சீனாவில் கொரோனா எதிரொலி: வீட்டில் பணியாற்றுவது நீட்டிப்பு| Dinamalar

பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரை வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் காரணமாக இரு மாதங்களுக்கு மேலாக பகுதி ஊரடங்கு அமலில் உள்ளது. 4.80 லட்சம் பேர் வீடுகளில் முடங்கியுள்ளனர். 15 லட்சம் பேர் குறிப்பிட்ட பகுதி வரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான கட்டுப்பாட்டில், 2.12 கோடி பேர் உள்ளனர்.இந்நிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. … Read more

தைவானை தாக்க 1.40 லட்சம் வீரர்கள், 953 கப்பல்கள் தயார் – சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு

பெய்ஜிங்: 1.40 லட்சம் ராணுவ வீரர்கள், 953 கப்பல்களை தயார்படுத்துமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசிய ஆடியோ சீனாவில் வெளியானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்துமோ என்ற அச்சம் தைவான் மக்களிடையே நிலவி வருகிறது. சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. … Read more

போர் உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 10 கோடியாக உயர்வு – ஐ.நா தகவல்

உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து ஐ.நா.அகதிகளுக்கான முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், போர், வன்முறை, மனித உரிமை மீறல்கள், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அகதிகளாக இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது இதுவே முதல் முறை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.  Source link

புத்தர் காட்டிய வழியை இன்றைய உலகம் பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது: மோடி| Dinamalar

டோக்கியோ: புத்தர் காட்டிய வழியை உலகம் இன்றைக்கு பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது என பிரதமர் மோடி ஜப்பானில் இந்தியர்கள் மத்தியில் பேசினார். இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, டோக்கியோவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, புத்தர் காட்டிய வழியை உலகம் இன்றைக்கு பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது. வன்முறை, அராஜகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், என உலகம் இன்று எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து மனித குலத்தை … Read more

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கத் தயார்: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திங்களன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து, அழிவை ஏற்படுத்தி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழியைக் கண்டறிய அவர் சந்திக்கும்  நினைக்கும் ஒரே ரஷ்ய அதிகாரி புடின் மட்டுமே, வீடியோ இணைப்பு மூலம் உரையாற்றும் போது ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு எதிராக … Read more

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் முன்னோடியாக இந்தியா உருவெடுக்கும் – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை

டாவோஸ்: பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா முன்னோடியாக உருவெடுக்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு இந்திய தொழில்துறையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக … Read more

ஷாங்காய் நகரில் தெருக்களில் ஆள் நடமாட்டமே இல்லாத காட்சிகள்.. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு கடும் கட்டுப்பாடுகள்..!

சீனாவின் வர்த்த தலைநகரான ஷாங்காயில் அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கு நீடிக்கப்படுவதால், தெருக்களில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. அந்நாட்டில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நிலையில், பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஷாங்காயில் கணிசமான தொற்று பாதிப்புகள் பதிவாகி வரும் நிலையில், பல பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு, பல வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளன. Source link

ஈரானில் 10 மாடி கட்டிடம் இடிந்து விபத்து- 5 பேர் பலி

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் தெற்கு பகுதி நகரான அபடானில், அமீர் கபீர் தெருவில் அமைந்த 10 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து சரிந்தது. இந்த சம்பவத்தில் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பிற நகரங்களில் இருந்து அவசரகால குழுக்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2 மோப்ப நாய் குழுக்களும், ஹெலிகாப்டர் ஒன்று மற்றும் 7 மீட்பு வாகனங்களும் சென்றன. அவர்கள் சென்றபோது, அந்த பகுதியில் வசித்த குடியிருப்புவாசிகள் நகர … Read more

கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால் இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை

ஜெட்டா: கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு மக்கள் செல்வதற்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக பல்வேறு நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே கரோனா பரவல் அதிகரித்தபோது உலக நாடுகள் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதித்தன. அத்துடன் மற்ற நாடுகளுக்கு விமான போக்குவரத்தையும் நிறுத்தின. இதுகுறித்து சவுதி அரேபியா பிறப்பித்துள்ள உத்தரவில், இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, … Read more

டாம் க்ரூசின் மிஷன் இம்பாசிபிள் 7 டிரைலர் வெளியானது.. முதல் பாகம் அடுத்த ஆண்டு ஜூன் 14ல் வெளியாகிறது..!

ஹாலிவுட்டின் டாம் க்ரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாசிபிள் 7 படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ஈதான் ஹண்ட் என்ற கதாபாத்திரத்தில் மீண்டும் டாம் க்ரூஸ் உயிரை உறைய வைக்கும் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்துள்ளார் கார் சேசிங் காட்சிகள் நேருக்கு நேர் மோதும் சண்டைக் காட்சிகள் என்று அனைத்து வகையான சாகசங்களும் நிரம்பிய இப்படம் டாம் க்ரூஸின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது. 2 பாகங்களாக எடுக்கப்படும் இத் திரைப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டில் ஜூலை 14 ஆம் … Read more