மைதானத்தில் மயங்கி விழுந்த சிறுவன்.. விரைந்து செயல்பட்டு சிறுவனுக்கு உதவிய பிரிட்டன் வீராங்கனை..!

டென்னிஸ் போட்டியின் போது, மைதானத்தில் மயங்கி விழுந்த பந்து எடுத்துப் போடும் சிறுவனுக்கு பிரிட்டன் வீராங்கனை உதவிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடுமையான வெயில் நிலவிய நிலையில், பந்து எடுத்து போடும் சிறுவன் ஒருவர் மயங்கினார். அப்போது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிரிட்டன் வீராங்கனை ஜோடி பரேஜ் விரைந்து செயல்பட்டு, குளிர்பானம் மற்றும் சாக்லேட் வழங்கி சிறுவனை ஆசுவாசப்படுத்தினார். Source link

எரிபொருள் தட்டுப்பாடு: இலங்கையில் தனியார் பேருந்து சேவை நிறுத்தம்.!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில், தனியார் பேருந்து சேவை இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. கடுமையான  தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் போதிய எரிபொருள் இல்லாததால் இலங்கை முழுவதும் பேருந்து சேவையை நிறுத்தியுள்ளதாக, அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். Source link

கண்டெய்னரிலிருந்து கொத்து கொத்தாக எடுக்கப்பட்ட உடல்கள் – அமெரிக்காவில் பயங்கரம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சாண்டியாகோவின் புறநகர் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நின்றுகொண்டிருந்தது. மாலை 6 மணியளவில் அப்பகுதிக்கு வந்த நகராட்சி ஊழியர்  ஒருவர் லாரி அருகே சென்று பார்த்தார். அப்போது கண்டெய்னருக்குள் இருந்து உதவி கேட்டு அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக, இது குறித்து அவர்  கவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆள் அரவமற்ற ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் … Read more

'ட்ரக் உயிரிழப்புக்கு பைடனே காரணம்' – டெக்சாஸ் ஆளுநர் குற்றச்சாட்டு

டெக்சாஸ்: டெக்சாஸ் மாகாணத்தில் ட்ரக்கில் 46 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பைடனே காரணம் என்று அம்மாகாண ஆளுநர் குற்றச்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ நகரில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்த ட்ரக் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. போலீஸார் அதனை திறந்தபோது உள்ளே மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் 46 பேர் சடலமாக கிடந்தனர்.அவர்கள் அனைவரும் மெக்சிகோ நாட்டில் இருந்து அகதிகளாக அமெரிக்காவில் குடியேற முயன்றவர்கள் என முதல் கட்ட விசாரணையில் … Read more

உக்ரைனில் வணிக வளாகம் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக அதிகரிப்பு.!

உக்ரைனில் வணிக வளாகம் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. கிரெமென்சுக் நகரில், மக்கள் அதிகம் கூடியிருந்த வணிக வளாகத்தில் ரஷ்ய படைகள் திடீரென தாக்குதல் நடத்தின. ஏவுகணைத் தாக்குதலால் வணிக வளாகம் தீயில் எரிந்த நிலையில், படுகாயமடைந்த 59 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறன்றனர். Source link

அமெரிக்காவில் லாரியில் 46 அகதிகள் சடலமாக மீட்பு; 16 பேர் கவலைக்கிடம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் அகதிகள் 46 பேர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சான் ஆன்டோனியோ பகுதியில் ரயில் பாதைக்கு அருகே கண்டெய்னர் லாரி ஒன்றில் சடலங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து வந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர். அதில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது. 16 … Read more

லாரியில் இருந்து 46 பேர் சடலமாக மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளது சான் ஆன்டோனியோ நகரம். இங்குள்ள ரயில் பாதைக்கு அருகே கண்டெய்னர் லாரி ஒன்றில் சடலங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு விரைந்து வந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர். அப்போது, சுமார் 40க்கும் மேற்பட்டோர் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர்களின் உடல்கள் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதுதவிர, 16 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் குழந்தைகள் என்பது கவனிக்கத்தக்கது. … Read more

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான ” டாப்கன் மேவ்ரி ” இதுவரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்து சாதனை.!

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான ” டாப்கன் மேவ்ரி ” இதுவரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே டாம்குரூசின் மிஷன் இம்பாசிபில் படம் வெளியாகி வசூல் சாதனை படைத்த நிலையில், இறுதியாக 2018-ஆம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாசிபிள் பால் அவுட் படத்தின் வசூல் சாதனையை இந்த படம் முறியடித்துள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து டாம் க்ரூஸ் பதிவிட்டுள்ளார். Source link

எகிறிய எரிபொருள் விலை.. டிரக்குகளில் ஒலி எழுப்பியபடி சாலையை ஆக்கிரமித்து வாகன ஓட்டுநர்கள் போராட்டம்!

பெருவில், எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி சரக்கு வாகன ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்ததையடுத்து, அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதனை கட்டுப்படுத்த பெருவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், துறைமுக நகரான காலோவில் சரக்கு வாகன ஓட்டிகள் டிரக்குகளில் ஒலி எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  Source link

அமெரிக்காவில்  40 சடலங்களுடன் ட்ரக் மீட்பு: அகதிகளாக வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்காவில் 40 சடலங்களுடன் ட்ரக் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ நகரில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்த ட்ரக் கேட்பாரற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. போலீஸார் அதனை திறந்தபோது உள்ளே மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் 40 பேர் சடலமாக கிடந்தனர். அவர்கள் அனைவரும் மெக்சிகோ நாட்டில் இருந்து அகதிகளாக அமெரிக்காவில் குடியேற முயன்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து மெக்சிகோ வெளியுறவு அமைச்சர் மார்செலோ எப்ரார்ட் கூறுகையில், “அமெரிக்காவின் டெக்சாஸில் ட்ரக்கில் சென்ற … Read more