குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு தனிமை கட்டாயம் – பெல்ஜியம் அரசு அறிவிப்பு!

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என, பெல்ஜியம் நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் உலக நாடுகள் பலவற்றில் ‘ மங்கி பாக்ஸ் ‘ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த 21 ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 12 நாடுகளில் 92 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பாதிப்புக்கு உள்ளான யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை. இந்த தகவலை உலக சுகாதார அமைப்பும் … Read more

உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த தன்னை சீண்டியவரின் விரலை ஆக்ரோஷமாக கடித்து குதறிய சிங்கம்..!

ஜமைக்கா உயிரியல் பூங்காவில் தன்னிடம் சீண்டியவரின் விரலை சிங்கம் கடித்து குதறிய வீடியோ காட்சி இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. செயின்ட் எலிசபத் நகரில் இருந்த அந்த உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த, அங்கு பணியாற்றும் நபர் ஒருவர் கூண்டிற்குள் தனது விரலை நீட்டி சிங்கத்தை சீண்டிக்கொண்டிருந்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த சிங்கம், அந்த நபரின் விரலை கடித்துக் குதறியது.  Show off bring disgrace The lion at Jamaica Zoo ripped his finger … Read more

ரஷ்ய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்த உக்ரைன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுத்துவரும் நிலையில், ரஷ்ய வீரர் ஒருவரை போர்க்குற்றவாளியாக கைது செய்துள்ள உக்ரைன், அவ்வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரின்போது, 21 வயதான ரஷ்ய ராணுவ வீரர் வாடிம் ஷிஷிமரின், உக்ரைனை சேர்ந்த 62 வயது மூதாட்டியை கொன்றதாக போர் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். மேலும், அவர் வடகிழக்கில் உள்ள சுமி பகுதியில் ஒரு கிராமத்தில் … Read more

ஆபத்துடன் விளையாடும் சீனா… அந்த நாட்டை நாங்கள் பாதுகாப்போம் – அதிபர் ஜோ பைடன்.!

தைவான் நாட்டை, சீன படையெடுப்பில் இருந்து அமெரிக்க ராணுவம் பாதுகாக்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், தைவான் விவகாரத்தில் சீனா ஆபத்துடன் விளையாடுவதாக விமர்சித்தார். தைவானை பாதுகாப்பதாக ஏற்கனவே அந்நாட்டிற்கு அமெரிக்கா உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். Source link

” இலங்கையின் மூத்த சகோதரர் இந்தியா ” – நன்றி தெரிவித்த நமல் ராஜபக்சே

கொழும்பு: இலங்கைக்கு இந்தியா அளிக்கும் உதவி குறித்து அந்நாட்டு முன்னாள் அமைச்சர் நமல் ராஜபக்சே, பல ஆண்டுகளாக இலங்கையின் மூத்த சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு, பல தவணைகளில், 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு அரிசி, மருந்துகள் உள்ளிட்டவை மானியமாக வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழக அரசின், 90 … Read more

மீனவர்கள் வலையில் சிக்கிய 3 பெருந்தலை கடல் ஆமைகள் மத்திய தரைக்கடலில் விடுவிப்பு

துனிஷியாவில் ஸ்ஃபேக்ஸ் நகர் துறைமுக பகுதியில் உள்ள ஆமைகள் பராமரிப்பு மையத்தினர், மீனவர்கள் வலையில் சிக்கிய 3 பெருந்தலை கடல் ஆமைகளை மீட்டு சிகிச்சை அளித்து அவற்றை மத்திய தரைக்கடலில் விடுவித்தனர். ஆமைகளின் முன்னேற்றத்தை கண்காணிக்கும் வகையில் அவற்றின் கால்களில் சிறிய அடையாள பட்டை அணிவிக்கப்பட்டிருந்ததோடு, ஒரு ஆமையின் ஓட்டின் மீது செல்ஃபோன் அளவுள்ளா கண்காணிப்பு கருவியு பொருத்தப்பட்டிருந்தது. பெருந்தலை கடலாமைகள் சராசரியாக 45 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. Source link

“வெளிப்படையாக செயல்படும் இந்தியா”: பிரதமர் மோடி பேச்சு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியா: ஜப்பானில் நடக்கும் குவாட் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்கா, ஜப்பான் அதிபர்களுடன் முக்கிய பேச்சு நடத்தினார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கும் குவாட் அமைப்பின் இரண்டாவது உச்சி மாநாடு டோக்கியோவில் நாளை (மே.24) நடக்கிறது. முன்னதாக இன்று இந்தோ – பசிபிக் பொருளாதார வளர்ச்சிக்கான கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்திய பசிபிக் நாடுகள் அளவில் பொருளாதார … Read more

'உள் விவகாரங்களில் தலையிடாதீங்க!' – ஜோ பைடனுக்கு சீனா பதிலடி!

சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என, தைவான் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, சீனா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்டை நாடான சீனாவில், கடந்த 1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் என்ற தனி நாடு உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அது மட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை … Read more

எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கையில் மாணவர்கள் அவதி; தேர்வு எழுத பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பு..!

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பல்வேறு இடங்களிலும் போக்குவரத்தை தேடி மாணவர்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர் ஒருவர் தெரிவிக்கையில், 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை முதல் க்யூவில் நின்று பெட்ரோல் வாங்கி வைத்திருந்ததால் தனது குழந்தையை தேர்வு எழுத பள்ளிக்கு அழைத்துவர முடிந்ததாக தெரிவித்தார். Source link

பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம் – பரபரப்பு வீடியோ

கிங்க்ஸ்டன்: கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பரமாரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கூண்டுக்குள் உள்ள சிங்கத்தை, பராமரிப்பாளர் தொட முயன்றார். சிங்கம் அவரைப்பார்த்து உருமியப்படி இருந்தது.  இருப்பினும் அவர் தொடர்ந்து சிங்கத்தை தொட்டு விளையாடியபடி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கம் அவரது விரலை கடித்து  குதறியது. 15 பேர் இந்த சம்பவத்தை நின்று வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவத்தால் பராமரிப்பாளரின் விரல் முழுவதும்  துண்டிக்கப்பட்டதாக … Read more