ஈராக் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட எதிர்ப்பாளர்கள் – என்ன நடந்தது ..?

ஈராக் எதிர்ப்பாளர்கள் மீண்டும் ஒருமுறை ஈராக் பாராளுமன்றத்தை உடைத்து, ஷியா தலைவர் முக்தாதா அல்-சதருக்கு ஆதரவை வெளிப்படுத்தினர்.சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் சட்டமன்றத்தில் நுழைந்து புதிய பிரதமரை நியமிக்கும் அமர்வை நிறுத்தினர். பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர் , ஆர்ப்பாட்டக்காரர்கள் பச்சை மண்டலத்தைச் சுற்றியுள்ள பல பெரிய கான்கிரீட் தடைகளை கீழே இழுக்கவும் ஏறவும் கயிறுகளைப் பயன்படுத்தினர், இது அரசாங்க கட்டிடங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களை சுற்றி வளைத்தது. “அனைத்து மக்களும் உங்களுடன் இருக்கிறார்கள் … Read more

வங்காளதேசம்: ரெயில் மீது பஸ் மோதி விபத்து – 11 பேர் பலி

டாக்கா, வங்காளதேசத்தில் சிட்டகாங் மாவட்டத்தில் ரெயில் மீது பஸ் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 15 க்கும் மேற்பட்டவர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். மிர்ஷாராய் பகுதியில் ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை பஸ் கடக்க முயலும் போது எதிர்பாராத விதமாக எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 … Read more

உலகளவில் ஆப்பிரிக்காவை தவிர்த்து குரங்கு அம்மையால் முதல்முறையாக ஒருவர் உயிரிழப்பு!

ரியோ டி ஜெனிரோ, கொரோனா பெருந்தொற்றை போல உலகளாவிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோயாக இருப்பதால், குரங்கு அம்மை வைரஸ் நோய் உலகளாவிய பொதுசுகாதார அவசரநிலையாக கடந்த சனிக்கிழமையன்று உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது. பிரேசிலில் சுமார் ஆயிரம் பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பிரேசிலில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 41 வயதான நபர், கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம், குரங்கு அம்மை முதன்முதலில் அதிகம் பேரிடம் … Read more

SHOCKING: துப்பாக்கி முனையில் 8 மாடல் அழகிகள் பாலியல் வன்கொடுமை!

தென் ஆப்ரிக்கா நாட்டில் மியூசிக் ஆல்பத்திற்கான வீடியோ சூட்டின் போது எட்டு இளம் மாடல் அழகிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்ரிக்கா நாட்டில் உள்ள, ஜோகன்னஸ்பர்க்கிற்கு மேற்கே உள்ள, சிறிய நகரமான க்ரூகர்ஸ்டோர்ப்பின் புறநகர் பகுதியில், மியூசிக் ஆல்பம் ஒன்றுக்கான வீடியோ ஷூட்டிங் நடைபெற்றது. இதில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட பெண் மாடல்களும், பல ஆண்களும் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த ஷூட்டிங் போது துப்பாக்கிய ஏந்திய ஒரு … Read more

இந்தியா முதல் பதக்கம்: பளுதுாக்குதலில் மஹாதேவ் வெள்ளி| Dinamalar

பர்மிங்காம்: காமன்வெல்த்தில் முதல் பதக்கம் வென்றது இந்தியா. பளுதுாக்குதலில் இந்திய வீரர் சங்கீத் மஹாதேவ் வெள்ளிப்பதக்கம் வென்றார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் 22வது காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. ஆண்களுக்கான 55 கிலோ பளுதுாக்குதல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் மூன்று முறை தேசிய சாம்பியன் ஆன சங்கீத் மஹாதேவ் சர்கார் 21, முதன் முறையாக காமன்வெல்த்தில் பங்கேற்றார். முதலில் ‘ஸ்னாட்ச்’ பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீரர் மஹாதேவ், அதிகபட்சம் 113 கிலோ துாக்கி முதலிடம் பெற்றார். மலேசியாவின் … Read more

சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் சேர இந்தியாவின் எதிர்ப்பை மீறி ஆப்கானிஸ்தானுக்கு அழைப்பு!

பீஜிங், பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015 இல் தொடங்கப்பட்ட திட்டமே ‘சீபெக்’ என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆகும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைக்கப்படுவதால், இந்தியா சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதனையும் மீறி இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து சீனா செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீபெக்கின் 3-வது ஆலோசனை கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் இணைய … Read more

ஆப்பிரிக்காவுக்கு வெளியே குரங்கு அம்மையால் முதல் மரணம்: ஸ்பெயின், பிரேசில் நாடுகளில் பீதி

மாட்ரிட்: கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை பாடாய் படுத்தியது. உலகம் முழுவதும் நிலைமை சற்று சீராகி, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வேளையில் மங்கி பாக்ஸ் என்ற புதிய தொற்று உலக நாடுகளை பற்றிக்கொண்டுள்ளது. தற்போது மங்கி பான்ஸ் நோயால் ஏற்பட்ட மரணம் பற்றிய செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன. ஸ்பெயின் தனது நாட்டில் குரங்கு அம்மை நோயால் முதல் இறப்பு ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. ஸ்பெய்னில் ஏற்பட்ட மரணம், குரங்கு அம்மையால்  ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள … Read more

இங்கிலாந்து புதிய பிரதமர்: லிஸ் டிரஸ்சுக்கு 90% வெற்றி வாய்ப்பு; சமீபத்திய ஆய்வு தகவல்

லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்ததும், இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் ஜாவித், இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் உள்ளிட்ட அரசின் உயர் பதவியில் இருந்தவர்கள் அடுத்தடுத்து பதவி விலகி அதிர்ச்சி அளித்தனர். இதனை தொடர்ந்து ஜான்சன், கடந்த 7ந்தேதி பதவி விலகினார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகினார். எனினும், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் இந்த பதவியில் தொடருவார். … Read more

பரபரப்பாக நடந்த டி20 போட்டி – திடீரென வெடித்த குண்டு.. அலறிய மக்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் குண்டு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டில், தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அந்நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. ஷபெஜா டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெண்ட் – இ அமீர் டிராகன்ஸ் மற்றும் பமீர் ஷல்மி அணிகள் மோதின. இப்போட்டியை … Read more

பிரிட்டன் பிரதமராகும் வாய்ப்பு: லிஸ் ட்ரஸ் 90%, ரிஷி சுனக் 10% – கருத்துக்கணிப்பில் தகவல்

லண்டன்: பிரிட்டன் பிரதமராகும் வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்புகளில் லிஸ் ட்ரஸ்க்கு 90% உடன் முன்னிலை வகிக்கிறார். இந்திய வம்சவாளியான ரிஷி சுனக்கின் வெற்றி வாய்ப்பு வெறும் 10% மட்டுமே என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். சொந்தக் கட்சிக்குள்ளயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் … Read more