9 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் மீண்டும் போலியோ நோய்
வாஷிங்டன், 1948 முதல் 1955 ஆண்டு வரை உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ் நோய் போலியோ. இளம்பிள்ளை வாதம் என்று அழைக்கப்பட்ட போலியோ உலக அளவில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. அதன் பின் போலியோவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னும் போலியோ நோய் குழந்தைகளுக்கு பரவி வருகிறது. இதற்கிடையில், நாட்டில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக 1979 ஆம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது. … Read more