அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் அல்-காய்தா தலைவர் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டார்

காபூல்: அல்-காய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அல்-காய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடன் 2011ல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். அதன்பின் அல்-காய்தா அமைப்பை வழிநடத்தி வந்தார் அல்- ஜவாஹிரி. இவர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். சில நேரங்களில் குறிப்பாக, இந்திய விவகாரங்களில் வீடியோக்களில் தோன்றி பேசிவந்தார். … Read more

லிபியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்து சிதறி விபத்து.. 9 பேர் உயிரிழப்பு – 16 பேர் கவலைக்கிடம்..!

வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். லிபியாவின் மத்திய நகரமான பென்ட் பய்யாவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி கவிழ்ந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மக்கள் லாரியில் கசிந்த பெட்ரோலை எடுப்பதற்காக எச்சரிக்கையையும் மீறி சென்றனர். அப்போது, அந்த லாரி வெடித்து சிதறியதில் 76 பேர் படுகாயமடைந்தனர். Source link

ரூ.990 கோடி வரி விதிக்க முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்-பாக்., நிதி நெருக்கடியை சமாளிக்க கூடுதலாக, 990 கோடி ரூபாய் அளவிற்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான பாக்., இன்னொரு அண்டை நாடான இலங்கையை போல அன்னியச் செலாவணி பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச நிதியம் ஆகியவற்றுக்கு தர வேண்டிய நிலுவையை தர முடியாமல், பாக்., திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த … Read more

காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்கள் ஒன்பதாக உயர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பிர்மிங்ஹாம்: பிர்மிங்ஹாமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நான்காவாது நாளாக நடந்த விளையாட்டு போட்டியில் ஜூடோ ஆடவர் பிரிவில் விஜய் வெண்கலமும், ஜூடோ பெண்கள் பிரிவில் சுசீலா வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர். எடை தூக்கும் போட்டியில் 71 கிலோ ஆடவர் பிரிவில் கர்ஜிந்தர் கவுர் வெண்கல பதக்கம் வென்றார். இதையடுத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களும், … Read more

டை அணிவதை கைவிட ஸ்பெயின் பிரதமர் உத்தரவு| Dinamalar

மாட்ரிட்-”வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்கவும், எரிசக்தியை சேமிக்கவும், அமைச்சர்கள் ‘டை’ அணிவதை கைவிட வேண்டும்,” என, ஸ்பெயின் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஐரோப்பாவில், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, கடும் வெப்பம் நிலவுகிறது. வெப்பம் தாங்காமல், 1,000த்திற்கும் அதிகமானோர் இறந்து உள்ளனர்.இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்கவும், எரிசக்தியை சேமிக்கவும், கழுத்தில் ‘டை’ அணிவதை கைவிட்டுள்ளார். அத்துடன், அனைத்து அமைச்சர்களும், தனியார் நிறுவன அதிகாரிகளும், டை அணிவதை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.”டை … Read more

பாக்.கில் உயரதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மாயம்| Dinamalar

பலுசிஸ்தான்: பாகிஸ்தானில் உயர் அதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீரென மாமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெல்லாவிலிருந்து சில உயர் அதிகாரிகளுடன் ராணுவ ஹெ லிகாப்டர் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென மாயமானது. சுமார் 5 மணி நேரமாக தேடியும் ஹெலிகாப்டர் இருக்குமிடத்திற்கான சிக்னல் கிடைக்கவில்லை. ஹெலிகாப்டரில் 6 காமாண்டர்கள் 6 வீரர்கள் என 12 பேர் பயணித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹெ லிகாப்டரை தேடும் பணி நடப்பதாக கூறப்படுகிறது. பலுசிஸ்தான்: … Read more

போராட்டக்காரர்கள் எரித்துவிட்டதால், தனக்கு வீடு இல்லை – ரணில் விக்ரமசிங்கே

போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், தான் செல்ல வீடு ஏதும் இல்லை என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர், பிரதமர் இல்லங்களை சேதப்படுத்தி தீக்கிரையாக்கினர். இது குறித்து பேசிய ரணில், தன்னை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டக்காரர்கள் சிலர் மிரட்டல் விடுப்பதாகவும், அவர்கள் தனது வீட்டை சீரமைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார். Source link

ரஷ்யப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக உள்ளது – ஐஎம்எப்

ரஷ்யப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகச் செயல்படுவதாகப் பன்னாட்டுப் பண நிதியம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போரையடுத்து மேலை நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் ரஷ்யாவைத் தண்டிக்கவும் தனிமைப்படுத்தவும் முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளது. அதன் விளைவு நேர்மாறாக அமைந்துவிட இப்போது மேலைநாடுகள் பணவீக்கத்துடன் போராடிப் பொருளாதார மந்த நிலையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மறுபுறம் ரஷ்யா புதிய வணிகக் கூட்டாளிகளை உருவாக்கி வருவதுடன் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் வெற்றிபெற்றுள்ளதாகப் பன்னாட்டுப் பண நிதியம் தெரிவித்துள்ளது.  Source link

நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொண்டால்… அமெரிக்காவை மிரட்டும் சீனா

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி திங்களன்று சிங்கப்பூரில்,  ஆசியா சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இந்நிலையில், சீனா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றால் ” ராணுவம் சும்மா இருக்காது” என்று மிரட்டியுள்ளது. பெலோசியின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தது. அதில் தைவான் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனினும் ஊகத்தின் அடிப்படையில் சீனா இவ்வாறு மிரட்டியுள்ளது.   தைவான் சீனாவின் … Read more

அமெரிக்க பிரதிநிதி தைவானுக்கு பயணம் மேற்கொண்டால் சீன ராணுவம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது – சீனா எச்சரிக்கை!

பீஜிங், சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க பிரதிநிதி நான்சி பெலோசி தைவானை பார்வையிடச் சென்றால் சீன ராணுவம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று கூறி இருக்கிறது. சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் மூன்றாம் நிலை உயர் அதிகாரியாக பதவி வகிக்கும் நான்சி பெலோசி, சீனாவின் அண்டை நாடான தைவான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியானது. இதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. … Read more