10 லட்சம் 'ஆஷா' பெண் ஊழியர்களுக்கு உலக சுகாதார அமைப்பு விருது

ஜெனீவா, உலக சுகாதார அமைப்பின் 75-வது மாநாடு, ஜெனீவாவில் நடந்து வருகிறது. அதன் உயர்மட்ட தொடக்க அமர்வில் நேற்று விருதுகள் வழங்கும் விழா நடந்தது. உலக சுகாதாரத்துக்கு ஆற்றிய பணி, தலைமைப்பண்புடன் ஆற்றிய பணி, பிராந்திய சுகாதார பிரச்சினைகளுக்காக அர்ப்பணித்து பாடுபடுதல் ஆகியவற்றை கவுரவிக்கும்வகையில், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் ஆதனம் கிப்ரியசஸ் 6 விருதுகளை அறிவித்தார். இதில், இந்தியாவை சேர்ந்த 10 லட்சம் ‘ஆஷா’ தன்னார்வ பெண் தொண்டர்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. கிராமப்புறங்களில் … Read more

ஆடு பகை குட்டி உறவா: விளாடிமிர் புடினின் மகளுடன் ரகசியமாக வாழும் இகோர் ஜெலென்ஸ்கி

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் போராக வெடித்து, உலகையே பொருளாதார ரீதியில் பாதித்துள்ள நிலையில், அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல ஜெர்மன் பத்திரிக்கையான Der Spiegel மற்றும் ரஷ்ய ஊடகமான iStories இணைந்து நடத்திய ஆய்வில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள்களில் ஒருவர் ஜெர்மனியில் ரகசியமாக ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறது. ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மகள்களின் ஒருவரான கேத்தரினாவைப் பற்றித்தான் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் … Read more

Monkeypox | 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் Monkeypox (குரங்கு காய்ச்சல்) பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தந்து அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 13-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மொத்தம் 92 பேர் இந்த காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. 28 … Read more

உலக சுகாதார அமைப்பின் விருது – 10 லட்சம் இந்திய ‘ஆஷா’ பெண் ஊழியர்களுக்கு கௌரவம்!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பாடுபட்ட 10 லட்சம் ‘ஆஷா’ பெண் ஊழியர்களுக்கு உலக சுகாதார அமைப்பு விருது வழங்கி கௌரவித்தது . உலக சுகாதார அமைப்பின் 75-வது மாநாடு, ஜெனீவாவில் நடைபெற்றது. அதன்  தொடக்க அமர்வில் நேற்று விருதுகள் வழங்கும் விழா நடந்தது. உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் ஆதனம் கிப்ரியசஸ் 6 விருதுகளை அறிவித்தார். இதில், இந்தியாவை சேர்ந்த 10 லட்சம் ‘ஆஷா’ தன்னார்வ பெண் தொண்டர்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. கிராமப்புறங்களில் நேரடி … Read more

10 லட்சம் ஆஷா ஊழியர்களுக்கு விருது – கவுரவித்தது உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களாக கிராமப்புறங்களில் செயல்பட்டு வருபவர்கள் ஆஷா ஊழியர்கள். இவர்கள் கொரோனா காலத்தில் வீடு வீடாகச் சென்று நோயாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். மகப்பேறு, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், காசநோய் ஒழிப்பு போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் 75-வது மாநாடு ஜெனீவாவில் நடந்து வருகிறது. அதன் உயர்மட்ட தொடக்க நிகழ்ச்சியில் நேற்று விருதுகள் வழங்கும் விழா நடந்தது. உலக சுகாதாரத்துக்கு ஆற்றிய பணி, தலைமைப் … Read more

இலங்கையில் பெட்ரோல் பதுக்கலுக்கு எதிராக நாடு தழுவிய வேட்டை

கொழும்பு, இலங்கையில் அன்னிய செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் வாங்க நீண்ட வரிசை காணப்படுகிறது. இதற்கிடையே, அப்படி நிற்பவர்களில் ஏராளமானோர், பெட்ரோல், டீசலை வாங்கி பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்று வருவதாக தெரிய வந்தது. இதனால், எரிபொருள் கிடைத்தபோதிலும் நீண்ட வரிசையில் நின்று கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில்கொண்டு, பெட்ரோல், டீசலை பதுக்கி வைத்து மறுவிற்பனை செய்பவர்களுக்கு எதிராக … Read more

மெகுல் சோக்சி வழக்கு ரத்து: டொமினிகா அரசு நடவடிக்கை

புதுடெல்லி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சியும் ஆளாகி உள்ளனர். மெகுல் சோக்சி, இந்தியாவில் இருந்து தப்பி ஓடி கரீப்பியன் தீவு நாடான ஆன்டிகுவா பார்புடாவில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு டொமினிகா நாட்டினுள் சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அந்த நாட்டின் ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. தன்னை ஆன்டிகுவாவில் … Read more

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க டோக்கியோ சென்றடைந்தார் பிரதமர் மோடி

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணம் மேற்கொண்டார்.  இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று இரவு தனி விமானம் மூலம் பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி இன்று அதிகாலை தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். தூதரக அதிகாரிகள் உள்பட பலர் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.   டோக்கியோ சென்றுள்ள … Read more

வட கொரியா சவாலை சந்திக்க தயார்; அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு| Dinamalar

சியோல்-” வட கொரியா என்ன செய்தாலும், அதை சமாளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்,” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் மூன்று நாள் பயணத்தின் முடிவில் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வட கொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை சோதனை செய்வது குறித்து கேட்கப்பட்டது. அணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்தினால் அமெரிக்காவின் நிலை என்ன எனவும் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ”வட … Read more

ஈராக்கில் குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் வான்தாக்குதல் – 6 பேர் பலி

பாக்தாத், ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்திஷ்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் வாழும் நிலப்பரப்பை குர்திஷ்தான் என்று அவர்கள் அழைக்கின்றனர். ஒய்.பி.ஜி என அழைக்கப்படும் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படை குர்திஷ் மக்களை பாதுகாக்கிறது. ஆனால் துருக்கி அரசு குர்து போராளிகளின் இந்த பாதுகாப்பு படையை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து அவர்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகிறது. … Read more