இந்தோனேசியாவில் 6 1 நிலநடுக்கம்: இந்தியப் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் “இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம்” என்று சுனாமி அறிவுறுத்தல் குழு தெரிவித்துள்ளது. கிழக்கு திமோர் கடற்கரையில் வெள்ளிக்கிழமை (2022, மே 27)  6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இருப்பினும் சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. இந்த நிலநடுக்கம் “இந்தியப் பெருங்கடல் பகுதியில் … Read more

1 லட்சம் கோடி ரூபாய் அச்சடிக்கிறது இலங்கை: கடன் கொடுக்க முடியாது என கைவிரித்தது உலக வங்கி

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு கடன் கொடுக்க முடியாது என உலக வங்கி கை விரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட பணமில்லாமல் அந்நாட்டு அரசு தவிக்கிறது. இதனையடுத்து ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சடிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் … Read more

மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்ய படைகள்.. அணிவகுக்கும் உக்ரைன் பீரங்கிகள்..!

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் பீரங்கிகள் அணிவகுத்து செல்கின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2-ஆவது பெரிய நகரமாக கார்கிவ்-ஐ கைபற்ற தவறிய ரஷ்யா, கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைபற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்களை குவித்து கடும் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், டான்பாஸ் பிராந்தியத்தில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிழக்கு உக்ரேனிய நகரமான கிராமடோர்ஸ்க் நோக்கி … Read more

20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கம்மை…எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

வைரஸ் தொற்றால் ஏற்படும் குரங்கம்மை ஆப்பிரிக்க நாடுகளான கேமரூன், காங்கோ, நைஜீரியாவில் பரவலாக உள்ளது. ஆனால், பரவலாக காணப்படும் நாடுகளின்றி பல்வேறு புதிய நாடுகளிலும் குரங்கம்மை தொற்று அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் ஜெர்மனி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளைத் தவிர, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை … Read more

ஹாலிவுட் நடிகர் ரே லியோட்டா காலமானார்..!

பிரபல ஹாலிவுட் நடிகர் ரே லியோட்டா டாம்னிக்கன் குடியரசு நாட்டில் காலமானார். 70 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரே லியோட்டா, 1990ஆம் ஆண்டு மார்டின் ஸ்கோர்சசி இயக்கத்தில் வெளியான குட்ஃபெல்லாஸ் திரைப்படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார். 67 வயதான லியோட்டா, ஜேசி நிட்டோலோ என்ற பெண் தொழிலதிபரை இரண்டாவதாக மணம் செய்ய இருந்தார். கரிபீய தீவு நாடான டாம்னிக்கன் குடியரசிற்கு படப்பிடிப்பிற்காக சென்றிருந்த லியோட்டா இரவு தூக்கத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளது…ஜெனிஃபர் லோபஸ் உருக்கம்

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள உவால்டே நகரில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர், குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். இதில், 18 குழந்தைகள், 3 ஆசிரியர்கள் என 21 பேர் கொல்லப்பட்டனர்.  இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரும் கொல்லப்பட்டார். இச்சம்பவம் உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி … Read more

உக்ரைனின் பெரும் பணக்காரர் போரினால் ஏற்பட்ட பெரும் நஷ்டத்திற்காக ரஷ்யா மீது வழக்கு தொடர திட்டம்..!

உக்ரைன் நாட்டின் மரியுபோலில் 20 பில்லியன் டாலர் வரை சேதத்தை சந்தித்த உக்ரைனின் பெரும் பணக்காரரான ரினாட் அக்மெடோவ், பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக ரஷ்யா மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து உக்ரேனிய செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ரஷ்ய தாக்குதலில் பேரழிவிற்குள்ளான துறைமுக நகரமான மரியுபோலில் எஃகு ஆலைகள், இல்லிச் ஸ்டீல் அண்ட் அயர்ன் ஒர்க்ஸ் உள்ளிட்டவைகள் உருக்குலைந்து பெரும் சேதத்தை சந்தித்தாகவும், மொத்த இழப்புகளின் மதிப்பு 17 பில்லியன் டாலர் முதல் 20 … Read more

வடகொரியா மீது பொருளாதாரத் தடை: வீட்டொ அதிகாரத்தை பயன்படுத்திய இரு நாடுகள்

வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளை தண்டிக்கும் அமெரிக்காவின் முயற்சியை நிறுத்த ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தின. தென்கொரியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சியோலில் இருந்து புறப்பட்டுவிட்டார். அவர் கிளம்பிய உடனேயே, வட கொரியா அதன் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) உட்பட மூன்று ஏவுகணைகளை சோதனை செய்தது. இது மேற்கத்திய நாடுகளுக்கு அச்சம் விளைவித்துள்ள நிலையில், வட கொரியாவின் மீதான கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க … Read more

கனடாவில் பள்ளி வளாகம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை சுட்டு கொன்ற போலீசார்.!

கனடா நாட்டில் பள்ளி வளாகம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை போலீசார் சுட்டு கொன்றனர். செவ்வாய்கிழமை, அமெரிக்காவில் உள்ள ஆரம்பபள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் டொரண்டோ நகரில் உள்ள ஆரம்ப பள்ளியில் இருந்து சுமார் 400 அடி தொலைவில் துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை போலீசார் பிடிக்க முயன்ற போது அவன் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினான். போலீசார் பதிலுக்கு சுட்டதில் அவன் உயிரிழந்தான். அப்பகுதியில் … Read more

சீனா சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் -அமெரிக்கா

சீனா சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சீனாவுடன் பனிப்போர் நீடிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார். யுஎஸ்ஸின் சீனா குறித்த கொள்கை என்ற தலைப்பில் வாஷிங்டனில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய அவர், சர்வதேச சட்டங்கள், ஒப்பந்தங்கள், கொள்கைகள், அமைதியையும் பாதுகாப்பையும் நாடும் அமைப்புகளை பலப்படுத்த அமெரிக்கா உறுதி கொண்டிருப்பதாக பிளிங்கென் தெரிவித்தார். அனைத்து நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்றும் அவர் … Read more