இந்தியா-வங்காளதேசம் இடையே 2 ஆண்டுகளுக்கு பின் பேருந்து போக்குவரத்து மீண்டும் இயக்கம்

டாக்கா, கொரோனா பெருந்தொற்று பரவலை முன்னிட்டு உலக நாடுகளில் போக்குவரத்து சேவைகள் முடங்கின. உள்ளூர் சேவை தவிர்த்து, வெளிநாடுகளுடனான பேருந்து, ரெயில் மற்றும் விமான சேவையும் முடங்கியது. இந்நிலையில், தொற்று குறைந்து வரும் சூழலில் பல நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரெயில் சேவைகள் கடந்த் 2020ம் ஆண்டு மார்ச்சில் நிறுத்தப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு பின் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான … Read more

எரிப்பொருட்களின் விலையேற்றத்தை எதிர்த்து 1000க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் போராட்டம்..!

எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தென்கொரியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிப்பொருட்களின் விலையை குறைக்காத வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். லாரி ஓட்டுநர்களின் இந்த ஒட்டுமொத்த வேலைநிறுத்தத்தினால் அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டு செமிகண்டக்டர்களின் கச்சா பொருட்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி பெருமளவுக்கு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. Source link

வியட்நாம் விமானப்படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் டாலர்கள் நிதியுதவி – ராஜ்நாத் சிங்

வியட்நாம், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் சென்று உள்ளாா். அந்நாட்டு விமானப்படை பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை நிறுவுவதற்காக 1 மில்லியன் அமொிக்க டாலருக்கான காசோலையை வழங்கினாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவில், வியட்நாம் விமானப்படை அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை நிறுவுவதற்காக 1 மில்லியன் அமொிக்க டாலருக்கான காசோலையை வழங்கினேன். வியட்நாம் வான் பாதுகாப்பு மற்றும் … Read more

ரஷிய கல்லூரிகள், பல்கலை கழகங்கள் மீது தடை; உக்ரைன் அதிபர் அறிவிப்பு

கீவ், உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 107வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் பல நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதனால், உக்ரைன் மற்றும் … Read more

அமேசான் காடுகள் அழிப்பைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல்பாடு: அமெரிக்கா – பிரேசில் ஒப்புதல்

வாஷிங்டன்: அமேசான் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதில் ஒன்றிணைந்து செயல்பட அமெரிக்கா – பிரேசில் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில், “லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த அமெரிக்க உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபரி ஜோ பைடனும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவும் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின்போது, அமேசான் காடுகளை மேலும் அழிக்கப்படுவதைத் தடுப்பதில் ஒன்றிணைந்து செயல்பட இரு அதிபர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும், உக்ரைன் போர் குறித்தும் இரு நாட்டு தலைவர்கள் … Read more

அமெரிக்காவில் தொழிற்சாலையில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு – 3 பேர் பலி

அமெரிக்கா மேரிலேண்ட் தொழிற்சாலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஸ்மித்ஸ்பர்க் நகரில் உள்ள தொழிற்சாலையில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தன துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டடி பட்டு உயிரிழந்தனர். சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மர்ம நபரை விரட்டிச் சென்று போலீஸ் துப்பாக்கி பிரிவு வீரர் நடத்திய சூட்டில் அவர் படுகாயங்களுடன் பிடிபட்டார். எதற்காக துப்பாக்கிச் சூடு நடந்தது என போலீசார் … Read more

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 51.17 கோடி ஆக உயர்வு

வாஷிங்டன், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு, 220க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வரும் வைரசால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 86 லட்சத்து 8 ஆயிரத்து 707 … Read more

வடகொரியா ஏவுகணை பரிசோதனை செய்வதை நாங்கள் விரும்பவில்லை: சீனா

நியூயார்க்: வடகொரியா மீண்டும் ஒருமுறை ஏவுகணை பரிசோதனை செய்வதை நாங்கள் விரும்பவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நாவுக்கான சீன தூதர் ஜாங் ஜுன் கூறும்போது, ‘வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. அணு ஆயுத ஒழிப்பு என்பது சீனாவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். Source link

சீனாவின் ஹங்சோ நகரத்தில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து… 4 பேர் உயிரிழப்பு

கிழக்கு சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள ஹங்சோ நகரத்தில் வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்தின் 2-வது மாடியில் இயங்கி வந்த சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தில் முதலில் தீப்பிடிக்கத் தொடங்கி கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நச்சு வாயுவை சுவாசித்த ஒருவர், தீக்காயங்கள் ஏற்பட்ட 5 பேர் என மொத்தம் 11 பேர் … Read more

மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கலை துண்டிக்க முடியாது: விளாடிமிர் புடின்

மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவித்து, மாஸ்கோவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைத் திசைதிருப்ப முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கலை மேற்கத்திய நாடுகள் பல ஆண்டுகளுக்கு முழுமையாகத் துண்டிக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வியாழனன்று இதை கூறினார். ரஷ்ய மன்னர் பீட்டர் தி கிரேட் அவர்களின் 350 வது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்கோவில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்ட பின்னர் ரஷ்ய அதிபர் … Read more