குரங்கு அம்மை நோயை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம்: உலக சுகாதார அமைப்பு
ஐரோப்பாவிலிருந்து குரங்கு அம்மை நோயை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் ஹென்றி கூறும்போது, “ஐரோப்பா குரங்கு அம்மை நோய் பரவலின் மையமாக உள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் தொற்றும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதுவரை 4,500 குரங்கு அம்மை நோய் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உலக அளவில் 31 நாடுகளில் குரங்கு அம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குரங்கு அம்மை சர்வதேச அளவில் … Read more