தைவானுக்கு அமெரிக்க அதிகாரிகள் செல்வதை சீனாவால் தடுக்க முடியாது – சபாநாயகர் நான்சி பெலோசி!

தைவானுக்கு அமெரிக்க அதிகாரிகள் செல்வதை சீனாவால் தடுக்க முடியாது என்று அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். ஆசிய சுற்றுப் பயணத்தின் இறுதியாக ஜப்பான் சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். தனது பயணம் தைவான் தீவை தனிமைப்படுத்தும் நோக்கத்தில் இல்லை என்றும் அமைதியை நிலைநாட்டும் நோக்கத்தில் மட்டும் இருப்பதாகவும் கூறினார். மேலும், தைவான் வளர்ச்சிக்கு அமெரிக்கா அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் எனக் குறிப்பிட்ட நான்சி பெலோசி, சீனாவின் வர்த்தக ஒப்பந்தங்கள் மீறல், ஆயுதங்களின் பெருக்கம் மற்றும் … Read more

வெள்ளை மாளிகையை அலறவிட்ட மின்னல்; வந்தது பெரிய ஆபத்து!

அமெரிக்க அதிபர் மாளிகையான வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை எப்போதும் பலத்த பாதுகாப்புடன் காணப்படும். இதைச் சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் மிக பிஸியாக இருக்கும். குறிப்பாக வெள்ளை மாளிகையின் வடக்கே 7 ஏக்கரில் Lafayette Square என்ற பூங்கா அமைந்துள்ளது. இது பொதுமக்கள் வருகையால் பிஸியான பகுதியாக இருக்கிறது. அதுவும் கோடைக் காலங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இந்த சூழலில் நேற்று மாலை அதிபரின் குடியிருப்பு மற்றும் அலுவலகம் அருகே உள்ள பகுதியில் திடீரென வானிலிருந்து மின்னல் … Read more

வட கொரியாவில் யாருக்குமே காய்ச்சல் இல்லை! இதென்ன புதுக்கதை?

சியோல்: கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வட கொரியாவில் தற்போது  யாருக்குமே காய்ச்சல் இல்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவில் ஜூலை 30ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக காய்ச்சல் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது. சில மாதங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுவந்த நாட்டில்  4.77 மில்லியன் காய்ச்சல் நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளதாக வட கொரியா கூறுகிறது, அதே நேரத்தில் ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து 74 பேர் இறந்துள்ளனர். இருப்பினும், கோவிட் நோயால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதை வடகொரியா … Read more

சீக்கியர் தலைப்பாகை பறிமுதல்அமெரிக்க அமைப்புக்கு கண்டனம்| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்காவில் மெக்சிகோ எல்லையில் நுழைய முயன்ற சீக்கியர்களை தலைப்பாகையை அகற்றி சோதனை நடத்தப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் பலர் தஞ்சம் கேட்டு வருகின்றனர். எல்லையில் வரும் அகதிகளை அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு சோதனை செய்கிறது. கடந்த மாதத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் இவ்வாறு மெக்சிகோ வழியாக வந்த 50 சீக்கியர்களை தலைப்பாகையை அகற்றச் சொல்லி பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அந்த தலைப்பாகைகள் பறிமுதல் … Read more

1200 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவில் பாக்.,கில் மீட்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாகூர் : பாகிஸ்தானில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹிந்து கோவிலை ஆக்கிரமித்திருந்த கிறிஸ்தவ குடும்பத்தினரிடம் இருந்து நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூரில் அனார்கலி பஜார் என்ற இடத்தில் வால்மீகி கோவில் உள்ளது. இது 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் என கூறப்படுகிறது. இந்த கோவிலை கிறிஸ்தவ குடும்பம் ஒன்று கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமித்தது. அவர்கள் ஹிந்து … Read more

பாரா பளுதூக்குதலில் சுதிர் அசத்தல்| Dinamalar

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டி பாரா பளுதூக்குதலில் கலந்து கொண்ட இந்திய வீரர் சுதிர், இந்தியாவுக்கு 6வது தங்கப் பதக்கத்தை பெற்றுத்தந்தார். நீளம் தாண்டுதலில், வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான பாரா பளுதூக்குதலில் கலந்து கொண்ட இந்திய வீரர் சுதிர் 134.5 புள்ளிகள் எடுத்து, புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை கைபற்றினார். நடப்பு காமன்வெல்த் போட்டியில், … Read more

கனவு நனவான தருணம் : ஒரே விமானத்தில் விமானியான தாய் – மகள்

ஹோலி என்ற பெண்மணி தனது கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் அமெரிக்காவின் சவுத் வெஸ்ட் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக தனது விமானப் பயணத்தைத் தொடங்கினார். ஒரு விமானி ஆக வேண்டும் என விரும்பிய அவர், தனது மகள் கெல்லிக்கு இரண்டு வயதாக இருந்தபோது, விமானி ஆவதற்குப் பயிற்சி மேற்கொண்டார்.  அவருக்கு கெல்லி உட்பட 3 குழந்தைகள் இருந்தாலும் ஹோலி தனது கனவைக் கைவிடவில்லை.  ஹோலி கடந்த 18 வருடங்களாக விமானியாகப் பணியாற்றி வருகிறார். தாயைக் கண்டு தானும் விமானி … Read more

கோவிட்-19 தடுப்பூசியால் மரணம்! இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையில் தொடர்பு உறுதி

SARS-CoV-2 vs Guillain-Barre Syndrome: தென்னாப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் பதிவு செய்யப்பட்ட மரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழந்தவர், தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் என்றும், அவர் குய்லின்-பாரே சிண்ட்ரோம் எனப்படும் அரிய நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர் என்றும், தென்னாப்பிரிக்காவின் சுகாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. நோயாளியின் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையே தொடர்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்த சுகாதார கண்காணிப்பு … Read more

இலங்கை துறைமுகத்துக்கு வருகிறது சீன ஆய்வு கப்பல் – தீவிரமாக கண்காணிக்கிறது இந்தியா

புதுடெல்லி: சீனாவின் ஆய்வு கப்பல் யுவான்வாங்-5, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வருவதை, தீவிரமாக கண்காணிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. சீனாவின் ஆய்வு கப்பல் யுவான் வாங் 5-ல் பல நவீன ரேடார்கள், ஆய்வுக் கருவிகள் உள்ளன. இது ராணுவத் தளங்கள், அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றை கண்காணிக்கும் திறன் படைத்தது. இந்த கப்பல் இலங்கையில் சீனாவால் இயக்கப்படும் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. வரும் 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை இந்த கப்பல் அம்பன்தோட்டா துறைமுகத்தில் … Read more

சீனா போர் தொடுத்தால் எதிர்கொள்ளத் தயார் – தைவான் ராணுவம் பகிரங்க அறிவிப்பு

தைபே: தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இதையடுத்து, சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று தைவான் ராணுவம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த 1911-ம் ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசியக் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. 1927-ம் ஆண்டில் ஆளும் கட்சிக்கு எதிராக, சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. இதன்காரணமாக 1949-ம் ஆண்டு வரை சீனாவில் உள்நாட்டுப் போர் நீடித்தது. இந்தப் போரில் … Read more