ரஷ்ய அதிபர் புடின் 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார்; உளவாளி அதிர்ச்சித் தகவல்

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியானது.  புடினின் பார்வை மங்கி வருவதாகவும், அவர் இன்னும் 3 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியதாக  ரஷ்ய உளவாளி ஒருவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. மேலும் புடினின் கண்பார்வை மங்கி வருவதாகவும், … Read more

காபோன் பிரதமருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு

லிப்ரெவில்லி:  குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு காபோன், செனகல் மற்றும் கத்தார் ஆகிய 3 நாடுகளில் வரும் 7-ம் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதன் முதல்கட்டமாக, டெல்லியில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் காபோன் நாட்டின் லிப்ரெவில்லி நகர விமான நிலையம் சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  காபோன் பிரதமர் ரோஸ் கிறிஸ்டியன் ஒசோகா ரபோண்டா மற்றும் அந்நாட்டின் நிதி மந்திரி மைக்கேல் மௌசா … Read more

ஆசிய ஹாக்கி: இந்தியா – தென் கொரியா போட்டி டிரா

ஜகர்தா: ஆசிய ஹாக்கி ‘சூப்பர் 4’ சுற்றில், தென் கொரியாவுடன் மோதிய இந்திய அணி 4 – 4 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. முதல் போட்டியில் ஜப்பானை வென்ற இந்திய அணி, மலேசியாவுக்கு எதிரான போட்டியில் டிரா செய்த நிலையில், தென் கொரியாவுடனான போட்டியிலும் டிரா செய்துள்ளது. இதனால், ஜப்பான் – மலேசிய அணிகள் இடையிலான மற்றொரு போட்டியின் முடிவை பொறுத்து, இந்திய அணியின் பைனல் வாய்ப்பு அமையும். ஜகர்தா: ஆசிய ஹாக்கி ‘சூப்பர் … Read more

குரங்கு அம்மை நோயும் நிறவெறிச் சாயமும் – கண்டிக்கும் உலக சுகாதார நிறுவனம்

ஐக்கிய நாடுகள்: குரங்கு அம்மை நோய்த் தொற்றை எல்ஜிபிடி சமூகத்தினருடனும், ஆப்பிரிக்க மக்களுடனும் தொடர்புப்படுத்துவது ஏற்புடையதல்ல என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோய் இது. குரங்கு அம்மை வைரஸ் என்பது Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை DNA வைரஸ். குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. இருப்பினும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களை உபயோகிப்பதன் … Read more

தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த சீனாவின் 30 போர் விமானங்கள்..

தைவான் நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீனாவின் 30 போர் விமானங்கள் நுழைந்துள்ளன. அந்நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் இந்த ஆண்டு சீனா தனது இரண்டாவது பெரிய ஊடுருவலை நிகழ்த்தியுள்ளது. நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள் உள்ளிட்டவை ஊடுருவலில் பங்கேற்றதாகவும், சீன போர் விமானங்களை எச்சரித்துத் தடுப்பதற்காக தங்கள் போர் விமானங்களை அனுப்பியதாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Source link

ஈராக் நாட்டில் மூக்கில் இருந்து ரத்தம் வடியச் செய்யும் காய்ச்சல் பரவல் – மக்கள் அச்சம்

ஈராக் நாட்டில், மூக்கில் இருந்து ரத்தம் வடியச் செய்யும் புதுவித காய்ச்சலுக்கு பலர் உயிரிழப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் கிராமப்புறங்களில் வேகமாக பரவி வரும் இந்த காய்ச்சல், கிரிமியன் – காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்றழைக்கப்படுகிறது. சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்ட காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருவதாகவும், பாதிக்கப்பட்ட 111 பேரில் 19 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூக்கின் வழியாக அதிகளவு ரத்தக்கசிவை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும், இந்த காய்ச்சலால் பாதிக்கப்படும் … Read more

துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் முடக்கம்: பிரதமர் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலியாக, கைத் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் முடக்கம் செய்யப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்து உள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா். உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப் பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். … Read more

நெதர்லாந்துக்கு கேஸ் விநியோகம் நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு

நெதர்லாந்துக்கு வழங்கிவந்த கேஸ் விநியோகத்தை ரஷ்யா இன்றுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. நெதர்லாந்தின் எரிசக்தி நிறுவனமான GasTerra கேஸ் விலையை ரஷ்ய நாணயமான ரூபிளில் செலுத்த மறுத்ததால் எரிவாயு வினியோகத்தை ரஷ்யா நிறுத்துகிறது. ஏப்ரல் மாதத்திற்கான பணத்தை இன்றுவரை GasTerra வழங்கவில்லை என்று தெரிவித்துள்ள ரஷ்யாவின் Gazprom நிறுவனம், இன்று முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள கேஸ் விநியோகத்தை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.  Source link

'3 ஆண்டுகள் மட்டுமே புடின் உயிருடன் இருப்பார்' – உளவுத்துறை ஷாக்!

புற்றுநோய் முற்றி விட்டதால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வாழலாம் என்று மருத்துவர்கள் கணித்துள்ளதாக உளவாளி கூறிய தகவல் ஊடகங்களில் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன. இதுவரை எதையுமே ரஷ்ய அரசு தரப்பு உறுதி செய்யவில்லை. அண்மையில் அவருக்கு ரத்தப் புற்றுநோய் முற்றி விட்டதால் அறுவை சிகிச்சை செய்யப் போகிறார். அதனால், அவர் தனது அதிகாரங்களை தற்காலிகமாக பாதுகாப்பு கவுன்சிலில் … Read more

போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவு தினம்.. மரக்கன்று நட்டு துக்கம் அனுசரித்த அதிபர் ஜோ பைடன்..!

அமெரிக்காவில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர். பைடன் உட்பட அனைவரும் மண்வெட்டியால் மண்ணை வாரி குழியில் போட்டு மங்கோலியா மரக்கன்றை நட்டுவைத்த பின்னர், கைகளை கோர்த்து நின்று பிரார்த்தனை செய்தனர். முன்னதாக ஆர்லிங்டனில் உள்ள வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பைடன் அஞ்சலி … Read more