கிரெம்ளின் மாளிகைக்கு விரைந்தஅதிபரின் பாதுகாப்பு வாகனங்கள்| Dinamalar

மாஸ்கோ,-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வசிக்கும் ‘கிரெம்ளின்’ மாளிகைக்கு, அவரது பாதுகாப்பு வாகனங்கள் வேகமாக வந்த காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி, பல ஊகங்களை கிளப்பி விட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடினுக்கு புற்றுநோய் உள்ளதாக, சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதையடுத்து, ஒரு நிகழ்ச்சியில் அவர் கைகுலுக்கும் போது கைகள் நடுங்கியதும், கால்கள் தள்ளாடியதும், அவர் உடல்நிலை குறித்த சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவதாக இருந்தன. இந்நிலையில், மாஸ்கோவில் புடின் வசிக்கும் கிரெம்ளின் மாளிகைக்கு, நேற்று இரவு 11:00 … Read more

கடும் மின்சார நெருக்கடியால் இருளில் மூழ்கிய ஜப்பான்…!

டோக்கியோ, மின்சார நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஜப்பான் அரசு மக்கள் மின்சிக்கனத்தை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஜப்பானில் மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அங்கு ஜூன் மாதத்தில் 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜப்பானில் வெப்பக்காற்று காரணமாக மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே நிலநடுக்கம் காரணமாக நாட்டின் அணுமின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேவை அதிகரித்திருப்பதால் அங்கு மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சிக்கனத்தை கடைபிடிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கும் ஜப்பான் … Read more

ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை குறித்து மீண்டும் சர்ச்சை.. அதிபர் மாளிகையை நோக்கி பாதுகாப்பு வாகனங்கள் விரைந்ததால் பரபரப்பு!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், அதிபர் மாளிகையை நோக்கி புடினின் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்கள் திடீரென வேகமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  புடினின் உடல்நிலை தொடர்பாக ஏதாவது அவசர அழைப்பு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்துடன் அதிபரின் வாகனங்களை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இருப்பினும், அதுபோன்ற விஷயங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் அதிபர் புடின் நலமாக இருக்கிறார் என்றும் கிரெம்ளின் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Source link

ஜி7 மாநாடு: பிரதமர் மோடியின் தோளில் தட்டி அழைத்து கைகுலுக்கிய அமெரிக்க அதிபர் பைடன்! -வீடியோ வைரல்

பெர்லின், ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இந்த ஆண்டுக்கான மாநாடு, ஜெர் மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. நேற்று மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஜி-7 நாடுகள் … Read more

ஜப்பானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை… 3 மணி நேரம் மின்விளக்குகளை அணைக்க வலியுறுத்தல்!

ஜப்பானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகரித்துள்ளதால், 3 மணி நேரம் மின்விளக்குகளை அணைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. பல வாரங்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்போர் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. தலைநகரின் வடமேற்கு நகரமான இசெசாகியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. Source link

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் பானிப்பூரி விற்கத் தடை..!

வட இந்தியாவில் மட்டுமல்லாது தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமடைந்து வரும், பானிப்பூரியின் விற்பனை நேப்பாள தலைநகர் காட்மாண்டுவில் தடை செய்யப்பட்டுள்ளது. பானிப்பூரியுடன் கலக்கப்படும் நீரில் மலேரியாவை உண்டுபண்ணும் பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளதால் பானிப்பூரியை விற்க அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள லலித்பூர் என்ற இடத்தில் இதுவரை 12 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

பாகிஸ்தானில் பயங்கரவாதம் அதிகரிக்க இம்ரான் கானே காரணம்: ஷெபாஸ் ஷெரீப் விமர்சனம்

இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத செயல்கள் அதிகரித்ததற்குப் பின்னால், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில், “கடந்த நான்கு ஆண்டுகளாக பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்ததற்கு இம்ரான் கான்தான் காரணம். பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடர்வோம். பாகிஸ்தானின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். கடந்த நான்கு … Read more

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 போலீசார் உயிரிழப்பு.!

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 போலீசார் உயிரிழந்தனர். அந்நாட்டின் வடக்கு எல்லையோர மாகாணமான நியூவோ லியோனில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை பிடிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், படுகாயமடைந்த 4 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Source link

எருது சண்டையின் போது சரிந்து விழுந்த மேடை – 4 பேர் பலி

கொலம்பியாவின் எஸ்பினல் நகரத்தில் கொரலேஜோ எனப்படும் பாரம்பரிய எருது சண்டை நடைபெற்றது. எருது சண்டையைப் பார்வையாளர்கள் கண்டு ரசிப்பதற்காக பல அடுக்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் போட்டியை ரசித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மேடை சரிந்து விழுந்தது. இதில், 4 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த மேடை மூங்கிலால் அமைக்கப்பட்டிருந்ததாலே பாரம் தாங்காமல் சரிந்து விழுந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க | கருக்கலைப்பு தடை; அமெரிக்க தெருக்களில் வலுக்கும் மக்கள் … Read more

விண்வெளியில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க சீனா நடவடிக்கை..!

விண்வெளியில் முதல் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க  நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இத்திட்டத்திற்கன முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வருகிற 2028ஆம் ஆண்டில் அந்த மின்னுற்பத்தி நிலையம் செயல்பாட்டிற்கு என கூறப்படுகிறது. 10 கிலோ வாட் திறன் கொண்ட அந்த மின் உற்பத்தி நிலையம், சூரிய ஒளியை மின்சாரம் மற்றும் நுண்ணலைகளாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்படுவதாகவும், செயற்கைக்கோள்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் செயல்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது Source link