ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இளவரசர் சார்லஸ் பணம் பெற்றாரா? பரபரப்பு தகவல்

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன். அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான பின்லேடனை, கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்கா சுட்டுக்கொன்றது. சர்வதேச அளவில் பயங்கரவாதியாக அறியப்பட்ட பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒசாமா பின்லேடனினின் சகோதரர்களான பாக்ரி மற்றும் ஷாஃபீக்கிடம் இருந்து இ சார்லஸ் நடத்தி வரும் அறக்கட்டளை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை … Read more

பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி; அமெரிக்க உதவியை நாடியது

லாகூர், ஆசிய நாடுகளில் ஒன்றான இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியால் அந்த நாடு மக்களின் போராட்டத்தில் சிக்கி உருக்குலைந்து போயுள்ளது. இறக்குமதி ஆக கூடிய பொருட்களை வாங்க கூட போதிய நிதிவசதி இல்லாத சூழலால், உணவு, எரிபொருள், உரம் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளது. கிடைக்கும் பொருட்களையும் கூட வாங்க மக்கள் மணிக்கணக்கில், ஏன் நாள்கணக்கில் கூட நீண்ட வரிசையில் நின்று பெற்று … Read more

பண மோசடி வழக்கு: நேரில் ஆஜராகும்படி பிரதமருக்கு நீதிமன்றம் சம்மன்!

பண மோசடி குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, பாகிஸ்தான் பிரதமா் ஷெபாஸ் ஷெரீஃப், அவரது மகன் ஹம்ஸா ஷெரீஃப் ஆகியோருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அவரது மகன்கள் ஹம்ஸா, சுலைமான் ஆகியோா் சுமாா் 1,600 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கடந்த 2020 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக அந்நாட்டின் கூட்டாட்சி விசாரணை ஆணையம் வழக்கு பதிவு செய்து … Read more

எரிகற்கள் மழையா…? ஆச்சரியம் அடைந்த மக்கள்; வைரலான வீடியோ

நியூயார்க், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வானில் எரிகற்கள் மழை பொழிவது போன்ற காட்சிகள் ஏற்பட்டன. இதனால், மக்கள் ஆச்சரியமடைந்தனர். ஆனால், அது சீன ராக்கெட்டின் மீதமுள்ள கழிவுகள் என தெரிய வந்துள்ளது. இதுபற்றி சீன விண்வெளி கழகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 23 டன் எடை கொண்ட, மார்ச்-5பி ஒய் 3 என்ற ராக்கெட் கடந்த 24ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது என தெரிவித்து உள்ளது. சீன ராக்கெட்டின் கழிவுகள், இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது. அவை, … Read more

அமெரிக்க அதிபருக்கு மீண்டும் கோவிட்| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை 21ம் தேதி அன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஏற்கனவே இரு தவணை கோவிட் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டார். இந்நிலையில் இவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இவருக்கு ஜூலை 27ம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஜோ பைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது உறுதி செய்யப்பட்டது என … Read more

Long March 5B: சீனாவின் விண்வெளி ராக்கெட் பூமியில் விழுந்து நொறுங்கும்

புதிதாக ஏவப்பட்ட சீனாவின் மிக சக்திவாய்ந்த ராக்கெட்டான லாங் மார்ச் 5Bயின் சிதைபாடுகள் பூமிக்குள்மீண்டும் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராக்கெட்டின் சிதைபாடுகளின் இயக்கத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக கூறும் சீனா, பூமியில் உள்ள எவருக்கும் சிறிய ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் கூறுகிறது.  சீனா டியூன்ஹி என்ற பெயரில் பிரத்யேக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி ஆய்வு மையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக, கடந்த மாதம் 29 ஆம் தேதி, Long March … Read more

நேபாளத்தில் மக்களை பதறடித்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு| Dinamalar

காத்மண்டு :நேபாளத்தில் இன்று (ஜூலை 31) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டரில் 5.5 ஆக பதிவானது. நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில், திக்தெல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால், நேபாளம், இந்தியா மற்றும் சீனாவில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது.இதனால், வீடுகளில் இருந்த மக்கள் அச்சமடைந்து, பாதுகாப்பு … Read more

அமெரிக்காவை புரட்டி போட்ட வெள்ளம் – குழந்தைகள் உட்பட 25 பேர் பலி!

அமெரிக்காவில் கென்டகி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 25 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணி நடந்து வருகிறது. இதனால், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இது பற்றி கென்டகி கவர்னர் ஆண்டி பெஷீர் கூறுகையில், “கென்டகி, டென்னசி மற்றும் மேற்கு விர்ஜீனியா உள்ளிட்ட பகுதிகளில் தேசிய … Read more

உலகின் மிகப்பெரிய கட்டடம் கட்ட சவூதி அரேபியா திட்டம்.!

சவூதி அரேபிய அரசு 75 மைல் நீளத்துக்கு இருபுறங்களிலும் 1600 அடி உயரமுள்ள வானளாவிய கட்டடங்களைக் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவுறுத்தலின்படி வானளாவிய கட்டடங்களை உருவாக்க வடிவமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். மிரர் லைன் எனப் பெயரிட்டுள்ள இந்தத் திட்டம் கட்டி முடிக்கப்பட்டால் உலகின் மிகப்பெரிய கட்டுமானமாக இருக்கும். இந்தத் திட்டத்துக்கு ஒரு இலட்சம் கோடி டாலர் செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது. கட்டடங்களின் அடியில் அதிவிரைவு ரயில் இயக்குவதும், … Read more

அகதிகளை பணத்தால் ஏழ்மையான நாடுகளுக்கு விரட்டும் மேற்குலக நாடுகள்

இங்கிலாந்து மற்றும் ருவாண்டா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், கடந்த ஜூன் 14, 2022 அன்று கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அகதிகளை நாடுகடத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி,அகதிகளை அனுப்பும் விமானம் தனது பயணத்தை மேற்கொள்ளவில்லை. மனித உரிமைகள் அடிப்படையிலான சட்ட நடவடிக்கையின் மூலம் இம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த அகதிகள் சிரியா, சூடான், ஈரான் போன்ற போர் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நாடுகளிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்தவர்கள் என்பதும் படகு வழியாக … Read more