தாய்லாந்து செல்கிறார் கோத்தபய| Dinamalar

சிங்கப்பூர்: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரில் இருந்து கிளம்பினார். அவர் தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் விசாவை சிங்கப்பூர் அரசு நீடிக்காத நிலையில் அவர், தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.கோத்தபயவின் வருகை குறித்து தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா கூறுகையில், தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கியிருக்கும் போது அவர் எந்தவிதமான அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது எனக்கூறினார். சிங்கப்பூர்: இலங்கை முன்னாள் அதிபர் … Read more

கடும் காய்ச்சலால் கிம் ஜோங் உன் அவதி : கோவிட் பாதிப்பா ?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பியோங்யாங்: கோவிட்டிற்கு எதிரான போரை வெற்றிகரமாக எதிர்கொண்டுவிட்டோம் என வடகொரியா அறிவித்துள்ளது. அதே நேரம் அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன் கடுமையாக காய்ச்சலால் அவதியுற்றுவருவதாகவும் அவரது சகோதரி தெரிவித்துள்ளார். முதல் உலகம் முழுவதும் சுமார் 58.6 கோடி மக்கள் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64.2 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். கோவிட் தொற்றினை எதிர்கொள்வதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வெற்றிகரமாக கையாண்ட நிலையில், வடகொரியா தனது தன் பாணியில் … Read more

கோத்தபய ராஜ்பக்சேவுக்கு தற்காலிகமாக அடைக்கலம் தந்தது தாய்லாந்து அரசு

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்காலிகமாகத் தாய்லாந்தில் தங்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்ததால் அவர் கடந்த மாதம் 13-ந் தேதி விமானம் மூலம் மாலத்தீவு சென்றார். பின் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அவரது சிங்கப்பூர் விசா இன்றுடன் நிறைவடைவதால் தாய்லாந்து அரசிடம் அடைக்கலம் கோரினார். அவர் 90 நாட்கள் தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ள தாய்லாந்து அரசு, அதற்குள் அவர் வேறு ஒரு நாட்டில் புகலிடம் … Read more

நேபாளத்தில் ஒரே நேரத்தில் பரவும் கொரோனா & பன்றி காய்ச்சால்..! –மக்கள் பீதி..!

உலகம்முழுவதும் கொரோனா தொற்று பரவி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில்நேபாளத்தில் கொரோனாவும் பன்றி காய்ச்சலும் ஒரே நேரத்தில் பரவி மக்களை பீதி அடையச்செய்துள்ளது. நேபாளத்தில் சிலருக்கு ஒரே சமயத்தில்கொரோனா,பன்றிகாய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாககொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கொரோனாவின் வெவ்வேறு வேரியண்டுகளானடெல்டா, டெல்டா ப்ளஸ், ஒமைக்ரான், எச்என்1 போன்றவைமக்களிடையே தொடர்ந்து பரவி வருகின்றன. நேபாளத்தில்கொரோனா 4வது அலை ஏற்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 1090 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாள … Read more

முடிவுக்கு வந்தது போர் பதற்றம் | தைவான் எல்லையில் ராணுவ பயிற்சி நிறைவு பெற்றதாக சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: தைவான் எல்லையில் ராணுவப் பயிற்சிகள் முடிந்துவிட்டதாகவும், வழக்கமான ரோந்துப் பணிகளைத் திட்டமிட்டு வருவதாகவும் சீனா கூறியுள்ளது. முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இந்தப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை முடியும் என சீனா அறிவித்திருந்தது. சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் எனவும் தைவான் ராணுவமும் பதிலடி அளித்திருந்தது. இந்த நிலையில், … Read more

இந்தியாவின் வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.!

இந்தியாவின் வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக ஸ்பெயின் வளர்ந்து வருகிறது. 2 புள்ளி 5 பில்லியன் யூரோ செலவில் 56 ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா ஸ்பெயினுடன் கையெழுத்திட்டது. இந்தியா அதன் கடற்படை மற்றும் வான் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த ஸ்பெயினுடன் நெருக்கமாக செயல்படுகிறது. அதற்கு ஏற்ப ஸ்பெயினிடம் இருந்து ஐந்து கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க இந்தியா பரிசீலித்து வருகிறது.ஸ்பெயின் உட்பட பல நாடுகள் இதற்கான டெண்டரில் பங்கேற்கின்றன. Source link

குறைந்தபட்ச ஊதியமே ரூ.64 லட்சம் : ஊழியர்கள் கொண்டாடும் நிறுவனம்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கிராவிட்டி பேமண்ட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கிரடிட் கார்டு சேவை உள்ளிட்ட நிதி சேவைகளை செய்து வருகிறது.இந்நிறுவனத்தை லூகாஸ் மற்றும் Dan Price ஆகிய சகோதரர்கள் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கினர். Dan Price தற்போது இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.  இந்நிறுவனத்தில் சுமார் 200 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொடக்கம் முதலே ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கி வரும் Dan Price, தற்போது தனது நிறுவனத்தில் … Read more

இந்தியாவுக்கு சிறப்பு சலுகை: அமெரிக்கா விரைவில் முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : இந்தியாவுடனான நட்புறவை மதிக்கும் வகையில், மிகக் கடுமையான பொருளாதார தடை சட்டத்தில் இருந்து அதற்கு விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் முடிவு செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், ‘காட்சா’ என்ற சட்டம் அமெரிக்காவில் அமலில் உள்ளது. இதன்படி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா … Read more

'கரோனாவை வென்றுவிட்டோம்' – வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவிப்பு

பியாங்யாங்: வட கொரியாவில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு ஏற்படாத நிலையில் கரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டுவிட்டதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன். வட கொரியாவில் கிம் தான் சர்வாதிகார தலைவர். அவர் உத்தரவுப்படி மட்டுமே அனைத்தும் இயங்கும். அங்கே வெளிநாட்டு ஊடகங்கள் செயல்பட அனுமதியில்லை. ஆகையால் கேசிஎன்ஏ (KCNA) எனப்படும் அரசு ஊடகம் வெளியிடும் தகவல் தான் கிடைக்கக்கூடிய ஒரே ஆதாரம். இந்நிலையில் KCNA கேசிஎன்ஏ ஊடக செய்தியில், … Read more

கருந்துளைகளுக்குப் பின்னால் X-Ray கதிர்கள்: அவிழும் பிரபஞ்ச ரகசியம்!

800 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விண்மீனின் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளையில் இருந்து எக்ஸ் ரேகதிர்களை பகுப்பாய்வு செய்யும் போது, ஒரு விசித்திரமான வடிவம் இருப்பதை  ​​ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கவனித்தனர். இந்த கதிர்களை பிரபஞ்சத்தில் வெளியேற்றுவது கருந்துளை என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.  இந்த நிகழ்வை விளக்கும் விஞ்ஞானிகள், கருந்துளைகளில் வாயு அதிவேகமாக உள்ளே நுழையும் போது எரிப்பு ஏற்பட்ட பின்னர், அதிலிருந்து எக்ஸ்-ரே கதிர்வீச்சு ஏற்படலாம் என்று அனுமானிக்கின்றனர். கருந்துளையில் வாயு நுழையும்போது ஏற்படும் எரிப்புகள் … Read more