Aliens Search: ஏலியன்களை தேட யூரோபாவில் களமிறங்கும் நீச்சல் ரோபோக்கள்

ஏலியன்களைத் தேடும் முயற்சிகள் அறிவியல் உலகில் முக்கியமான ஒன்றாக மாறிவிட்ட்ட காலம் இது. அதுமட்டுமல்லாமல், வேற்றுகிரகவாசிகளைத் தேடுவது மனித குலத்தின் விருப்பமான பொழுதுபோக்காகவும் மாறிவிட்டது. பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு காரணம், நமது கிரகத்தின் பெரும்பகுதியில் தண்ணீர் இருப்பதுதான். எனவேதான், பிற கிரகங்களில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை ஆராயும்போது நீர் இருக்கிறதா என்பதை தேடுவது முக்கியமான விஷயமாக இருக்கிறது. அதனால்தான், பிற கிரகங்களில் உயிரினங்கள் அதாவது குறிப்பாக வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்கள்) இருக்கிறார்களா என்று தேடும் போதும், ​​தண்ணீர் இருப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ச்சியாளர்கள் முக்கியமானதாக … Read more

மர்மலாடா சிகரத்தில் பனிப்பாறை சரிந்து விபத்து – 7 பேர் பலி..!

இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த நிலையில் மாயமான 13 மலையேற்ற வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மர்மலாடா சிகரத்தில் பனிப்பாறை இன்னும் நிலையாக இல்லாத சூழலில் மாயமானவர்களின் செல்ஃபோன் சிக்னலை வைத்து டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். விபத்து நிகழ்ந்து 36 மணி நேரமாகியும் மாயமானவர்களை மீட்கமுடியாமல் இருப்பதால் அவர்களது நிலை குறித்த கவலை அதிகரித்துள்ளது.  Source link

ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கோனி தீவு பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டியின் ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜோய் செஸ்ட்நட் வெற்றி பெற்றார். அவர் 10 நிமிடங்களில் 63 ஹாட் டாக் பன்கள் சாப்பிட்டு முதலிடம் பிடித்தார். மகளிர் பிரிவில் மிக்கு சூடோ என்பவர் 10 நிமிடங்களில் 40 ஹாட் டாக் பன்கள் சாப்பிட்டு சாம்பியன் பட்டம் வென்றார். Source link

பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.. வீட்டு சிறையில் இருந்து ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் விடுதலை.!

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் பால் ஹக்கிசை இத்தாலி நீதிமன்றம் விடுவித்துள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி இத்தாலியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்க சென்ற அவர், இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டபட்டதை அடுத்து நட்சத்திர விடுதியிலேயே சிறை வைக்கப்பட்டார்.  Source link

“என்னால் இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்ற முடியும்” – ரணில் நம்பிக்கை

கொழும்பு: “என்னால் இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்ற முடியும்” என்று அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் அவர் அளித்த நேர்காணலில், “போராட்டங்கள் நடக்கும்போது இலங்கையில் இரண்டு நாட்கள் அரசு செயல்பட முடியாமல் போனது. உண்மையில், அப்போது அரசே இல்லை. எதுவுமே எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் போனது. நான் பதவியேற்றபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்ததை நன்கு உணர்ந்தேன். நான் வெற்றி பெறுவேனா என்று உறுதியாகத் தெரியாது. ஆனால், … Read more

நெருங்கும் பக்ரீத் பண்டிகை – வறுமை அதிகரித்ததால் ஆப்கானிஸ்தானில் கால்நடைகளை வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்..!

ஆப்கானிஸ்தானில் வறுமை அதிகரித்துள்ளதால் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கால்நடைகளை வாங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இஸ்லாமியர்களின் இரண்டு முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆப்கனில் வருகின்ற 9ம் தேதி தொடங்குகிறது. வழக்கமாக பண்டிகையையொட்டி கால்நடை விற்பனை அதிகரிக்கும் நிலையில், தற்போது மக்கள் பலர் வறுமையால் வாடுவதால் சந்தைகளில் கால்நடைகள் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். Source link

உலகின் வாழத்தகுந்த சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை எத்தனையாவது இடம் தெரியுமா?

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) உலகின் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் வருடாந்திர தரவரிசையை வெளியிட்டுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வாழ்வாதாரக் குறியீடு முந்தைய ஆண்டிற்கான உலகளாவிய வாழ்வாதாரக் குறியீட்டிலிருந்து சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது.  உள்கட்டமைப்பு, பசுமை திறந்த வெளி, அரசியல் ஸ்திரத்தன்மை, குற்ற விகிதங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 173 நகரங்களை EIU வரிசைப்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் 10 உலகின் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் … Read more

ஆப்கானிஸ்தான் மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர விசா வழங்குமாறு தலிபான் அரசு கோரிக்கை..!

ஆப்கானிஸ்தான் மாணவர்கள் இந்தியாவில் தங்கள் படிப்பை மீண்டும் தொடங்க விசா வழங்குமாறு இந்தியாவிடம் தலிபான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முன்பு 13 ஆயிரம் மாணவர்கள் இந்தியாவில் படித்து வந்ததாக தெரிவித்துள்ள தாலிபான் அரசு, மாணவர்களின் விசா தொடர்பாக காபூலில் உள்ள இந்திய தூதரகத்திடம் எடுத்துச் செல்லப்படும் என்றும் தெரிவித்துள்ளது.   Source link

அரஃபா உரை: மெக்காவில் இனி தமிழிலும் ஒலிக்கும்

மெக்கா: சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் இனி தமிழிலும் அரஃபா உரை வாசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெக்காவின் தலைவர் அப்துல்ரஹ்மான் அல்-சுதைஸ் கூறும்போது, “மதினா, மெக்காவின் வளர்ச்சிக்கும், சேவைக்கும் சவுதி அரசு அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது. அரஃபா உரை மொழிபெயர்பு இந்த வருடம் ஐந்தாவது வருடத்தில் நுழைந்துள்ள நிலையில், இத்திட்டம் 14 மொழிகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், உருது, பெர்சியன், சீன மொழி, துருக்கிய மொழி, ஸ்பெனிஷ் போன்ற மொழிகளில் … Read more

நெருங்கும் பக்ரீத் பண்டிகை – வறுமை அதிகரித்ததால் கால்நடைகளை வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்..!

ஆப்கானிஸ்தானில் வறுமை அதிகரித்துள்ளதால் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கால்நடைகளை வாங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இஸ்லாமியர்களின் இரண்டு முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆப்கனில் வருகின்ற 9ம் தேதி தொடங்குகிறது. வழக்கமாக பண்டிகையையொட்டி கால்நடை விற்பனை அதிகரிக்கும் நிலையில், தற்போது மக்கள் பலர் வறுமையால் வாடுவதால் சந்தைகளில் கால்நடைகள் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். Source link