பறக்கும் விமானத்தில் சிறுநீர் கழித்ததாக சகோதரர்கள் சண்டை; விமானம் அவசர தரையிறக்கம்

கரிரீஸ் கிரீஸ் நோக்கி பறந்த விமானத்தில், நடுவானில் போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்ட சகோதரர்களை போலீசார் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த ஆல்பி மற்றும் கென்னத் சகோதர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் மற்றொருவர் மீது சிறுநீர் கழித்ததாக கூறி சண்டையிட்டுக் கொண்டனர். சகோதரர்களின் சண்டையில் விமானம் கொர்பு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. சகோதரர்களுக்கு 50 ஆயிரம் யூரோ அபராதமும், ஜெட் 2 விமானங்களில் … Read more

“இன்னும் எத்தனைக் கொலைகள்..? துப்பாக்கிச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்” – பைடன் ஆவேசப் பேச்சு

நியூயார்க்: “அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்” அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் ஆவேசமாகப் பேசினார். அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞர், போலீஸாரால் கொல்லப்பட்டார். பள்ளிச் சிறுவர்களை பாதுகாக்கப் போராடிய இரண்டு ஆசிரியர்களும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடந்த ராப் … Read more

Turkiye: துருக்கி பெயரை மாற்ற ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல்!

துருக்கி நாட்டின் பெயரை மாற்ற ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. துருக்கி அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் அந்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே என மாற்றம் செய்யக் கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துருக்கி அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டது. சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பை அங்கீகரிக்கப்படுத்த தேசத்தின் பெயரை “துர்க்கியே” என பெயர் மாற்றி அந்த நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் அறிவித்தார். … Read more

துபாய் புர்ஜ் கலீஃபாவிற்கே டப் கொடுக்க போகும் சவூதி அரேபியா.. இவ்வளவு அடி உயரமா..?

சவூதி அரேபியா 500 பில்லியன் டாலர் செலவில் மெகா மேம்பாடு திட்டத்தில் உலகின் மிகப்பெரிய கட்டிடங்களை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா தற்போது 828 மீட்டர் உயரத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடமா இருக்கும் நிலையில், அதைவிட பெரியதாக ஜித்தா கோபுரத்தை உருவாக்க சவுதி அரேபியா உருவாக்கி வருகிறது. ஜித்தா கோபுரம் 1000 மீட்டர் உயரத்தில் 167 மாடிகளை கொண்டதாக இக்கட்டிடம் உருவாகிறது.  Source link

"இன்னும் எத்தனை படுகொலைகள் ?" – கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க ஜோ பைடன் வலியுறுத்தல்

வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 25-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞர் பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கைத்துப்பாக்கியை தடை செய்ய பொதுமக்கள் தரப்பில் … Read more

வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியது தென் கொரியா..!

தென்கொரியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய தென்கொரிய பிரதமர் ஹான் டக்-சூ, தடுப்பூசி செலுத்தாமல் தென்கொரியா வரும் வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறை வரும் ஜூன் 8ம் தேதி முதல் நீக்கப்படும் என அறிவித்தார். அதே போல, சர்வேதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். எனினும், பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

உக்ரைனில் மனித உரிமை மீறல்- ரஷியா மீது சர்வதேச விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படையினர் உக்ரைனில் தாக்குதல் நடத்திய போது மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து ரஷிய படைகள் செய்த குற்றங்கள் மற்றும் அத்துமீறல்களுக்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இந்த … Read more

துருக்கி நாட்டின் பெயர் மாற்றம் – அதிபர் எர்டோகன் கோரிக்கைக்கு ஐ.நா. ஒப்புதல்..!!

நியூயார்க், துருக்கி அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் அந்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே என மாற்றம் செய்யக்கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துருக்கி அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டது. சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பை அங்கீகரிக்கப்படுத்த தேசத்தின் பெயரை “துர்க்கியே” என பெயர் மாற்றி அந்த நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் அறிவித்தார். இது குறித்து அவர் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்தில், … Read more

ரூ.100-க்காக புதுமணப்பெண் கொலை – திருமணமான 2 மாதத்தில் நிகழ்ந்த சோகம்

இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள இரத்தினபுரி எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது எலபாத்த பிரதேசம். இங்கு திருமணமான 27 வயது இளம்பெண் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.  அவர் அப்பகுதியில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட இலங்கை போலீசார் கெஹலோவிகடம எனும் பகுதியை சேர்ந்த இளைஞாரை கைது செய்தனர். 21 வயதே ஆன அவர் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை ஆவார்.  அவரிடம் நடத்தப்பட்ட … Read more

துருக்கி நாட்டின் பெயர் துர்க்கியே என மாற்றம்.. துர்க்கியே நாட்டின் கோரிக்கைக்கு ஐ.நா. ஒப்புதல்..!

துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே என மாற்றம் செய்யும் கோரிக்கைக்கு ஐ.நா. ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பபை அங்கீகரிக்கப்படுத்தும் வகையில், தேசத்தின் பெயரை துர்க்கியே என பெயர் மாற்றி அதிபர் தாயிப் எர்டோகன் அறிவித்தார். துர்க்கியே என்ற வார்த்தை அந்நாட்டின் கலாசாரம், நாகரீகம் உள்ளிட்ட மதிப்புகளை சிறப்பாக பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. துர்க்கியேவின் பெயற் மாற்ற கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர்  ஆண்டானியோ குட்ரெஸின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  Source link