புதரில் இருந்த பையை சிங்கம் என நினைத்து வன அதிகாரிகளுக்கு அழைப்பு… காமெடியான தருணம்

நைரோபி, கென்யாவில் மவுண்ட் கென்யா என்ற தேசிய பூங்காவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கின்யானா கிராமத்தில் பண்ணை ஒன்று உள்ளது.  இதில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவர் வன துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர், தனது முதலாளியின் வீட்டுக்கு வெளியே சிங்கம் ஒன்று புதரில் ஒளிந்துள்ளது என கூறியுள்ளார். அந்த பகுதியில் சிங்கங்கள் அலைவதற்கான சமீபத்திய தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், குடியிருப்புவாசிகள் சிலர் தங்களுடைய கால்நடைகள் காணாமல் … Read more

பாகிஸ்தானில் பனிப்பாறை உருகி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம்.!

பாகிஸ்தானில் பனிப்பாறை உருகி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்தது. ஹன்சா பள்ளத்தாக்கில், 20 நாட்களில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகரித்ததால், பனிமலைகள் உருகி ஷிஸ்பர் ஏரியில் நீர் அளவு 40 சதவீதம் அதிகரித்தது. ஏரி நிரம்பி வழிந்து நீரோடையில் வேகமாக வெளியேறிய தண்ணீர் மோதி ஹசனாபாத் நகரில் உள்ள ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்தது. இதே போல் மேலும் 33 ஏரிகள் எந்நேரம் வேண்டுமானாலும் நிரம்பி வழியும் தருவாயில் உள்ளன. Source link

டுவிட்டர் ஊழியர்கள் அதிகமான பணிச்சுமையை சந்திக்க நேரிடும்- எலான் மஸ்க் எச்சரிக்கை

நியூயார்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம்  செய்தார். அதை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக இவர் தனது … Read more

முன்னறிவிப்பின்றி உக்ரைன் சென்றார் அமெரிக்க அதிபரின் மனைவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: முன்னறிவிப்பின்றி உக்ரைன் பயணம் மேற்கொண்ட அமெரி்க்க அதிபரின் மனைவி ஜில் ஜோபைடன் அங்கு உக்ரைன் அதிபரின் மனைவியை சந்தித்தார். உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த பிப்.,24 ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இரண்டு மாத காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் உலக நாடுகள் மற்றும் நேட்டோ நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது.அமெரிக்க அதிபர் ஜோபைடன் உக்ரைன் நாட்டிற்கு வெளிப்படையாக ஆதரவு தந்து வருவதுடன் தேவையான … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உக்ரைனுக்கு திடீர் பயணம்

கீவ், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 10 வாரங்களை கடந்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக கூறி வருகிறது.  தற்போது உக்ரைனின் கிழக்கு நகரங்களை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.  ரஷியா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு  அமெரிக்கா மற்றும்  மேற்கத்திய நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.  இத்தகைய சூழலில், திடீர் பயணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் படைன், உக்ரைனுக்கு சென்றுள்ளார். … Read more

டிவிட்டரில் டிரம்ப் மறுபிரவேசம் நடக்குமா: இல்லை சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்பாரா டிரம்ப்

மைக்ரோ பிளாகிங் தளமான ட்விட்டர் தனக்கு விதித்தத் தடையை நீக்க வேண்டும் என்ற அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வழக்கை  நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனவே இப்போது டிரம்ப் ட்விட்டருக்கு திரும்புவது கடினமானது ட்விட்டருக்கு திரும்ப விரும்பிய டொனால்ட் டிரம்ப் ட்விட்டருக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்த வழக்கை கலிபோர்னியாவில் உள்ள மாவட்ட நீதிபதி நிராகரித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதியை ட்விட்டர் தளத்தில் தடை செய்வது முற்றிலும் சட்டபூர்வமானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  தற்போது டிவிட்டரை … Read more

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு.. தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடைத்து விறகாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.!

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ஏலம் விடப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடைத்து விறகாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன்ப்பிடித்ததாக இலங்கை அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 135 படகுகள் அண்மையில் ஏலம் விடப்பட்டன. இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில்  எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 4,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழக மீனவர்களின் படகுகளில் இருந்து கட்டைகள் உடைக்கப்பட்டு  விறகாக விற்கப்படுகிறது.  … Read more

உக்ரைனில் பள்ளி மீது தாக்குதல்: 60க்கும் மேற்பட்டோர் பலி!| Dinamalar

கீவ்: உக்ரைனில் மக்கள் தஞ்சம் புகுந்திருந்த பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்தனர். லட்சகணக்கான மக்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர். இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள பிலோகொரிவிகா கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 90 பேர் தஞ்சம் புகுந்திருந்தனர். அங்கு ரஷ்ய விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக … Read more

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை! – நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவியது.

சியோல், வடகொரியா சனிக்கிழமையன்று பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தென் கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட யூன் சுக்-யோல் பதவியேற்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.  நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் கடலில் செலுத்தியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜப்பானும் இது குறித்த தகவலை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் குத்துச்சண்டை போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரராக கருதப்படும் கனேலோ அல்வாரெஸ் அதிர்ச்சி தோல்வி.!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரராக கருதப்படும் கனேலோ அல்வாரெஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 79 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற லைட் ஹெவிவெயிட் போட்டியில் மெக்சிகோவின் கனேலோ அல்வாரெஸ், நடப்பு சாம்பியனான ரஷ்யாவின் டிமிட்ரி பிவோலை, எதிர்த்து விளையாடினார். அல்வாரெஸ் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் தாக்குதல்களை நேர்த்தியாகத் தடுத்த டிமிட்ரி பிவோல், 115 க்கு 113 என்ற புள்ளி கணக்கில் வெற்றி … Read more