21 வயதுக்குட்பட்டோர் துப்பாக்கி வாங்க தடை – அரசு அதிரடி உத்தரவு!
நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு 18ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில், துப்பாக்கிக் கலாசாரம் தலைதூக்கி உள்ளது. அங்கு அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. அண்மையில், நியூயார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேரும், டெக்சாஸ் மாகாணத்தில் தொடக்கப் பள்ளியில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டதில் 19 மாணவர்கள் உள்பட 21 பேரும் பலியான சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. … Read more