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் பதிவில் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க … Read more

தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பாகிஸ்தான் சிறுவன்..!- செல்போன் மோகத்தால் ஏற்ப்பட்ட விபரீதம் ..!!

தற்போதைய இளம் தலைமுறையிடம் செல்போன் மோகம் அதிகரித்து உள்ளது. வளரும் பருவத்திலேயே செல்போன் உடன் வளர்கின்றனர். உறவுகளை கூட மறந்து செல்போனுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். தற்போதைய தலைமுறையினரிடம் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருவதுடன், ஆன்லைன் விளையாட்டு மோகமும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அடிமையான சிறுவர்கள் பலர் விபரீதமான பல செயல்களை செய்ததால் பல நாடுகளில் இதுபோன்ற விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானிலும் பப்ஜி விளையாட்டுக்கு சில ஆண்டுகள் … Read more

கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 7 போர் விமானங்கள் எரிந்து நாசம் என தகவல்!

மாஸ்கோ, ரஷியாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள ராணுவ விமான தளத்தில் கடந்த 9ம் தேதியன்று வெடி விபத்து ஏற்பட்டது. உக்ரைனின் தெற்கில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த, கிரிமியாவில் உள்ள சாகி ராணுவ விமான தளம் ரஷியாவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு நிலைகொண்டிருந்த ரஷிய போர் விமானங்கள் இந்த பயங்கர விபத்தில் தீக்கிரையாகின. அங்கு வெடிகுண்டுகள் வெடித்ததால் ராணுவ விமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், அங்கிருந்த போர் விமானங்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை … Read more

சீனாவில் வேலை இழந்த 10,000 ஊழியர்கள்..!- என்ன காரணம் தெரியுமா..?

உலக அளவில் தொழிலில் முக்கிய பங்கு ஆற்றும் நாடு சீனா. இந்நிலையில் சீனாவில் உள்ள அலிபாபா நிறுவனத்தில் சுமார் 10,000 ஊழியர்கள் வேலையிழக்க உள்ளனர். ஜூன் மாதத்தில் நிகர வருமானத்தில் 50 சதவீதம் சரிவை அலிபாபா தெரிவித்ததை அடுத்து இந்த பணிநீக்கங்கள் வந்துள்ளன. மந்தமான விற்பனை மற்றும் நாட்டின் பொருளாதாரம் மந்தமான நிலையில் செலவுகளைக் குறைக்கும் முயற்சி இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் 9,241 ஊழியர்களை விடுவித்துள்ளது. அதாவது நிறுவனத்தின் ஜூன் மாத … Read more