இறுதி ஊர்வலத்தில் மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு.. மக்கள் பலர் படுகாயம்..!

அமெரிக்கா விஸ்கான்சின் மாகாணத்தில் இறுதி ஊர்வலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மக்கள் பலர் படுகாயம் அடைந்தனர். கடந்த மே 20ல் போக்குவரத்து போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 37 வயது இளைஞரின் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது. கல்லறை தோட்டத்தில் புகுந்த மர்ம கும்பல் குழுமியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. படுகாயம் அடைந்தவர்களின் முழு எண்ணிக்கை தெரியவராத நிலையில், 5-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   Source link

செனகலில் இந்திய வம்சாவளியினரை சந்தித்தாா் துணை ஜனாதிபதி

டக்கா், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளான காபோன், செனகல் மற்றும் மத்திய கிழக்கு நாடான கத்தாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். துணை ஜனாதிபதி காபோன் நாட்டில் தனது சுற்றுபயணத்தை முடித்துக் கொண்டு, செனகல் நாட்டின் டக்கர் நகரத்திற்கு சென்றாா். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. செனகல் நாட்டின் அதிபா் மேக்கி சாலுடன் அவா் சந்தித்தாா். விவசாயம், சுகாதாரம், பாதுகாப்பு, ரயில்வே, எரிசக்தி, கலாச்சாரம் போன்ற துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை … Read more

ஜானி டெப்புக்கு இழப்பீடு செலுத்தும் நிலையில் அம்பர் ஹெர்ட் இல்லை – வழக்கறிஞர்

அவதூறு வழக்கில் முன்னாள் கணவர் ஜானி டெப்புக்கு 10 புள்ளி 35 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நடிகை ஆம்பர் ஹெர்டுக்கு நடுவர் மன்றம் உத்தரவிட்டதையடுத்து அவரால் இத்தொகையை செலுத்த இயலாது என்று அவர் வழக்கறிஞர் Elaine Charlson தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பால் அம்பர் ஹெர்ட் சோகமாக இருப்பதாகவும் இது பெண்களுக்கு எதிரான தீர்ப்பாக இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார்.  Source link

மருத்துவ உதவி இன்றி பசிபிக் சமுத்திரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்

மனகுவா நிகரகுவா நாட்டில் பிளேயா மஜகுவால் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஜோசி புக்கெர்ட் (வயது 37) என்ற பெண் தனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அவர் கர்ப்பிணியான காலம் முதல் மருத்துவரை அணுகவோ அல்லது ஸ்கேன் செய்யவோ என எதுவும் மேற்கொள்ளவில்லை. மருத்துவர்களின் உதவி இன்றியே குழந்தை பெற்றும் உள்ளார். இவருக்கு கடந்த பிப்ரவரி 27-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு போதி அமோர் ஓசன் கார்னீலியஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுபற்றி ஜோசி கூறும்போது, சமுத்திரத்தில் … Read more

நடுவானில் பறந்த விமானத்தில் போதை தலைக்கேறி சகோதரர்கள் ரகளை.. சகோதரர்களுக்கு அபராதம், வாழ்நாள் தடை..!

கிரீஸ் நோக்கி பறந்த விமானத்தில், நடுவானில் போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்ட சகோதரர்களை போலீசார் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த ஆல்பி மற்றும் கென்னத் சகோதர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் மற்றொருவர் மீது சீறுநீர் கழித்ததாக கூறி சண்டையிட்டுக் கொண்டனர். சகோதரர்களின் சண்டையில் விமானம் Corfu விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. சகோதரர்களுக்கு 50 ஆயிரம் யூரோ அபராதமும், ஜெட் 2 விமானங்களில் பயணிக்க … Read more

விசித்திர சம்பவம்: தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்

பாங்காக் : தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் ஆர்வத்தில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக நீரில் தூண்டிலை போட்டு விட்டு காத்திருந்து உள்ளார். அவரது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் ஒன்று, அந்த மனிதரின் தொண்டைக்குள் விழுந்துள்ளது. 5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சித்து முன்னேறி உள்ளது. ஆனால், குறுகலான பகுதியில் அதனால் வெளியே வர … Read more

துப்பாக்கி கலாச்சாரம் குறித்து அதிபர் ஜோ பைடன் கவலை.. துப்பாக்கி வாங்கும் வயது வரம்பை 21 ஆக உயர்த்த நடவடிக்கை..!

துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை 18 லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அண்மையில் 18 வயது இளைஞன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி கலாச்சாரம் வளர்வது குறித்து கவலை தெரிவித்த ஜோ பைடன், துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் வாங்குவதை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும், அது முடியாவிட்டால் சிறுவர்களைப் பாதுகாக்க அதன் வயது வரம்பையாவது உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். பள்ளிக்கோ … Read more

தேர்தல் அறிவிக்காவிட்டால் பாகிஸ்தான் உள்நாட்டுப்போரை நோக்கி செல்லும்: இம்ரான்கான் எச்சரிக்கை

இஸ்லாமாபாத் கிரிக்கெட் நட்சத்திரமாக இருந்து அரசியல்களத்தில் குதித்து, பாகிஸ்தான் தெஹரிக் இ இன்சாப் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி, பாகிஸ்தானின் பிரதமராக உயர்ந்தவர் இம்ரான்கான் (வயது 69). ஆனால் அந்த நாட்டில் எந்தவொரு பிரதமரும் முழுமையாக 5 ஆண்டு காலம் பதவியில் தொடர்ந்தது இல்லை என்ற வரலாறு, இம்ரான்கானுக்கும் சொந்தமானது. அவருடைய ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினர். இதனால் அந்த நாட்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் … Read more

100-வது நாளை எட்டியது ரஷ்ய தாக்குதல்: உக்ரைனிலிருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 100 நாட்கள் எட்டிய நிலையில், உக்ரைனிலிருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறிவிட்டனர். நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாடு மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தாக்குலை தொடங்கியது. தற்போது இந்த போர் 100 நாட்களை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் சீர்குலைந்து ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் சென்று விட்டது. ரஷ்ய தாக்குதல் தொடங்கியதில் இருந்தே, அந்நாட்டு மக்கள் பாதுகாப்பு தேடி அண்டை … Read more

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.30 உயர்வு.. திடீர் விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தி ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது. நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த விலையேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய விலை உயர்வால் பெட்ரோல் 209.86 பாக். ரூபாய்க்கும், டீசல் 204.15 பாக். ரூபாய்க்கும் விற்கப்படுகிறது Source link