பாகிஸ்தான்: ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்து – 5 வீரர்கள் பலி
லாகூர், பாகிஸ்தானின் கில்கித் – பல்திஸ்தான் மாகாணம் டைமர் மாவட்டத்தில் இன்று ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டது. அந்த ஹெகாப்டரில் ராணுவ வீரர்கள் 5 பேர் பயணித்தனர். ஹெலிகாப்டர் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனடியாக ஹெலிகாப்டரை தரையிறக்க விமானி முயற்சித்தார். அப்போது, ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 5 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 1 More update … Read more