விஸ்கியுடன் கொரோனா குடித்தால் கொரோனா பாதிக்காது: புத்த புட்சுவின் வைத்தியம்

குடிபோதையில் துறவி கைது: விஸ்கியுடன் எலுமிச்சை பழ ரசத்தை சேர்த்துக் குடித்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்பும் புத்த மதத் துறவியின் எண்ணம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட புத்த மதத்தை சேர்ந்த துறவி ஒருவர் கொடுத்த இந்த ஸ்டேட்மெண்ட் சர்வதேச அளவில் வைரலாகிறது. தாய்லாந்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக புத்த மதத்துறவி ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவர் கூறிய விளக்கம் இது. விஸ்கியால் கோவிட்-19 ஐ தடுக்க … Read more

இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்பு – புதிய அமைச்சரவையில் 17 பேருக்கு வாய்ப்பு

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன நேற்று பதவியேற்றார். அவருடன் 17 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். முன்னதாக, அதிபர் அலுவலகம் முன்பு திரண்ட போராட்டக்காரர்களை ராணுவத்தினர் நள்ளிரவில் அப்புறப்படுத்தினர். இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் பதவியேற்றார். இந்நிலையில், புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன(73), அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று பொறுப்பேற்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த இவர், வெளியுறவு, கல்வி, உள்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். முன்னாள் அதிபர் கோத்தபய … Read more

ரஷ்யப் படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு மேலும் 100 டிரோன்களை அனுப்புகிறது இங்கிலாந்து!

ரஷ்யப் படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு மேலும் நூறு டிரோன்களையும் பீரங்கித் தடுப்பு ஆயுதங்களையும் பிரிட்டன் அனுப்பி வைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிகள், பேட்டரி ராடார் எதிர்ப்பு சாதனங்கள், 50 ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவற்றுடன் நூறு டிரோன்களும் கப்பல் மூலமாக உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 1600 பீரங்கித் தடுப்பு சாதனங்களும், 6900 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் அனுப்பி வைக்கப்படும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும் 45 ஆயிரம் … Read more

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் குறித்த கேள்விக்கு சுகாதாரத்துறை இணையமைச்சர் பதில்

வெளிநாடுகளில் இருந்து வந்த மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் தங்கள் படிப்பைத் தொடர தேசிய மருத்துவ ஆணைய விதிகளில் இடமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், இந்தியா திரும்பியவர்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கும் முடிவுக்கு மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றார். மேலும், இந்திய மாணவர்கள் சீனாவில் தாங்கள் பயின்ற … Read more

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனே பதவியேற்பு| Dinamalar

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக, தினேஷ் குணவர்த்தனே, 72, பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து, பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, பார்லி., எம்.பி.,க்கள் ஆதரவுடன் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் நேற்று பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த, தினேஷ் குணவர்த்தனே, புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து … Read more

மிட்டாய் சாப்பிடும் பணிக்கு ஆண்டுக்கு ரூ.62 லட்சம் சம்பளம்.. விற்பனை நிறுவனம் வெளியிட்ட இனிப்பு அறிவிப்பு..!

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள மிட்டாய்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று மிட்டாய்களை சுவைத்துப்பார்த்து அதன் தரம், சுவை குறித்து தெரிவிக்கும் பணி செய்வதற்கு ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 62 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக அறிவித்துள்ளது. கேண்டி ஃபன் ஹவுஸ் என்ற அந்த நிறுவனம் தலைமை மிட்டாய் தரச்சோதனை அதிகாரி பணியில் சேர மிட்டாய் சாப்பிடுவதில் ஆர்வம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தகுதி என தெரிவித்துள்ளது. பற்கள் பாதுகாப்பு திட்டத்துடன் கூடிய இந்த பணியில் வேடிக்கையாக … Read more

பிரேசிலில் 18 பேர் பலி| Dinamalar

ரியோ டி ஜெனிரோ:பிரேசிலில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்தனர்.தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகருக்கு அருகேயுள்ள பகுதியில், கார் திருட்டு, வங்கி கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பதுங்கிஉள்ளதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.இதையடுத்து, போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டரில் விரைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். விலா குரூசிரோ என்ற இடத்தில் மறைந்திருந்த கடத்தல்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இந்த தாக்குதலில், … Read more

வங்கியிலிருந்து பணம் எடுக்க பொதுமக்களுக்கு தடை – சீன அரசு உத்தரவால் மக்கள் அவதி!

பேங்க் ஆப் சீனாவின் கிளைகளில் மக்கள் தங்கள் சேமிப்புக்களிடமிருந்து பணத்தை எடுக்க கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹெனான் பகுதியில் உள்ள வங்கிக் கிளையிலிருந்து பணத்தை எடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வங்கி ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்காத மக்களை மிரட்டும்வகையில் பீரங்கிகளை சீன ராணுவ தெருக்களில் குவித்துள்ளது. முதலீட்டாளர்களிடமிருந்து வங்கியைக் காக்கும் வகையில் இந்தநடவடிக்கையை சீன அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் வங்கிகளில் … Read more

95 சதவீதம் குரங்கு அம்மை இதன் மூலம்தான் பரவுகின்றன! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவலின் தாக்கத்தால் உலக நாடுகளே தத்தளித்து வருகின்றன. இன்று வரை கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கங்களோடு காணப்படுகின்றதே தவிர நாடுகளை விட்டு முழுவதும் வெளியேறவில்லை கொரோனா பாதிப்பு. இதற்கிடையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே குரங்கு அம்மை குறித்து புரளிகளும், வதந்திகளும் அதிக அளவில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வந்தன. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக குரங்கு அம்மையின் பரவல் தீவிரமெடுத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இதுவரை உலகம் முழுவதும் உள்ள … Read more

ஜோ பைடனுக்கு கரோனா: வீடியோ கால் மூலம் நலம் விசாரித்த சீன அதிபர்

வாஷிங்டன்: கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, சீன அதிபர் ஜி ஜின்பிங் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, வெள்ளை மாளிகை வியாழக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் தரப்பில், “எனக்கு கரோனாவின் லேசான அறிகுறிகள் உள்ளன. நான் நலமுடன் இருக்கிறேன். என்னை தனிமைப்படுத்திக் கொண்டு தொடர்ந்து பணிகளை செய்து வருகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜோ பைடனை, சீன அதிபர் … Read more