புல்லட் ரயில் விபத்துடிரைவர் பரிதாப பலி| Dinamalar

பீஜிங்:சீனாவில், ‘புல்லட்’ எனப்படும், அதிவேக ரயில் தடம் புரண்டதில் டிரைவர் உயிரிழந்தார். ஏழு பயணியர் காயம் அடைந்தனர்.நம் அண்டை நாடான சீனாவின் தென்மேற்கில் உள்ள குய்சோ மாகாணத்தில் இருந்து, குவாங்சோ மாகாணத்துக்கு அதிவேக புல்லட் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. ரோங்ஜியாங் ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயில் டிரைவர் உயிரிழந்தார். காயம் அடைந்த ஏழு பயணியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயிலில் இருந்த 136 பயணியர் … Read more

மேற்கத்திய நாடுகள் மீதுரஷ்ய அதிபர் குற்றச்சாட்டு| Dinamalar

மாஸ்கோ:”சர்வதேச சந்தையில் உணவு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடைகள் தான் காரணம்,” என, அந்நாட்டு அதிபர் புடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதியை ரஷ்யா தடுப்பதாக உக்ரைன் அரசு புகார் கூறியுள்ளது. இது குறித்து ரஷ்ய ‘டிவி’யில் அதிபர் விளாடிமிர் புடின் கூறியதாவது:உலகளவில் உணவு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளும் ஒரு காரணம். இதனால் … Read more

விண்வெளி மைய கட்டுமானம்சீனாவின் புதிய குழு பயணம்| Dinamalar

பீஜிங்:விண்வெளியில் அமைத்து வரும் விண்வெளி மைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, மூன்று வீரர்களை சீனா அனுப்புகிறது. இவர்கள் இன்று பயணம் மேற்கொள்ள உள்ளனர்.விண்வெளி ஆய்வுக்காக விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் முயற்சியில் பல நாடுகள் இணைந்து இந்த மையத்தை அமைத்து உள்ளன.இதற்கு போட்டியாக, விண்வெளியில் தனியாக விண்வெளி மையத்தை சீனா அமைத்து வருகிறது. 2021 ஏப்ரலில் இதற்கான பணிகள் துவங்கின. மொத்தம், 11 முறை விண்வெளி மையத்துக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல ஏற்கனவே … Read more

ஐரோப்பாவின் கபட நாடகம் வெளியுறவு அமைச்சர் சூடு| Dinamalar

பிரடிஸ்லவா:உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு கபட நாடகம் போடுவதாக, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.மத்திய ஐரோப்பாவின் சுலோவேக்கியாவில், உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கும், ‘குளோப்செக் 2022’ மாநாடு நடந்தது. இதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:இந்தியா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பது சரியல்ல. உக்ரைன் போர் காரணமாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் சர்வதேச எரிபொருள் சந்தையை ஒரு வட்டத்திற்குள் அடக்கி விட்டன. ஈரான், வெனிசுலா … Read more

மியான்மரில் 200 வீடுகள் எரிப்புராணுவத்தினர் அட்டூழியம்| Dinamalar

பாங்காக்:மியான்மரில், ராணுவத்தினர் மூன்று கிராமங்களில் உள்ள, 200க்கும் மேற்பட்ட வீடுகளை தீயிட்டு எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.நம் அண்டை நாடான மியான்மரில் கடந்த ஆண்டு துவக்கத்தில் ராணுவத்தினர் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றினர். அதுமுதல் ராணுவ அரசுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராட துவங்கினர். போராட்டம்இந்த போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ராணுவ அரசு நசுக்கியது. எனினும், மியான்மரின் வடக்கில் உள்ள சகாய்ங் பிராந்தியத்தில் நடந்து வரும் போராட்டத்தை ராணுவத்தால் அடக்க முடியவில்லை. அங்குள்ள மக்கள் பாதுகாப்பு … Read more

ரஷ்ய நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – உக்ரைன் அரசு

நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை அமெரிக்காவிடம் கோரியுள்ள உக்ரைன், ரஷ்ய நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பேசிய அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதரான ஒக்சானா, தங்கள் நாட்டை பாதுகாக்க நீண்ட தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகள் தேவைப்படுவதாக கூறினார். அந்த ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் உக்ரைன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யப் படைகளால் நடத்தப்படும் குற்றச்செயல்கள் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அந்நாட்டின் … Read more

பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மக்கள், பெண்கள் கோஷம்..!

பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கண்டித்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்திற்காக ஒரே வாரத்தில் 2-வது முறையாக எரிபொருள் விலையை ஷாபஸ் ஷெரிப் அரசு உயர்த்தியது. அரசை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்தார். லாஹூர், கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் திரண்ட நுற்றுக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் … Read more

அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில், எந்திரக்கோளாறு காரணமாக ராட்டினத்தில் பயணம் செய்த பயணிகள்.!

அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில், எந்திரக்கோளாறு காரணமாக ராட்டினத்தில் பயணம் செய்த  பயணிகள் அந்தரத்தில் தவித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பென்சில்வேனியா மாகணத்தில் உள்ள கென்னிவுட் பொழுதுபோக்கு பூங்காவில், ஏரோ 360 என்ற வகை ராட்டினத்தில் பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகள், எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அந்தரத்தில் தவித்தனர். பூங்கா ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பயணிகளை மீட்டு சிகிச்சை அளித்தனர். Source link

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் வெளியாகும் குட் நியூஸ்!

பாகிஸ்தான் அரசு ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்து உள்ளனர். அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதன்படி பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 209.86 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 204.15 ரூபாய் ஆகவும் உள்ளது. இதனால் மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். … Read more

கொழும்பு டு மாஸ்கோ புறப்பட இருந்த விமானம் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தம்.. இறக்கி விடப்பட்ட பயணிகள்.. காரணம் என்ன.?

கொழும்பில் இருந்து மாஸ்கோவுக்குப் புறப்பட இருந்த ஏரோபுளோட் விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் அதிலிருந்த பயணியர்கள் கீழே இறக்கி விடப்பட்டனர். ரஷ்யாவின் ஏரோபுளோட் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்குப் பெற்று விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் கொழும்புக்கு வந்த ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் மீண்டும் மாஸ்கோவுக்குப் புறப்படத் தயாராக இருந்த கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அதிலிருந்த பயணியர்கள் இறக்கி விடப்பட்டனர். உக்ரைன் போரால் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் ஏரோபுளோட்டுக்கு விமானங்களைக் … Read more