'கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்!' – தைவானுக்கு அமெரிக்கா ஆறுதல்!

தைவானை அமெரிக்கா கைவிடாது என, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி தெரிவித்து உள்ளார். அண்டை நாடான சீனா, தைவான் நாட்டை, தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறி வருகிறது. இதற்கு தைவான் அரசு மறுப்புத் தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், தனது படைகளைக் கொண்டு தைவான் நாட்டை சீனா அவ்வப்போது பயமுறுத்தியும் வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையே, அமெரிக்க நாடாளுமன்ற … Read more

“தைவானுக்கு அமெரிக்க ஆதரவு உண்டு” – நான்சி பெலோசி உறுதி | சீனாவின் கோபமும் எதிர்வினைகளும்

தைபே: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது வரலாற்று சிறப்புமிக்க தைவான் பயணத்தில், ‘தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவு உள்ளது.’ என தெரிவித்திருந்தார். நான்சியின் இந்தப் பேச்சு சீனாவைக் கடும் கோபமடையச் செய்துள்ளது. நான்சியின் வருகை காரணமாக நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தைவானைச் சுற்றி நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகள் உட்பட முக்கிய ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என சீனா அறிவித்திருக்கிறது. இதனால், தைவான் தீவை சுற்றி பதற்ற நிலை நிலவுகிறது. சீனாவிற்கு பதிலடியாக தைவான் … Read more

புடின் காதலியின் சொத்துக்கள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா!

ரஷ்யா-உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவின் ஆதிக்கம் மற்றும் செல்வாக்கு நிறைந்தவர்களை குறி வைத்து, அமெரிக்கா பொருளாதார தடை விதித்து வருகிறது. அந்த வகையில், விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என கூறப்படும், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவின் விசாவை பிடன் நிர்வாகம் முடக்கியுள்ளதாகவும், அவரது சொத்துகள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளதாகவும் அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.   உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஆதரிக்கும் ரஷ்ய ஊடக … Read more

சினமடைந்த சீன ராணுவம் பயிற்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தைபே: அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவின் பலத்த எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு சென்றுள்ளார். இதனால், கோபமடைந்த சீனா, அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியதுடன், தைவானை சுற்றி ராணுவ பயிற்சியில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது. கடந்த 1949ல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தைவானும் பிரிந்தன. ஆனால் தன்னாட்சி பெற்ற நாடான தைவானை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனிடையே அமெரிக்க பார்லி சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் … Read more

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக பெண் அதிகாரி பொறுப்பேற்பு: இதுவே முதல்முறை

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக பெண் அதிகாரி ஒருவர் முதன்முறையாக பொறுப்பேற்றுள்ளார். 1987ஆம் ஆண்டு பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரியான ருச்சிரா கம்போஜ் தான் இந்தப் பதவிக்கு தேர்வாகியுள்ளார். இவர் கடைசியாக பூடானுக்கான இந்திய தூதராக இருந்தார். இந்நிலையில் ஜூன் மாதம் அவர் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக அப்பதவியில் இருந்த டி.எஸ்.திருமூர்த்தியின் பதவிக்காலம் முடிந்த நிலையில் ருச்சிரா கம்போஜ் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து ருச்சிரா கம்போஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், … Read more

ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்து.. ராணுவ துணை தளபதி உட்பட அதிகாரிகள் 6 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் ராணுவ துணை தளபதி உட்பட 6 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். பலுசிஸ்தானின் லாஸ்பேலா பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மூசா கோத் அருகே கீழே விழுந்தது. இந்த விபத்தில் ராணுவ துணை தளபதி, கடலோர காவல் படையின் டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட 6 … Read more

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவான் சென்றார் நான்சி பெலோசி..!

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார். தைவானில் தரையிறங்கும் போது விமானப்படை ஜெட் விமானங்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தன. பல்வேறு ஆசிய நாடுகளுக்கு சுற்றுபயணத்தை தொடங்கியிருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவின் கடும் எதிப்பையும் மீறி நேற்று இரவு தைவான் சென்றடைந்தார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா உயர்மட்ட தலைவர் ஒருவர் தைவான் செல்வது இதுவே முதல்முறையாகும். தைவானை சீனா தங்களது நாட்டின் ஒரு பகுதியாக … Read more

தாய்லாந்தின் புதிய கஞ்சா கொள்கையால் நாட்டில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Cannabis in Thailand: தாய்லாந்தில் மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்கியதன் விளைவாக அந்த நாட்டின் சுற்றுலாவில் மிகப் பெரிய அளவில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைக் கொண்டாடும் பல நிகழ்வுகள் தாய்லாந்தில் களைகட்டியுள்ளன. உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் களிப்புடன் தாய்லாந்திற்கு வருகை தருகின்றனர். 2018 ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியாவில் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு தாய்லாந்து ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக மரிஜூவானாவை மருத்துவ பயன்பாட்டிற்காக சட்டபூர்வம் ஆக்கிய தாய்லாந்து, இந்த ஆண்டு, … Read more

பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தி அய்மான் அல் ஜவாஹிரி கொலை..!

அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியை கொலை செய்ய பாகிஸ்தான் வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தியதாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் உள்பட பல்வேறு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட 71 வயதான அய்மான் அல் ஜவாஹிரி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் பதுங்கியிருந்தபோது, டிரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்த ட்ரோன் பாகிஸ்தான் வான்வெளி வழியாக சென்றதாகவும், தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அனுமதி … Read more

கோத்தபயவுக்கு சிறப்பு சலுகையில்லை: சிங்கப்பூர் அரசு திட்டவட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர் : ‘இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிறப்பு சலுகைகள் கூடுதல் பாதுகாப்பு அரசு முறையிலான விருந்தோம்பல் ஆகிய எதுவும் வழங்கப்படவில்லை’ என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மக்களின் போராட்டத்திற்கு பயந்து கடந்த மாதம் மாலத்தீவிற்கு தப்பியோடினார்.பின் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று தன் ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பினார். இந்நிலையில் சிங்கப்பூர் பார்லி.யில் வெளியுறவு துறை அமைச்சர் … Read more