பணவீக்கத்தை குறைக்க இலங்கையில் வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய வங்கி..!

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில் பணவீக்கத்தை குறைக்க வட்டி விகிதங்களை அந்நாட்டு மத்திய வங்கி உயர்த்தியுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் உணவு, மருந்து, எரிபொருட்களை வாங்க முடியாமல் இலங்கை அரசு கடும் நெருக்கடிக்குள் உள்ளாகி இருக்கிறது.  நிலையான கடன் வசதி விகிதத்தை 15.50 சதவீதமாகவும், நிலையான வைப்பு வசதி விகிதத்தை 14.50 சதவீதமாகவும் இலங்கை மத்திய வங்கி உயர்த்தியுள்ளது.  Source link

மண்ணில் புதைத்த தலிபான் நிறுவனரின் கார்20 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்டது| Dinamalar

காந்தஹார்:ஆப்கானிஸ்தானில், தலிபான் நிறுவனரான மறைந்த முல்லா ஒமரின் கார், பூமிக்குள் இருந்து, 20 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்டது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் அமைப்பை தோற்றுவித்த முல்லா ஒமர், அந்நாட்டு அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டார்.உள்நாட்டு போரில் வென்ற தலிபான்கள், 1996ல் ஆட்சியை பிடித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை அல் – குவைதா பயங்கரவாதிகள், 2001ல் தகர்த்தனர்.இதை தொடர்ந்து, ஆப்கன் மீது போர் தொடுத்த அமெரிக்கா, தலிபான் அரசை நீக்கிவிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை … Read more

தாலிபன் அமைப்பை உருவாக்கிய முல்லா உமர் பயன்படுத்திய கார் 21 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டியெடுப்பு..!

ஆப்கானிஸ்தானில் தாலிபன் அமைப்பை உருவாக்கிய, முல்லா உமர் பயன்படுத்திய வெள்ளை நிற டயோட்டா கார் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.  இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் தேடுதல் வேட்டை தீவிரமானதால், அந்த கார் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஒருகிராமத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டது. 2013 ல்  முல்லா உமர் காசநோயால் உயிரிழக்க, அந்த காரை காபூல் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்க தாலிபன்கள் தற்போது தோண்டி எடுத்துள்ளனர். Source link

இந்திய வம்சாவளிக்கு துாக்கு தண்டனை| Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு, மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பை மீறி, நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தென்கிழக்காசிய நாடான சிங்கப்பூரில், 15 கிராமிற்கு மேல் போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்திற்கு துாக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கல்வந்த் சிங், 31, என்பவர், 120 கிராம் போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில், 2013ல் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ‘கல்வந்த் … Read more

Ozone Hole: வெப்ப மண்டலத்தில் மிகப்பெரிய ஓசோன் துளை: பூமிக்கு பாதிப்பு

வெப்ப மண்டலத்தில் மிகப்பெரிய ஓசோன் துளை இருப்பதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த புதிய துளை இருப்பது பூமியில் உள்ள உயிர்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானி மற்றும் அவரது குழுவினர் எச்சரித்துள்ளனர். உலக மக்கள்தொகையில் 50 சதவீதத்தை பாதிக்கக்கூடிய வெப்ப மண்டலத்தின் கீழ் அடுக்கு மண்டலத்தில் ஒரு பெரிய ஓசோன் துளையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த துளையானது, அண்டார்டிக் ஓசோன் துளையின் அளவை விட ஏழு மடங்கு அதிகமாகும், இது வசந்த காலத்தில் மட்டுமே … Read more

நீர் நிலையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கடல் சிங்கம்.. சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் கடலில் விடப்பட்டது..!

