சீனாவில் கொரோனா தீவிரம்: குடியிருப்பு பகுதிகளுக்கு சீல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்-சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் குடியிருப்பு பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் 2019ல் கொரோனா வைரஸ் முதலில் தோன்றி, பின் உலகம் முழுதும் பரவியது. இரண்டு ஆண்டுகளாக உலகமே முடங்கிக் கிடந்தது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின், உலகின் பல்வேறு நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. ஆனால், கொரோனா உருவான சீனாவில் மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது. சீனாவில் தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய தடை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

முனிச்: உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக, ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த, அந்நாட்டிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிப்பதற்கான அறிவிப்பை ஜி-7 நாடுகள் வெளியிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக ஜி-7 அமைப்பின் 48-வது உச்சி மாநாடு ஜெர்மனியின் ஸ்லாஸ் எல்மவ் ஓட்டலில் நேற்று தொடங்கி 28-ம் தேதிவரை நடக்கிறது. இதில் இந்தியா உட்பட சில நாடுகள் சிறப்பு … Read more

இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவி வைக்க முயற்சி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் படுக்கை அறையில் உளவு பார்க்கும் கருவியை வைக்க முயன்ற பாதுகாப்பு ஊழியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்கூட்டியே இம்ரான் கான் பாதுகாப்புஊழியர்களின் பட்டியலை அளித்திருந்தால் அவர்களின் பின்னணியை விசாரித்திருக்க முடியும் என்று இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்தனர். பலமுறை கேட்டும் இம்ரான் கான் தமது பாதுகாவலர்களின் பட்டியலைத் தரவில்லை என்றும் இந்த வழக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஆஷிர் என்ற பாதுகாப்பு ஊழியர் … Read more

காளைச் சண்டை போட்டியில் பார்வையாளர் கேலரி உடைந்து கோர விபத்து…6 பேர் பலி – 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் காளைச் சண்டை போட்டியின் போது பார்வையாளர்கள் கேலரி உடைந்து விழுந்து நொறுங்கியதில் 200 பார்வையாளர்கள் படுகாயம் அடைந்தனர். El Espinal நகர மைதானத்தில் நடைபெற்ற காளைச் சண்டை போட்டியில் மூங்கில் மற்றும் தென்னம் பலகைகளை கொண்டு பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்பட்டது. போட்டி நடந்து கொண்டு இருந்த நிலையில், பாரம் தாங்காமல் கேலரி உடைந்து விழுந்தது. விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 200 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை … Read more

எரிபொருள் விலையை உயர்த்தியது இலங்கை| Dinamalar

கொழும்பு : இலங்கையில் எரிபொருள் கையிருப்பு குறைந்துள்ளதை அடுத்து, பெட்ரோல் – டீசல் விலையை அந்நாட்டு அரசு மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. பெட்ரோல் – டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை, பெட்ரோல் – டீசல் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டன. இந்நிலையில் மூன்றாவது முறையாக நேற்று விலை உயர்த்தப்பட்டது.அந்நாட்டு ரூபாய் மதிப்பில் பெட்ரோல், லிட்டருக்கு 50 ரூபாயும், டீசல் … Read more

ஆக்கப்பூர்வ விவாதத்தை எதிர்பார்க்கிறேன்! ஜி – 7 மாநாடு குறித்து மோடி நம்பிக்கை

முனிச் : ஜி – 7 மாநாட்டில் பங்கேற்கும் சர்வதேச தலைவர்களுடன் பருவநிலை, எரிபொருள், உணவு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய ஏழு பணக்கார நாடுகள் அடங்கிய, ‘ஜி – 7’ அமைப்பின் மாநாடு, ஜெர்மனியில் நேற்று துவங்கியது. இன்றும் நடக்கிறது. உற்சாக வரவேற்பு இந்த … Read more

காருக்குள் சிக்கிய கரடி உயிரிழந்தது| Dinamalar

டென்னிசி, : அமெரிக்காவில் உணவை தேடி காருக்குள் சென்ற கரடி, வெப்பம் தாங்காமல் பரிதாபமாக உயிரிழந்தது.டென்னிசி நகரில் சரியாக பூட்டப்படாத காருக்குள் உணவு பொருட்கள் இருப்பதை கவனித்த கரடி பற்களால் கதவை திறந்து காருக்குள் புகுந்துள்ளது. கார் கதவு தானாக சாத்தி கொண்டதால் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்ட கரடி, வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்து உள்ளேயே உயிரிழந்தது. காருக்குள் கரடி இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கார் உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். நாய்களை விட கரடிகளுக்கு … Read more

விமான நிலைய ஊழியர்களை சரமாரியாக தாக்கிய தம்பதி.. உடமைகளை சோதனை செய்வதில் தாமதம் செய்ததாக புகார்..!

பிரிட்டனில் விமான நிலைய ஊழியர்களை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். பிரிஸ்டோலில் இருந்து அலிகான்டே நகருக்கு செல்வதற்காக தம்பதி காத்திருந்த நிலையில், அவர்களது உடமைகளை பரிசோதனை செய்வதில் விமான நிலைய ஊழியர்கள் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், திடீரென மனைவியை தள்ளிவிட்டு விமான நிலைய ஊழியர்கள் இருவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  Source link

அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான முதல் ‘டி-20’ போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காஷ்மீர் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் அறிமுகமானார். அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டப்ளினில் நடந்தது. மழை காரணமாக ‘டாஸ்’ நிகழ்வில் சிறிது தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும், ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ‘பவுலிங்’ தேர்வு செய்தார். … Read more

உக்ரைன் தலைநகர் கீவில் 4 இடங்களில் வெடிகுண்டுகள் வீச்சு.. குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்.!

உக்ரைன் தலைநகர் கீவில் இன்று காலையில் 4 இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. அதில் ஒன்று நகரின் மையப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தில் விழுந்து வெடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததுடன், கரும்புகையும் சூழ்ந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. வான்வழி தாக்குதலுக்கான சைரன் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அரை மணி நேரம் கழித்து குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் அதிகளவில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக கீவ் மேயர் தெரிவித்துள்ளார். தலைநகரில் 3 வாரங்களுக்கு பிறகு இன்று ரஷ்ய … Read more