பிரேசிலில் போலீசாருக்கும், கும்பலுக்கும் இடையே துப்பாக்கி சூடு; 6 பேர் பலி

ரியோ டி ஜெனீரோ, பிரேசில் நாட்டின் மிக பெரிய நகரங்களில் ஒன்றான ரியோ டி ஜெனீரோவின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மங்கினோஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு குழுவினர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் படையுடன் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து, போலீசாருக்கும் துப்பாக்கி சூடு நடத்திய நபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். இந்த கடுமையான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். … Read more

இலங்கை | அதிபர் பதவியில் இருந்து விலக கோத்தபய ராஜபக்ச திடீர் மறுப்பு

கொழும்பு: கொழும்பு விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் துபாய் தப்பியோட முயன்ற கோத்தபயவின் தம்பி பசில் ராஜபக்சவை போராட்டக்காரர்களிடம் சிக்கினார். அதிபர் பதவியில் இருந்து விலக கோத்தபய ராஜபக்ச மறுத்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச்மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். ஆனால், அதற்கு முன்பேஇல்லத்தை விட்டு வெளியேறியஅதிபர் கோத்தபய, தற்போதுராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப்பாக … Read more

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உடல் தகனம்

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. ஜப்பான் நாடாளுமன்ற மேலவை தேர்தலையொட்டி கடந்த 8-ம் தேதி நாரா நகரில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்று வாக்கு சேகரித்தார். அப்போது கடற்படை முன்னாள் வீரர் யாமாகாமி, அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த ஷின்சோ அபே மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் தலைநகர் டோக்கியாவில் உள்ள வீட்டில் … Read more

பிரிட்டன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்க்கட்சி தீவிரம்

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அரசு மீது, எதிர்க்கட்சியான லேபர் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் நிர்வாகத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டதால், 40-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அரசியல் நெருக்கடியை சந்தித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் தான் பதவி விலகுவதாக அறிவித்தார். கன்சர்வேடிவ் கட்சியில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார். புதிய பிரதமரை … Read more

பும்ரா ஆறு… இந்தியா ஜோரு; இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தல்| Dinamalar

லண்டன்: ஓவல் ஒருநாள் போட்டியில் ‘வேகப்புயலாக’ மிரட்டிய பும்ரா, 6 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ‘சூப்பர்’ வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 110 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். தொடையின் பின் பகுதியில் லேசான காயம் அடைந்த … Read more

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் வண்ணப்படம் வெளியீடு| Dinamalar

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’வால் விண்ணில் ஏவப்பட்ட உலகின் பிரமாண்ட்ட சக்தி மற்றும் திறன் உடைய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, கடந்த ஆண்டு டிசம்பரில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விஞ்ஞானிகளின் பல ஆண்டு உழைப்பில், 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த தொலை நோக்கி உருவாக்கப்பட்டது. இது, நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவு சென்று, சூரியனை சுற்றியவாறு ஆய்வுப்பணியை செய்து … Read more

பிரபஞ்சம் உருவான படம் வெளியீடு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பிரபஞ்சம் உருவானபோது தோன்றிய நட்சத்திரங்கள் பற்றி ஆய்வு செய்யும் நோக்குடன் அனுப்பப்பட்ட நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, 1380 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது. அமெரிக்க விண்வெளி மையம் ( நாசா), ஐரோப்பிய, கனடா விண்வெளி மையம் இணைந்து 20 ஆண்டு உழைப்புக்குப் பின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கின. 2021 டிச. 22ல் ஏரியன் – 5 ராக்கெட்டில் விண்வெளிக்கு செலுத்தப்பட்டது. … Read more

இலங்கையில் சுமூகமான முறையில் அரசாங்க மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும் – ஐ.நா பொதுச்செயலாளர்

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இலங்கையில் சுமூகமான முறையில் அரசாங்க மாற்றத்தை உறுதி செய்யவும், பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளை காணவும் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தான் இலங்கை மக்களுடன் ஒற்றுமையாக நிற்பதாக தெரிவித்துள்ளார். வன்முறைச் செயல்களை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அன்டோனியோ குட்டரஸ், அதற்கு காரணமானவர்கள் பதில் கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  Source link

துபாய் தப்பி செல்ல முயன்ற கோத்தபய ராஜபக்ச; தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

இலங்கையில் கடும் நெருக்கடி நிலையினால் மக்கள் கொதித்து போயுள்ள நிலையில்,  அதிபர் கோத்தபய ராஜபக்சநாட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற போது, விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். நாட்டின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக பெரிய அளவில் எதிர்ப்பு வெடித்ததை தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ச புதன்கிழமை பதவி விலகுவதாக உறுதியளித்தார். ஆனால், அதிபர் பதிவியில் இருந்து விலகினால், தான் உடனடியாக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், அவர் நாட்டை விட்டு எப்படியாவது … Read more

அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்ற பசில் ராஜபச்சே தடுத்து நிறுத்தம்.. விமானநிலையத்தில் இருந்த பயணிகள் கடும் எதிர்ப்பு..!

அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபச்சேவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மீண்டும் இலங்கைக்கு திரும்பினார். ராஜபக்சே குடும்பத்தினர் துபாய் வழியாக அமெரிக்கா செல்ல முயற்சித்து வரும் நிலையில், கட்டுநாயக்கா விமானநிலைய சென்ற பசில் ராஜபக்சேவின் ஆவணங்களை சரிபார்க்க விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் மறுத்தனர். மேலும், விமானநிலையத்தில் இருந்த பயணிகள் பசில் ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வெளிநாடு செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. Source link