சீனாவில் புதிதாக 1,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 939 பேருக்கு … Read more

சீனாவிடம் கடன் பெறும் வளரும் நாடுகளுக்கு வங்காளதேச நிதி மந்திரி எச்சரிக்கை

டாக்கா, ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்தும் நோக்கில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2013 ஆம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு (The Belt and Road Initiative) திட்டத்தை செயல்படுத்துவாக அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் உலக நாடுகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும். சீனாவிற்கும் பிற நாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும். அதேபோல் கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி … Read more

விமான நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் சுட்டுக் கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். காலையில் விமான நிலையத்தின் 2F டெர்மினலுக்கு வந்த வீடற்ற ஒரு நபர் அங்கிருந்த பாதுகாவலர்களை தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து அங்கு போலீசார் வந்ததும் அந்த நபர், சத்தம் போட்டு கத்தியவாறு அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஆனால், மீண்டும் கத்தியுடன் வந்த அந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்டிய நிலையில், போலீசார் அவரை எச்சரித்துள்ளனர். எனினும் அந்த … Read more

எரிவாயு நுகர்வை 15% குறைக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு

பிரசல்ஸ், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை அங்கு போர் நடைபெற்று வரும் நிலையில், தாக்குதலை தொடங்கிய ரஷியாவின் மீது பல்வேறு உலக நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான எரிபொருளுக்கு ரஷியாவையே நம்பி இருக்க வேண்டியதாக உள்ளது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் 40 சதவீத இயற்கை எரிவாயு, 30 சதவீத எண்ணெய் மற்றும் சுமார் 20 சதவீத நிலக்கரி … Read more

இலங்கை காலிமுகத்திடலில் அதிபருக்கு எதிரான போராட்டம் – தற்காலிகமாக கைவிடுவதாக அறிவிப்பு

கொழும்பு, இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அன்றாட தேவைகளை பெற முடியாமல் மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளான நிலையில், அங்கு போராட்டம் வெடித்தது. இலங்கை அதிபர் மாளிகைக்கு எதிரே காலிமுகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அங்கேயே கூடாரங்களை அமைத்து தங்கினர். இதற்கிடையே இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோடினார். அதனை தொடர்ந்து இலங்கையின் … Read more

போருக்கு தயாராகிறதா தைவான்..? சீனா தைவான் எல்லையில் பரபரப்பு..!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பெலோசியின் தைவான் சுற்றுப்பயணம் உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் சீனா பெலோசியின் பயணத்தை கண்டித்தது . தைவான் எல்லையில் போர் பயிற்சியையும் மேற்கொண்டது சீன ராணுவம். இந்நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தைவான் ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டதால், தென் சீன கடல்பகுதியில்பதற்றம் அதிகரித்துள்ளது. ஆசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, கடந்த 3ம் தேதி சீனாவின் கடும் எச்சரிக்கையும் மீறி தைவான் நாட்டிற்குச் சென்றார். ஏற்கனவே … Read more

தைவானை சீனா தாக்குவது அத்தனை எளிதல்ல… அதற்கான காரணங்கள் இதோ

சீனா தைவான் எல்லை பிரச்சனை: அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அதற்கு வலுவாக கண்டனம் தெரிவித்த சீனா,   தைவானைச் சுற்றி ராணுவப் பயிற்சியைத் தொடங்கியது. தைவான் மற்றும் சீனா இடையே பல தசாப்தங்களாக பதற்றம் இருந்து வருகிறது. ஆனால் நான்சி பெலோசியின் வருகைக்குப் பிறகு தென் சீனக் கடலில் பதற்றம் வெகுவாக அதிகரித்துள்ளது. பெலோசியின் வருகைக்குப் பிறகு காட்சிகள் மாறின தைவான் சீனத் தாக்குதல்களைத் தவிர்க்கவும் சமாளிக்கவும் முயன்று … Read more

தலிபான் ஆட்சியின் ஓர் ஆண்டு: துயரத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு ஆன நிலையில், அந்நாட்டில் நோயும், பசியும், துயரும் மட்டுமே நிறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், … Read more

கொரோனாவுக்கு ரெஸ்ட்: சீனாவில் புது வகை வைரஸ் கண்டுபிடிப்பு!

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றைப் போன்று லாங்யா என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவியது. இந்த வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியதை யாராலும் மறக்க முடியாது. கொரோனா அச்சம் காரணமாக, சுமார் 6 மாதங்களுக்கும் மேல், … Read more

அதிர்ச்சியில் ஊழியர்கள்! 200 பேரை பணி நீக்கம் செய்த Microsoft

சான் பிரான்சிஸ்கோ: கிட்டத்தட்ட 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்த சில மாதங்களுக்குப் பிறகு, சத்யா நாதெள்ளாவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முறை அதன் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட R&D திட்டங்களில் ஒன்றிலிருந்து பணி நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்டின் மார்டன் லைஃப் எக்ஸ்பிரியன்ஸ் (MLX) குழுவில் கூடுதல் பணி நீக்கம் அதிகரித்துள்ளன என்று பிசினஸ் இன்சைடர் அறிக்கை முதலில் குறிப்பிட்டது. இந்த பிரிவு 2018 ஆம் ஆண்டில் … Read more