தலிபான் ஆட்சியின் ஓர் ஆண்டு: துயரத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு ஆன நிலையில், அந்நாட்டில் நோயும், பசியும், துயரும் மட்டுமே நிறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், … Read more

கொரோனாவுக்கு ரெஸ்ட்: சீனாவில் புது வகை வைரஸ் கண்டுபிடிப்பு!

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றைப் போன்று லாங்யா என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவியது. இந்த வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியதை யாராலும் மறக்க முடியாது. கொரோனா அச்சம் காரணமாக, சுமார் 6 மாதங்களுக்கும் மேல், … Read more

அதிர்ச்சியில் ஊழியர்கள்! 200 பேரை பணி நீக்கம் செய்த Microsoft

சான் பிரான்சிஸ்கோ: கிட்டத்தட்ட 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்த சில மாதங்களுக்குப் பிறகு, சத்யா நாதெள்ளாவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முறை அதன் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட R&D திட்டங்களில் ஒன்றிலிருந்து பணி நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்டின் மார்டன் லைஃப் எக்ஸ்பிரியன்ஸ் (MLX) குழுவில் கூடுதல் பணி நீக்கம் அதிகரித்துள்ளன என்று பிசினஸ் இன்சைடர் அறிக்கை முதலில் குறிப்பிட்டது. இந்த பிரிவு 2018 ஆம் ஆண்டில் … Read more

சீனாவை சீண்டும் அமெரிக்கா..! – ஏன்…எதற்காக தெரியுமா..?

ஆரம்பம் முதலே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏழாம் பொருத்தம் நிலவி வருகிறது. இந்நிலையில் செமி கண்டக்டர் எனும் மின் சாதனா தயாரிப்பில் இருவருக்கும் போட்டி துவங்கியுள்ளது . உலகளாவிய அளவில் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையானது நிலவி வருகின்றது. இதனால் பல்வேறு துறைகளில் சவாலான நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக சிப் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் வாகனங்கள் உற்பத்தி, மின் சாதனங்கள் உற்பத்தியில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இன்னும் … Read more

Viral News: ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.63 லட்சம் சம்பளம் தரும் SUPER நிறுவனம்

கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக, உலகின் பெரும்பாலான நாடுகள் மெதுவாக பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்கின்றன. அதன் விளைவு நீண்ட நேரம் தெரியும். பெரும்பாலான நிறுவனங்கள் செலவுகளை மிச்சப்படுத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன, பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளன. ஆனால் இத்தனைக்கும் நடுவில் இந்த இரண்டு விதமான அதிர்ச்சி எதையும் கொடுக்காமல் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே இருக்கும் ஒரு நிறுவனம் உள்ளது என்றால் ஆச்சர்யமகா உள்ளது இல்லையா. ஆம், அந்த … Read more

சீனா Vs தைவான் – மற்ற நாடுகள் விலகி நின்று வேடிக்கை பார்த்தால்..?

ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டு, வறுமையற்ற வளர்ச்சி நிலையை எட்டிப்பிடித்திருக்கும் நாடு தைவான். சீனாவுடன் தொடக்கத்திலிருந்தே தொடரும் முரண்பட்ட உறவு, எப்போது போர் மேகங்கள் சூழுமோ என்கிற அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகளின் பகையை எதிர்கொள்ளும் எந்தவொரு நாடும், இன்றைக்கு உக்ரைன் எதிர்கொண்டுள்ள நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது எழுதப்படாத விதியாகத் தொடர்கிறது. ஒருவேளை, தைவானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் சீனாவிடமிருந்து தாக்குதல்கள் நேரலாம் என்று அஞ்சியிருக்க வேண்டியதில்லை என்பதுதான் … Read more

அரசியல் பழிவாங்கலா? – அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் வீட்டில் எஃப்பிஐ சோதனை

வாஷிங்டன்: புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப்பிஐ அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் அத்துமீறல்கள் நடந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் தனது வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டியை அதிகாரிகள் உடைத்ததாகவும் ட்ரம்ப் கூறியிருக்கிறார். இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “புளோரிடாவில் உள்ள எனது மார்-எ-லாகோ இல்லம் திங்கட்கிழமை இரவு எஃப்பிஐ அதிகாரிகளால் சூழப்பட்டது. என் வீட்டில் இருந்த ஆவணங்களை எல்லாம் அவர்கள் சோதித்தார்கள். எனது பாதுகாப்பு பெட்டி உடைக்கப்பட்டது. ஆவணங்கள் தொடர்பாக … Read more

பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது இரட்டை நிலைப்பாடுகள் கூடாது: ஐ.நா.,வுக்கான இந்திய தூதர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது இரட்டை நிலைப்பாடுகள் இருக்க கூடாது என ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளார். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்களால் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ருசிரா கம்போஜ் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: உலகின் மிகவும் மோசமான மற்றும் பயங்கரவாதிகள் … Read more

இலங்கையில் மின்சார கட்டணம் கடும் உயர்வு.. இன்று முதல் அமல்!

இலங்கையில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அங்கு யூனிட்டுக்கு 75 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தினர் இனிமேல் 198 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 9 வருடங்களுக்கு பிறகு ஏற்றப்பட்ட இந்த கட்டண உயர்வுக்கு இலங்கை மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.  Source link

பயங்கரவாதிகளை காப்பாற்றும் சீனா – பாகிஸ்தான்; ஐநாவில் இந்தியா காட்டம்

சர்வதேச தடைகளில் இருந்து பாகிஸ்தான் பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கியை காப்பாற்றிய சீனா மற்றும் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டத்தில், “உலகின் மிகவும் மோசமான பயங்கரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கது” என்று இந்தியா கூறியது. இத்தகைய இரட்டைத் தரநிலைகள் பாதுகாப்புச் சபையின் பொருளாதாரத் தடைகள் மீதான நம்பகத்தன்மையை எப்போதும் இல்லாத அளவிற்குக் குறைத்துள்ளன என இந்தியா சாடியுள்ளது. பயங்கரவாதிக்கு … Read more