அர்ஜெண்டினாவில் மாசடைந்த நீர்நிலையில் இருந்து மீட்கப்பட்ட தென் அமெரிக்க ஃபர் சீல்கள் வகையை சேர்ந்த கடல் சிங்கம் ஒன்று சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் கடலில் விடப்பட்டது. கடந்த ஜூன் 16-ம் தேதியன்று பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தில் உள்ள அவெல்லாநேடா பகுதியில் உள்ள மாசடைந்த நீர் நிலையில் இருந்து அந்த கடல் சிங்கம் மீட்கப்பட்டுள்ளது. அதனை பராமரித்து வந்த விலங்குகள் நல ஆர்வலர்கள், பத்திரமாக மீண்டும் கடலில் விடுவித்தனர். Source link

சொந்த கட்சியினர் எதிர்ப்பால் பதவி விலகினார் பிரிட்டன் பிரதமர்| Dinamalar

லண்டன்:கட்சியினரின் தொடர் விமர்சனங்கள், அமைச்சர்கள் ராஜினாமா போன்ற நெருக்கடிகளைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்தன் பதவியை ராஜினாமா செய்தார்.புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை, அதாவது அக்டோபர் மாதம் வரை காபந்து பிரதமராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அவர் மீது, கொரோனா காலத்தில் மது விருந்து கொடுத்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த மாதம், கட்சியினர்தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால், … Read more

Depletion of Ozone Layer can lead to increased ground level UV radiation

வெப்ப மண்டலத்தில் மிகப்பெரிய ஓசோன் துளை இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர், நிபுணர்கள் எச்சரித்தனர் இந்த புதிய துளை இருப்பது பூமியில் உள்ள உயிர்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானி மற்றும் அவரது குழுவினர் எச்சரித்துள்ளனர். உலக மக்கள்தொகையில் 50 சதவீதத்தை பாதிக்கக்கூடிய வெப்ப மண்டலத்தின் கீழ் அடுக்கு மண்டலத்தில் ஒரு பெரிய ஓசோன் துளையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஏஐபி அட்வான்சஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, இந்த துளை அண்டார்டிக் ஓசோன் துளையின் அளவை விட … Read more

ஸ்பெயினில் மீண்டும் தொடங்கியது காளைப் பந்தயம்.. முதல் நாள் பந்தயத்தின் போது மூவர் காயம்..!

கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்பெயினின் புகழ்பெற்ற காளை பந்தயம் மீண்டும் தொடங்கியுள்ளது. பம்ப்லோனா பகுதியில் குறுகிய வீதியில் ஓடிய காளைகளை வெள்ளை உடை அணிந்தவர்கள் துரத்திச் சென்றனர். சுமார் 800 மீட்டர் தூரத்துக்கு ஓடிய காளைகள் போட்டி நடைபெறும் மைதானத்துக்குள் நுழைந்தன. முதல் நாள் நடைபெற்ற பந்தயத்தின் போது மூவர் காயமடைந்தனர். Source link

Quantum messages: குவாண்டம் செய்திகளைக் கண்காணிப்பது ஏலியன்களை கண்டுபிடிக்க உதவும்

ஏலியன்களைத் தேடும் முயற்சிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான சுவராசியமான தகவல்கள் வரத்தும் அதிகரித்துள்ளது. வேற்றுகிரகவாசிகளைத் தேடுவதில் குவாண்டம் செய்திகளைக் கண்காணிப்பது முக்கியமானது என்று தற்போது ஆராய்ச்சிகள் உறுதிபடுத்தியிருக்கின்றன. ஃபோட்டான்கள் என்றும் அழைக்கப்படும் ஒளியின் துகள்கள் அவற்றின் குவாண்டம் தன்மையை இழக்காமல் விண்மீன்களுக்கு இடையேயான தூரங்களுக்கு அனுப்பப்படலாம் என்றும் இந்த வகையான செய்திகளை வேற்றுகிரகவாசிகள் பூமியுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தலாம் என்றும் புதிய ஆராய்ச்சி கூறுகிறது. வேற்றுகிரகவாசிகளுக்கான தேடல் என்பது விஞ்ஞானிகளை மட்டுமல்ல, மக்களையும் கவர்ந்துள்ளது. … Read more