இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படை கப்பல் கடலுக்கடியில் 23,000 அடி ஆழத்தில் கண்டுபிடிப்பு!

மணிலா, இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் பிலிப்பைன்ஸில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 7,000 மீட்டர் (23,000 அடி) கீழே கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் மிக ஆழமான கப்பல் விபத்து ஆகும். அக்டோபர் 25, 1944 அன்று மத்திய சமர் தீவில் நடந்த போரின் போது அமெரிக்க கடற்படையின் கப்பல் சேதமடைந்தது. இந்த நிலையில், இந்த கப்பல் மூழ்கிய இடம் குறித்த துப்புகளை அடிப்படையாக கொண்டு, கடலுக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலில் தேடும் பணியில் ஈடுபட்ட … Read more

இறந்துவிட்டதாக பாக்., கூறி வந்தபயங்கரவாதி சிறையில் அடைப்பு| Dinamalar

லாகூர்-மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சஜித் மஜீத் மிர், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துஉள்ளது. மும்பையில், 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட, 167 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஜித் மஜீத்தை கைது செய்யும்படி பாக்.,கை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. ஆனால், சஜித் … Read more

தெற்கு ஈரானில் நிலநடுக்கம்- ரிக்டா் அளவில் 5.6 ஆக பதிவு

தெஹ்ரான், தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் கிஷ் தீவு உள்ளது. இந்த தீவிற்கு வடகிழக்கே 22 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது காலை 8.07 மணியளவில் 22 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதாகவும். 30-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்துள்ளதாக ஈரான் செய்தி நிறுவனம் தொிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags : ஈரான் நிலநடுக்கம்

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து – உலக தலைவர்கள் கண்டனம்!

வாஷிங்டன், அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது. இந்நிலையில், 15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மகாணம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமை என்ற முந்தைய தீர்ப்பை … Read more

10 மாதங்களுக்கு முன்பு ஆற்றில் தவறவிட்ட ஐபோன்… புதுசுபோல வேலை செய்யும் அதிசயம்!

கடந்த ஆகஸ்ட் 2021 இல் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவைன் டேவிஸ் என்பவர் இளங்கலை படிப்பை முடித்தார். அதை கொண்டாடுவதற்காக சின்டர்ஃபோர்ட் அருகே உள்ள வை நதி அருகே நடத்தப்பட்ட கிராஜுவேஷன் பார்ட்டியில் பங்கேற்றார். அப்போது அவர், கைதவறி தனது ஐபோனை நதியில் போட்டுவிட்டார். இதையடுத்து அவர் நதியில் இருந்து போனை மீட்டெடுப்பது சாத்தியமற்றது என எண்ணி வீடுதிரும்பிவிட்டார். இதையடுத்து ஏறக்குறைய பத்து மாதங்களுக்குப் பிறகு, அதே ஆற்றில் தனது குடும்பத்துடன் மிகுவல் பச்சேகோ என்பவர் கேனோயிங் சென்றார். … Read more

ஒற்றை காலில் 10 வினாடிகளுக்கு மேல் நிற்க முடியவில்லையா? நெருங்குகிறது மரணம்

லண்டன், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் இறப்பு மற்றும் சமநிலை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிய ஆய்வு ஒன்றை நடத்த முடிவு செய்தனர். இதன்படி, கடந்த 2008ம் ஆண்டு அந்த ஆய்வு தொடங்கியது. ரியோ டி ஜெனீரோவை சேர்ந்த டாக்டர் கிளாடியோ கில் அராவ்ஜோ தலைமையிலான ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில் 51 முதல் 75 வயது வரையிலான 1,702 பேர் கலந்து கொண்டனர். 2020ம் ஆண்டு … Read more

ஒரு முறை சார்ஜ் செய்தால் 1,000 கி.மீ. தூரம் வரை வாகனங்களை இயங்க வைக்கும் பேட்டரியை உருவாக்கியுள்ளதாக சீன நிறுவனம் அறிவிப்பு

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்களை இயங்க வைக்கும் பேட்டரியை உருவாக்கியுள்ளதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவின் முன்னணி லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பாளரான சி.ஏ.டி.எல். என்ற நிறுவனம், கியூலின் என்ற பெயரில் அந்த பேட்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் 4680 பேட்டரியைவிட தங்கள் நிறுவன தயாரிப்பு 13 சதவீதம் கூடுதல் ஆற்றலை வழங்குவதோடு, விரைவாக சார்ஜ் செய்யும் வகையிலும், அதிக ஆயுள் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுளதாக சி.ஏ.டி.எல். விளக்கமளித்துள்ளது.  Source … Read more

“பின்னோக்கிய நகர்வு” – அமெரிக்காவின் கருக்கலைப்பு சட்ட தீர்ப்புக்கு சர்வதேச அளவில் வலுக்கும் எதிர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் 1973-ஆம் ஆண்டு கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் உரிமையை உறுதி செய்த ரோ v வேட் தீர்ப்பை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. எட்டு நீதிபதிகள் அடங்கி அமர்வில் 5 பேர் கருக்கலைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்களில் கருக்கலைப்புச் சட்டம் உடனடியாக அமலாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. … Read more

ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேறுகிறது மைக்ரோசாஃப்ட்

ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேறுவது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதால், ரஷ்யா மீது மேற்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடையை விதித்துள்ளன. இதையடுத்து ரஷ்யாவில் புதிய சேவைகளை வழங்குவதில்லை என அறிவித்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், முழுவதுமாக வெளியேற முடிவு செய்துள்ளது.  Source link

அடுத்தது சூப்பர் மார்க்கெட்: ரஷ்யாவில் கடைகள் திறக்க இந்தியாவுக்கு புதின் அழைப்பு

மாஸ்கோ: ரஷ்யாவிடம் இருந்து 30 சதவீத தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியை இந்தியா வாங்கி வரும் நிலையில் இந்திய சூப்பர் மார்க்கெட்களை திறக்க அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் … Read more