ராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க நிர்வாண படங்கள் வீடியோக்களை அனுப்பும் உக்ரைன் பெண்கள்

கீவ் ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 160 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் ராணுவம் வீரத்துடன் போராடி வருகிறது. உக்ரைன் பெண்கள் புதினின் ராணுவத்துடன் போரிடும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்களின் கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர். உக்ரைன் பெண்கள் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்கு நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, இதெல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது. ராணுவ வீரர்களின் மன உறுதியை உயர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு … Read more

இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: குழந்தைகள் உட்பட 51 பேர் பலி!

பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவர் உட்பட 51 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள போராளிகள் குழுவுக்கும் இடையே பல ஆண்டு காலமாக மோதல் நீடித்து வரும் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் கடுமையான வான் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் காசா நகரில் உள்ள பல கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த தாக்குதலில் … Read more

ரஷ்ய வீரர்கள் பயன்படுத்தக்கூடிய 2 பாலங்கள் மீது உக்ரைன் படைகள் ஏவுகணை தாக்குதல்

நிப்ரோ ஆற்றை கடக்க ரஷ்ய வீரர்கள் பயன்படுத்தக்கூடிய 2 பாலங்கள் மீது உக்ரைன் படைகள் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தியுள்ளன. மெலிட்டோபோல் நகரை கைப்பற்றியுள்ள ரஷ்ய படைகள், அந்த 2 பாலங்கள் வழியாக உக்ரைனின் தென் பகுதியை அடையத் திட்டமிட்டிருந்தன. அதிகாலை வேளை, அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஹிம்மர் ஏவுகணைகளை பயன்படுத்தி அந்த பாலங்கள் மீதும், ரஷ்ய நிலைகள் மீதும் உக்ரைன் ராணுவத்தினர் தாக்குதல் நிகழ்த்தினர். ஏராளமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதுடன், ஆயுதங்களும் அழிக்கப்பட்டதாக மெலிட்டோபோலில் இருந்து தப்பி வந்த … Read more

உ.பி., அமைச்சருக்கு ஒரு ஆண்டு சிறை

கான்பூர் :சட்டவிரோதமாக ஆயுதங்களை பிரயோகித்த வழக்கில், உத்தர பிரதேச அமைச்சர் ராகேஷ் சச்சனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சராக இருப்பவர் ராகேஷ் சச்சன். இவர் மீதான சட்டவிரோதமாக ஆயுதங்களை பயன்படுத்திய வழக்கில், 30 ஆண்டுகளாக விசாரணை நடந்தது. இதில், இவருக்கு 6ம் தேதி ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விபரத்தை அறிந்தவுடன், நீதிமன்றத்தில் … Read more

திருநங்கை, திருநம்பி தம்பதிக்கு பிறந்த குழந்தை..! குழப்பத்தில் மக்கள் – மருத்துவர்கள் விளக்கம்

கொலம்பியா, டான்னா சுல்தானா ஒரு கொலம்பிய மாடல் ஆவார், தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அவர் ஆணாக பிறந்தார், ஆனால் இப்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார், ஒரு திருநங்கை ஆவார். அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார், ஒரு திருநம்பி ஆவார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர். அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியிருந்தாலும் அவரது உடலில் … Read more

காசா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 51 பேர் பலியானதாக தகவல்!

காசா, இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள போராளிகள் குழுவுக்கும் இடையே பலகாலமாக மோதல் நீடித்து வரும் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் கடுமையான வான்தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் காசா நகரில் உள்ள பல கட்டிடங்கள் தரைமட்டமாகின. இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவர் தைசிர் அல் ஜபாரி உள்பட இதுவரை 51 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் பாதுகாப்பு … Read more

இஸ்ரேல் – பாலஸ்தீன குழு இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம்! 3 நாட்களாக நிலவிய பதற்றத்திற்கு முடிவு

டெல் அவிவ், இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே, கடந்த 3 நாட்களாக நிலவிய போர் பதற்றம் முடிவுக்கு வந்தது. எகிப்து மேற்பார்வையில் இரவு 11 மணியளவில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலானது.இதன்மூலம், கடந்த 3 நாட்களாக நிலவிய பதற்றம் முடிவுக்கு வந்தது.இதனை இருதரப்பும் உறுதிபடுத்தியுள்ளன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் … Read more

நெதர்லாந்து வாலிபர் கின்னஸ் சாதனை… அப்படி என்ன செய்தார் தெரியுமா?

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டான் பிரவுனி, அர்ஜென் ஆல்பர்ஸ் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். யுடியூப் சேனல் ஒன்றை நடத்திவரும் இவர்கள், உடற்பயிற்சியிலும் தீராத தாகம் கொண்டவர்கள். அன்றாடம் தாங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சியின் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளனர். பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் உள்ள ஹொவெனன் விமான தளத்தில் இந்த சாதனையை இவர்கள் படைத்துள்ளனர். அங்கு ஹெலிகாப்டர் ஒன்று குறிப்பிட்ட அடி உயரத்தில் ஒரே நிலையில் அசையாமல் பறந்து கொண்டிருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அதன் அடிப்பகுதியில் … Read more

ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் தெஹ்ரிக் இ தாலிபன் பாகிஸ்தான் அமைப்பின் கமாண்டர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் தெஹ்ரிக் இ தாலிபன் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் உயிரிழந்தார். அமெரிக்காவின் தேடப்பட்ட பட்டியலில் இருந்த உமர் காலித் கொரசனி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 3 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆப்கானின் பக்டிகா மாகாணத்தில் உமர் காலித் கொரசனி சென்ற கார், சாலையோர குண்டுவெடிப்பில் வெடித்து சிதறியது. இதில், அந்த பயங்கரவாதி உள்பட மூன்று கமாண்டர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் … Read more

தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : நம் அண்டை நாடான சீனா, தைவான் ஜலசந்தியில், நான்கு நாட்களுக்கு அறிவித்திருந்த போர் பயிற்சியை ஐந்தாவது நாளாக நேற்றும் நடத்தியது.தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, தங்கள் நாட்டுடன் இணைக்க, நம் அண்டை நாடான சீனா முயற்சித்து வருகிறது. ஆனால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கிறது. சமீபத்தில், அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்தார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடந்த 4ம் தேதி … Read more