உலக செய்திகள்
சரக்கு போக்குவரத்துக்கு தடை விதித்த லிதுவேனியாவுக்கு ரஷ்யா எச்சரிக்கை – 3-ம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?
மாஸ்கோ: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மனியிடம் இருந்து கலினின்கிரேடு பகுதியை ரஷ்யா தன் வசமாக்கி கொண்டது. எனினும், ரஷ்யாவுடன் இணைந்த ஒரே நிலப்பரப்பாக இல்லாத கலினின்கிரேடு பகுதி, நேட்டோ உறுப்பு நாடுகளாக உள்ள போலந்து – லிதுவேனியாவுக்கு இடையில் பால்டிக் கடல் பகுதியை ஒட்டியுள்ளது. கலினின்கிரேடு பகுதிக்கு லிதுவேனியா வழியாக ரயிலில் சரக்குப் போக்குவரத்தும் காஸ் குழாய்களையும் ரஷ்யா கொண்டு செல்கிறது. இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார … Read more
கனரக வாகனங்களை விழுங்கும் அளவுக்கு 20 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட திடீர் பள்ளம்
லண்டனில் கனரக வாகனங்களையே விழுங்கும் அளவுக்கு சாலையில் திடீரென 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இரவில் தீடிரென ஏற்பட்ட பள்ளத்தில் இரு சக்கர வாகன ஒட்டி தலைகுப்புற விழுந்து விபத்துள்ளானார். மேற்கொண்டு வாகனங்கள் விழாமல் இருக்க சாலை மூடப்பட்ட நிலையில், சீரமைப்பு பணி தொடர்கிறது. Source link
உலகம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி.!
உலகம் முழுவதும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியாவில் முதல் முறையாக குரங்கம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது அந்நாட்டினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனில் இருந்து சிங்கப்பூர் வந்த நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜெர்மனியில் இருந்து தென்கொரியாவிற்கு திரும்பிய நபருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. Source link
பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வெளிப்படை| Dinamalar
கொழும்பு-கச்சா எண்ணெய் வாங்கக் கூட பணமில்லாத அளவிற்கு இலங்கை பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக, அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, மின் வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கித் தவித்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பார்லிமென்டில் பேசியதாவது:இலங்கை பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து விட்டது. கச்சா எண்ணெய் வாங்கக் கூட அன்னியச் செலாவணி இல்லை. இலங்கை எண்ணெய் … Read more
இந்தியாவின் நல்லுறவை மதிக்கிறோம்: அமெரிக்கா| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில், மிக முக்கிய கூட்டாளியாக விளங்கும் இந்தியா உடனான நல்லுறவுக்கு என்றும் மதிப்பளிப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதை மீறி, இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்குகிறது. இதனால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில், சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி, … Read more
பாலியல் வன்முறை அதிகரிப்பால் பாக்.,கின் பஞ்சாபில் அவசர நிலை
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தினசரி பாலியல் பலாத்கார எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால், அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில், பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில், 14 ஆயிரத்து 456 பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி உள்ளனர். இதில், பஞ்சாப் மாகாணம் முன்னிலை வகிக்கிறது. இந்த தகவலை, பெண்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தில், தினசரி பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளதை … Read more